ராகு தோஷம்: திருமண வாழ்க்கையில் ராகு கிரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. கிரக நிலையின் அடிப்படையில், கல்யாணம் மற்றும் திருமண வாழ்க்கையை துல்லியமாக கணிக்கலாம். திருமணம் என்பது மனித வாழ்வின் இன்றியமையாத பகுதியாகும், திருமணத் தடைகள், தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை ஆகியவற்றைப் போக்க ராகு தோஷத்தை நிவர்த்தி செய்தால் நிம்மதியாக வாழலாம். பொதுவாக, ஒருவரின் ஜாதகத்தின், 7வது வீடு என்பது திருமணம், கணவன்-மனைவி இடையேயான உறவு, மகிழ்ச்சி, புரிதல், பிரிதல் அல்லது விவாகரத்து ஆகியவற்றைக் குறிக்கிறது. ஜனன ஜாதகத்தில் 7வது வீட்டில் ராகு இருந்தால், அது பாதகமாகவும், அசுபமாகவும் நம்பப்படுகிறது. இது எதிர்மறையான விளைவுகளையும் ஏற்படுத்தும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராகு ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் இடத்தில் இருந்தால், ​​வாழ்க்கையில் தடைகள், கஷ்டங்கள், திருமணத்திற்கு வரன் அமையாமல் தட்டிப் போவது என பல சிக்கல்கள் ஏற்படலாம். மற்ற கிரகங்கள் அனுகூலமாக இருந்தாலும், ராகுவின் பாதகமான பலனைக் குறைக்க முடியாது. 


ராகுவின் முக்கியத்துவம்
திருமணத்தில் ராகு தோஷ விளைவுகள் ஒருவரின் திருமண வாழ்க்கையில் பாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பலருடன் காதல் ஏற்படுத்தி, அதை விவகாரமாகவும் மாற்றும். திருமண மரபுக்கு எதிராக செயல்படும் கிரகம் ராகு.


மேலும் படிக்க | பெயர்ச்சியாகும் புதன் மற்றும் சுக்கிரனால் அடித்தது யோகம்: 4 ராசிகளுக்கு அற்புதம்


ராகு தோஷம் இருந்தால், காதல் திருமணங்கள் நடைபெறும். இது ஒருவரின் திருமணத்தை, ஒரு சிலரின் விருப்பத்திற்கு மாறாக தீர்மானிக்கும் காரணியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரின் ஜாதகத்தில் சனி, ராகு மற்றும் செவ்வாய் கிரகங்கள் திருமணத்தை தீர்மானிக்கின்றான. ஏழாம் வீட்டுடன் ராகு தொடர்பு கொள்ளும்போது, ​​​​அது பெற்றோர் மற்றும் குடும்பத்தினரின் விருப்பத்திற்கு எதிரான திருமணம் என்ற நிலையைக் காட்டும்.


திருமணத் தடை மட்டுமல்ல தொழில் ரீதியிலும் தடைகள் ஏற்படும். ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் ராகு இருப்பவர்களுக்கு மின் சாதனங்கள் தொடர்பான வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும். ஏழாம் இடத்தில் ராகு இருப்பது உடல் நலத்தை மோசமாக பாதிக்கும்.


லக்னத்திலிருந்து 7 ஆம் இடத்தில் இருக்கும் ராகுவின் பலன்கள்
ஒருவரின் ஜனன ஜாதகத்தில் 7 வது வீடு என்பது, போர், மோதல் மற்றும் ஆதிக்கம் ஆகியவற்றைக் குறிக்கிறது. ராகு 7ஆம் வீட்டில் அமர்வதால், எதிரிகளை எதிர்கொள்ளும் அளவுக்கு அந்த நபர் தைரியமாக இருக்க மாட்டார். கோழைத்தனத்தைக் கொடுக்கும் ராகு, நெறிமுறையற்ற வழிகள் மூலம் எதிரிகளைக் கையாளுவார்கள்.


மேலும் படிக்க | வார ராசிபலன்: மிதுனம், தனுசு எச்சரிக்கை! சிம்மத்திற்கு சிறப்பு


7 ஆம் வீட்டில் ராகு இருப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. பாலியல் செயல்பாடுகள் தொடர்பான சில மறைக்கப்பட்ட விஷயங்கள் அல்லது ரகசியங்கள் அவர்களிடம் இருக்கும். அது மோசமாக மாறும் வரை அது வெளிப்படாது.


7-ம் இடத்தில் ராகு இருக்கும் ஒரு நபர், குறுகிய மனப்பான்மை கொண்டவராகவும், சோம்பேறியாகவும், மன அழுத்த சூழ்நிலையை கையாள விரும்பாதவராகவும் இருப்பார், மேலும் அவர்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் எப்போதும் சிரமங்களை சந்திப்பார்கள். கல்வியிலும் அவர்களுக்கு இடையூறுகள் உள்ளன.


7 ஆம் இடமான ராகு, மூன்றாம் இடத்தையும் பாதிக்கும், அதனால், அண்டை வீட்டாருடன் அவர்களது உறவு நன்றாக இருக்காது.


மேலும் படிக்க | சனி மகாதசை ஏழரை சனியின் பாதிப்பு யாருக்கு? சனீஸ்வரரை சாந்தப்படுத்தும் பரிகாரங்கள் 


ராகு தோஷத்திற்கு வேத ஜோதிட பரிகாரங்கள்
ராகு தோஷம் உள்ளவர்கள் அடர் நீல நிற ஆடைகளை அணிந்தால் தோஷத்தின் பாதிப்பு அதிகம் இருக்காது. நாய்களுக்கு உணவளிப்பது நல்ல பலன்களை தரும், தீய பலன்களை குறைத்துக் கொடுக்கும். வீட்டின் தென்மேற்கு மூலையில் தண்ணீரை சேமித்து வைப்பதும் ராகு கிரகத்தின் தாக்கத்தை குறைக்கிறது.


வாழ்க்கைத் துணைக்கு தாமிரத்தில் பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். அதேபோல, குளிக்கும் நீரில் ஒரு கப் பாலை சேர்த்து 43 நாட்கள் குளித்தால் ராகுவின் தோஷத்திற்கு பரிகாரமாக இருக்கும். அசுப பலன்கள் குறையும். 


பறவைகளுக்கு உணவளிப்பது மற்றும் வீட்டில் மயில் இறகுகளை வைத்திருப்பது ராகுவின் தீய விளைவுகளை குறைக்க உதவுகிறது. அதேபோல, ராகுவை திருப்தி படுத்த விரும்புபவர்கள், ராகு காலத்தில் துர்க்கையை வணங்க வேண்டும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் வக்ர நிவர்த்தியும் செவ்வாயின் வக்ர கதியும் இந்த 4 ராசிகளுக்கு அருமை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ