புதன் சுக்கிரன் சேர்க்கை : 4 ராசிக்காரர்கள் சொத்து, பணம் சேர்க்க இதுவே நல்ல நேரம்
Pudhan Peyarchi | புதன் பெயர்ச்சி நடைபெறும் இந்த நேரத்தில் மேஷம், மிதுனம் உள்ளிட்ட 4 ராசிக்கார்களுக்கு செல்வந்தர் ஆகும் யோகம் கூடி வந்துள்ளது.
Pudhan Peyarchi News Tamil | தீபாவளிக்கு முன் நடக்கும் புதன் பெயர்ச்சி பல ராசிகளுக்கு யோகத்தை கொடுக்கப்போகிறது. இம்முறை புதனும் சுக்கிரனும் சேரும்போது, மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசிக்காரர்களுக்கு அமோக பலன்கள் கிடைக்கப்போகிறது. ஜோதிடத்தின்படி சில ராசிகளுக்கு குறிப்பிட்ட நேரம் தான் நல்ல காலமாக இருக்கும். அந்தநேரத்தில் செல்வத்தை சேர்த்துவைத்துவிட்டால் அடுத்தடுத்து வரும் எப்பேர்பட்ட பிரச்சனைகளையும் சமாளித்துவிடலாம். அப்படியான யோகம் புதன் - சுக்கிரன் சேர்க்கையால் நான்கு ராசிகளுக்கு கிடைக்கிறது. அதுவும் வரும் தீபாவளிக்கு முன்பாக நடைபெறும் புதன் பெயர்ச்சி மூலம் இந்த யோகம் அவர்களுக்கு கிடைக்கப்போகிறது.
புதன் பெயர்ச்சி எப்போது?
அக்டோபர் 29 ஆம் தேதி புதன் பெயர்ச்சி நடக்கிறது. விருச்சிக ராசிக்குள் புதன் கிரகம் நுழைய இருக்கிறார். சுகங்களையும், ஆடம்பரங்களையும் தருபவரான சுக்கிரன் ஏற்கனவே இந்த ராசியில் இருக்கிறார். புதன் பெயர்ச்சியாக விருச்சிக ராசிக்குள் வந்ததும், பிறகு இரண்டு கிரகங்களும் சேர்ந்து லக்ஷ்மி நாராயண யோகத்தை உண்டாக்கும். இந்த இரு கிரகங்களின் சேர்க்கை 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களை கொடுக்கப்போகிறது. அவை எந்த ராசிகள்?, என்னென்ன பலன்கள் கிடைக்கப்போகிறது? என்பதை பார்க்கலாம்.
1. மேஷம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு லக்ஷ்மி நாராயண யோகம் மிகவும் சிறப்பாக அமையப் போகிறது. இந்த ராசிக்காரர்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தடங்கல் ஏற்பட்டு நிலுவையில் உள்ள பணிகள் எல்லாம் இனி முடிவடையும். சமூகத்தில் மிகுந்த மரியாதையையும் பெறுவீர்கள். உங்கள் பணம் எங்காவது சிக்கியிருந்தால், அதை நீங்கள் திரும்பப் பெறலாம்.
2. மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் அதிக லாபம் ஈட்டலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வைக் காணலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்பும் உண்டு. திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். குடும்ப உறவுகள் வலுவடையும்.
3. கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் மிகவும் சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அதைத் தீர்க்க முடியும். இது தவிர, வேலை தேடுபவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வெளியூர் பயணம் செல்லவும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள்.
4. மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளும் இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வும் கூடும். உங்கள் பணியை கருத்தில் கொண்டு உங்கள் மேலதிகாரி உங்களுக்கு புதிய பொறுப்புகளை வழங்கலாம். சக ஊழியர்களின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
விருச்சிக ராசிக்கு என்ன பலன்?
புதன் - சுக்கிரன் இருவரும் உங்கள் ராசியில் இருப்பதால் நல்ல யோகமான காலம் தான். ஆனால், உங்கள் ஜாதகத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இருக்கும் இருப்பிடங்களைப் பொறுத்து அதன் பலன்கள் மாறுபடலாம். மறைவு ஸ்தானம் என்றால் எதிர்மறை பலன்களும், நேர்மறை ஸ்தானம் என்றால் அபரிமிதமான பலன்களும் கிடைக்கும். பொதுவான பலன்கள் என்றால் இரு கிரகங்களின் சேர்க்கை நல்ல காலம் என்றாலும், தனிப்பட்ட ஒருவரின் ஜாதகத்தின் அடிப்படையிலேயே உங்களுக்கான பலன்கள் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ