Rahu Transit: இன்னும் 40 நாட்களில் ராகு பெயர்ச்சி! யாருக்கெல்லாம் கஷ்டம் தருவார் ராகு?
Rahu Transit 2024 Bad Effects: நிழல் கிரகங்களாக இருந்தாலும் நல்லது செய்யும் ராகு, சில ராசிக்காரர்களுக்கு மார்ச் 14க்குப் பிறகு தொல்லை கொடுக்கும் அரவமாக மாறப்போகிறார்.
Rahu - Sun Conjunction: எப்போதுமே பிற்போக்காக இயங்கும் நிழல்கிரகங்களில் ஒன்றான ராகு, இன்னும் சில வாரங்களில் ராசி மாறப்போகிறார். இந்தப் பெயர்ச்சியின்போது, சூரியனும் ராகுவும் ஒன்றிணையும் சந்தர்ப்பம் வருகிறது. இது சில ராசிகளுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஜோதிட நிபுணர்கள் கணித்துள்ளனர்.
மார்ச் மாத சூரியப் பெயர்ச்சியால் ஏற்படும் ராகு-சூரியன் இணைப்பு
தற்போது மீன ராசியில் ராகு இருக்கும் நிலையில், மார்ச் மாதம் 14ஆம் தேதி மீன ராசியில் சூரியப் பெயர்ச்சி நடைபெறம் நிலையில், இரண்டு கிரகங்களும் ஒரே வீட்டில் இருப்பதால் ஏற்படும் தாக்கங்களால் சில ராசிகளுக்குக் கொண்டாட்டம் என்றால், சில ராசிகளுக்குத் திண்டாட்டம்.
ஆனால், யாருக்கு என்ன பலன் என்பதைத் தெரிந்துக் கொண்டால், கவனமாக இருக்கலாம். மார்ச் மாத சூரியப் பெயர்ச்சியால் ஏற்படும் இந்த இணைவினால் பாதிக்கப்படும் ராசிகள் இவை...
மார்ச் மாத சூரியப் பெயர்ச்சியால் ஏற்படும் ராகு-சூரியன் இணைப்பு மோசமான விளைவுகள்
மேஷம்
உங்கள் ராசிக்கு பன்னிரண்டாம் வீட்டில் ராகு இருப்பதால் 2024 ஆம் ஆண்டில் ராகுவும் சூரியனும் ஒரே வீட்டிற்குள் இருக்கும்போது, கடுமையான தலைவலி, கவலை, பாதுகாப்பற்ற மனோபாவம், மனதில் பலவீனம், தூக்கமின்மை போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளை உங்களுக்கு ஏற்படலாம்.
மிதுனம்
மார்ச் 14க்கு பிறகு, செலவுகள் அதிகரிக்கலாம், பண வரத்தும் குறைவாக இருக்கும். எனவே, செலவுகள் அதிகரிக்கும்போது, பல்வேறு மன சஞ்சலங்களும் ஏற்படும், அதே நேரத்தில் குடும்ப பொறுப்புகள் அதிகரிப்பதாலும் சில பிரச்சனைகள் ஏற்படலாம்.
சிம்மம்
கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். போராட்டங்களை நீங்கள் தொடர வேண்டியிருக்கலாம், செலவினங்கள் அதிகரிக்கும் நிலை இருப்பதால், கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் கண்கள் மற்றும் பற்களை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
ராகுவுடன் சூரியன் சேரும்போது, உங்கள் மனதில் ஊக வணிகம் தொடர்பான ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலத்தைப் பற்றி கவலைகள் அதிகரிக்கும். இது குழப்பத்தையும் உடல்நலப் பிரச்சினைகளையும் உருவாக்கலாம். 2024-ம் ஆண்டு ராகு சஞ்சாரத்தின் போது தெளிவாக சிந்தித்து செயல்படவும்.
தனுசு
ராகுவுடன் சேரும் சூரியன், உங்களுக்கு ஒவ்வாமை போன்ற சில உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். குடும்பத்தில் சொத்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம், குடும்ப உறுப்பினர்களுடனான உறவுகளில் விரிசல் ஏற்படலாம். எனவே கவனமாக இருக்கவும்.
கும்பம்
குடும்பத்தில் வாக்குவாதங்கள் அதிகரிப்பதால், மன அமைதி குரையும். செலவுகள் அதிகரிப்பதால், கடன் வாங்க நேரிடலம். சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்னதாக, ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து செயல்படவும்.
மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ