சனி வக்ர நிவர்த்தி: தீபாவளிக்கு பின் இந்த ராசிகளுக்கு அமோகமான நேரம்... பணமழை பொழியும்

Sani Peyarchi Palangal: ஜோதிட சாஸ்திரத்தில் சனி பகவான் சக்திவாய்ந்த கிரகமாக கருதப்படுகிறார். சனி பெயர்ச்சி உட்பட அவரது ஒவ்வொரு சிறிய அசைவும் மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.

Sani Vakra Nivarthi Palangal: சனி பலவான் மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப பலன்ககளை அளிப்பதால் அவர் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனி பகவான் ஜூன் 30, 2024 அன்று வக்ர பெயர்ச்சி அடைந்தார். நவம்பர் 15 ஆம் தேதி தீபாவளிக்கு பின்னர் சனிபகவான் வக்ர நிவர்த்தி அடையுள்ளார். சனி வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இதனால் அமோகமான நற்பலன்கள் கிடைக்கும். இவர்களது வாழ்வில் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

 

1 /10

ஜோதிட கணக்கீடுகளின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவை கிரகப் பெயர்ச்சிகள் என்று அழைக்கப்படுகின்றன. ராசிகள் தவிர நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர பெயர்ச்சி, வக்ர நிவர்த்தி என கிரகங்களில் பலவிதம் மாற்றங்கள் ஏற்படுகின்றன.  

2 /10

கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான் தற்போது வக்ர நிலையில் உள்ளார். தீபாவளி முடிந்து சில நாட்களுக்குப் பிறகு அதாவது நவம்பர் 15ஆம் தேதி அவர் வக்ர நிவர்த்தி அடைய உள்ளார். இது மிகப்பெரிய ஜோதிட நிகழ்வாக பார்க்கப்படுகின்றது.  

3 /10

சனி வக்கிர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகமான நற்பலன்கள் இருக்கும். இவர்கள் வாழ்வில் ஆக்கபூர்வமான திருப்பங்கள் ஏற்படும். மகிழ்ச்சி அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.  

4 /10

கடகம்: சனி வக்ர நிவர்த்தியின் தாக்கத்தால் கடக ராசிக்காரர்களின் வாழ்வில் பொறுமை, ஒழுக்கம், அமைதி போன்ற நற்குணங்கள் மேலோங்கி இருக்கும். இலக்குகளை அடைவதை நோக்கி முழு முனைப்புடன் முயற்சி செய்து அவற்றில் வெற்றி பெறுவீர்கள். வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்திலும் சமூகத்திலும் உறவுகளுக்கு இடையிலும் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும்.  

5 /10

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனி வக்ர நிவர்த்தி தன்னம்பிக்கையை அதிகரிக்கும். அனைத்து பணிகளையும் முழு ஈடுபாட்டுடன் செய்வீர்கள். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதில் வெற்றி பெறுவீர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியான பொழுதை செலவழிப்பீர்கள்.

6 /10

மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு சனி வக்கிர நிவர்த்தி சுப பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபம் பன்மடங்காக உயரும். மாத வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கணவன் மனைவியிடையேயான உறவு மேம்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.

7 /10

கும்பம்: சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் லாபமும் விருத்தியும் இருக்கும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் வெற்றி பெறுவார்கள். வாழ்வில் அமைதியும், மகிழ்ச்சியும். ஆரோக்கியம் மேம்படும்.  

8 /10

மீனம்: மீன ராசிக்காரர்கள் ஒழுக்கமான வாழ்க்கை வாழ்வார்கள். கடினமாக உழைத்து இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவார்கள். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வுடன் இடமாற்றம் கிடைக்கும். வியாபாரம் விரிவடைந்து லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.  

9 /10

சனி பகவானின் அருள் பெற சனி சாலிசா, ஹனுமான் சாலிசா, கோளாறு பதிகம் ஆகியவற்றை பாராயணம் செய்யலாம். சனிக்கிழமைகளில் பிள்ளையார், முருகர், சிவன், துர்கை, சனீஸ்வரர் ஆகிய கோயில்களுக்கு சென்று வழிபடுவது நல்லது. ஏழைகளுக்கு உணவளிப்பது சனிபகவானை மகிழ்விக்கும்.  

10 /10

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.