Rahu Mercury Conjunction In Pisces: மீன ராசியில் ஏற்பட இருக்கும் புதன் பெயர்ச்சி காரணமாக, நிழல் கிரகமாக கருதப்படும் ராகு உடன், புதபகவான் இணையும். புதனும் ராகுவும் இணைந்து ஏற்படும் ஜடத்வ யோகம், சில ராசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் ஜோதிடர்கள். இதனால் சில ராசிகளுக்கு, நிதி இழப்பு ஏற்படும் என்றும், உடல்நல பாதிப்பு மற்றும் பிற கஷ்டங்களும் அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு புதன் சேர்க்கையால் பாதிக்கப்படப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம். நுண்ணறிவு படிப்பு, திறமை ஆகியவற்றை அள்ளி வழங்கும் புதன் மார்ச் மாதம் ஏழாம் தேதி பெயற்ச்சி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மிதுன ராசி (Gemini Zodiac Sign)


புதன் மற்றும் ராகுவின் சேர்க்கை மிதுன ராசிகளுக்கு சாதகமாக இல்லை. மிதுன ராசிக்கு அதிபதி புதன். எனவே மிதுன ராசியினர் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் பெரிய அளவில் ஏற்படும். பணியிடத்தில் கவனம் தேவை. கவனக்குறைவின் காரணமாக, மேலதிகாரியின் அதிருப்தியை சந்திக்க நேரிடலாம். முக்கிய முடிவுகள் எதையும் எடுக்கும் முன் தீர ஆலோசனை செய்து கொள்ளவும். அதிலும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் மிகுந்த எச்சரிக்கை தேவை. மன உளைச்சல் அதிகமாக இருக்கும். இதனால் யோகா போன்ற பயிற்சிகளை விடாமல் தொடர்வது நல்லது.


சிம்ம ராசி (Leo Zodiac Sign)


சிம்ம ராசிகளுக்கு புதன் ராகு சேர்க்கை, கெடு பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும். நிதி இழப்பு காரணமாக, பொருளாதார நிலை பாதிக்கப்படும் நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களில் யாருக்காவது, உடல் நல பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.. வாகனம் ஒட்டும் போது கவனம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களால், பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இதனால், வேலை இழக்கும் நிலைக்கு கூட செல்லலாம். எனவே உங்கள் வேலையில் மிகவும் கவனமாக இருக்கவும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாமல், எந்த வேலையும் செய்வதற்கு முன்பாக, சிந்தித்து செயல்படவும். நலம் விரும்பிகளாக உள்ள சீனியர்களின் அறிவுரையையும் ஆலோசனையையும் புறக்கணிக்க வேண்டாம்.


மேலும் படிக்க | Maha Shivratri Puja: அபிஷேகம் எப்படி எத்தனை நேரம் செய்யலாம்? எந்த திருமஞ்சனத்தால் கடவுளின் மனம் குளிரும்?


கன்னி ராசி (Virgo Zodiac Sign)


கன்னி ராசியினருக்கு புதன் ராகு சேர்க்கை கெடு பலன்களை கொடுக்கக் கூடியது. கன்னி ராசிக்கு அதிபதி புதன் என்றாலும், புதன் பயிற்சி காரணமாக ஜாதகத்தில் ஏழாம் வீட்டில் புதன் கிரகம் வலுவிழந்து காணப்படும். இந்த நிலையில் ராகு கிரகத்துடன் இணைவதால், குடும்பத்தில் அமைதியின்மை இருக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு அதிகரிக்கலாம். எனவே பொறுமை காப்பது நல்லது. பணியிடத்தில் சவால்களை சந்திக்க நேரிடலாம். ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். எதிர்பாராத செலவுகளால் மன உளைச்சல் அதிகரிக்கும். முடிந்த அளவு கடன் வாங்குவதை தவிர்க்கவும். இல்லையென்றால் கடன் சுமை தேவையில்லாமல் அதிகரிக்கும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | Vijaya Ekadashi: விஜய ஏகாதசி 2024... மகாவிஷ்ணுவின் அருளை பரிபூரணமாக பெற... செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ