Astro: விருத்தியோகம்... பலன் பெறப் போகும் ராசிகளும் சில பரிகாரங்களும்!

Astro: பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியில், விருத்தி யோகம், ஸ்ரீ லட்சுமி நாராயண யோகம் மற்றும் விசாக நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணையும் நிலையில் இந்த சுபயோகத்தால் ஐந்து ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 2, 2024, 09:29 PM IST
Astro: விருத்தியோகம்... பலன் பெறப் போகும் ராசிகளும் சில பரிகாரங்களும்! title=

விருத்தியோக பலன்கள்:  சனிக்கிழமை, பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதியில், விருத்தி யோகம், ஸ்ரீ லட்சுமி நாராயண யோகம் மற்றும் விசாக நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணையும் நிலையில் இந்த சுபயோகத்தால் ஐந்து ராசிகள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பார்கள். வருமானம் பெருகி வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும்.

மேஷ ராசிக்கான பலன்கள்

மேஷ ராசிக்கு பிப்ரவரி 3ஆம் தேதி வாழ்க்கையில் முன்னேற்றமும் மாற்றமும் நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் திட்டம் அனைத்தும் வெற்றி பெறும். திருமணமானவர்கள் வாழ்வில் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். சனிபகவானின் அருளால் வேலையில் முன்னேற்றம் இருக்கும். வேலை வாய்ப்பு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மொத்தத்தில் சிறப்பான நாளாக இருக்கும்.

பரிகாரங்கள்: மன அமைதியும் சந்தோஷமும் நீடிக்க சனிக்கிழமை சனிக்கிழமை தோறும் எறும்புகளுக்கு உணவளிக்கவும். ஏழு எளியவர்களுக்கு உங்களால் முடிந்த தானம் செய்யவும்.

மிதுன ராசிக்கான பலன்கள்

மிதுன ராசிக்காரர்களுக்கு வெள்ளிக்கிழமை பிப்ரவரி மூன்றாம் தேதி ஆச்சரியங்களை கொடுக்கும் நாளாக இருக்கும். மனைவியுடன் பயணம் மேற்கொள்ளலாம். இதனால் மன அமைதி கிடைக்கும் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். சமூக பணிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அற பணிகளுக்காக பணத்தை செலவிடுவீர்கள். வருமானம் பெருகும். சனி தேவரின் அருளால் முதலீடு செய்ய திட்டமிடுவீர்கள். முதலீடு மூலம் வருமானமும் பெருகும். குடும்ப உறுப்பினர்களுக்கு சில பரிசுகள் வாங்கலாம்.

பரிகாரங்கள்: வாழ்க்கையில் என்றென்றும் வெற்றிகளை பெற காலையும் மாலையும் சனி பகவானின் மந்திரமான 'ஓம் ஐம் ஹ்லீம் ஶ்ரீஷனேஶ்சராய நம' என்ற மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

மேலும் படிக்க | 18 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சூரியன்- ராகு... ‘இந்த’ ராசிகளுக்கு ஜாக்பாட்!

கன்னி ராசிக்கான பலன்கள்

ராசிகளுக்கு பிப்ரவரி மூன்றாம் தேதி சனி பகவானின் அருளால் அதிர்ஷ்ட மிகுந்த நாளாக இருக்கும். திலீபவர்கள் பணிகளை குறித்த நேரத்தில் நிறைவு செய்து மேலதிகாரியின் பாராட்டை பெறுவார்கள். பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். இதுவரை கைக்கு வராத பணம், கிடைத்து மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.

பரிகாரங்கள்: சனி பகவானின் அருளைப் பெற சனி மந்திரத்தை ஜெபிக்கவும். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அளவு தான தர்மங்கள் செய்யவும்.

மகர ராசிக்கான பலன்கள்

மகர ராசிக்கு பிப்ரவரி 3ஆம் தேதி நற்பலன்களை கொடுக்கும் நாளாக இருக்கும். வாழ்க்கையில் சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வந்து மனதில் நிம்மதி உணர்வு ஏற்படும். பணம் தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். சனி தேவனின் அருளால் வெற்றி பெறும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு உடல் நலலின் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும்.

பரிகாரங்கள்: சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கவும். பறவைகளுக்கும் எறும்புகளுக்கும் உணவளிக்கவும்.

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | Feb 5-11 Horoscope: நாளும் கோளும் சொல்லும் அறிகுறிகளை புரிந்துக் கொண்டால் வெற்றி உங்களுக்கே!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News