ஜோதிடத்தின்படி, கிரகப் பெயர்ச்சி காரணமாக அவ்வப்போது சுப மற்றும் அசுப யோகங்கள் உருவாகின்றன. 2023 ஜனவரியில் நடக்கும் கிரகப் பெயர்ச்சி மிகவும் மங்களகரமான ராஜயோகத்தை உருவாக்குகிறது. சூரியன், சனி, சுக்கிரன் மற்றும் புதன் ஆகியவை ஜனவரியில் ராசி மாறியுள்ளன. கும்ப ராசியில் சனியும் சுக்கிரனும் இணைந்துள்ளனர். சுப கிரக நிலைகளால் ஒரே நேரத்தில் 4 ராஜயோகங்கள் உருவாகும் நிலை 20 ஆண்டுகளுக்கு பிறகு நடந்துள்ளது. சத்கீர்த்தி, ஹர்ஷ, பாரதி மற்றும் வரிஷ்ட ஆகிய யோகங்கள் ஒன்றாக அமைவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக இந்த ராஜயோகம் 3 ராசிக்காரர்களுக்கு மிகுந்த முன்னேற்றத்தையும், சிறப்பான பலன்களையும் தரப்போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராஜயோகம் ‘இந்த’ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்கும்


ரிஷபம்: 


ரிஷபம் ராசிக்காரர்களுக்கு 4 ராஜயோகங்கள் அமைவது பல நன்மைகளைத் தரும். இவர்களுக்கு திடீரென பணம் கிடைக்கும். இவர்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். திருமணம் ஆகாதவர்கள் துணையை பெறலாம். புதிய வேலை கிடைக்கலாம். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பணியிடத்தில் நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். இது உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். படிப்படியாக முன்னேறுவீர்கள். திருமணம் கை கூடி வரும்.


மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!


துலாம்: 


4 கிரகப் பெயர்ச்சியால் உருவாகும் ராஜயோகங்கள் துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் பொன்னான நாட்களைத் தொடங்கும். நீண்ட நாட்களாக நிறைவேறாத விருப்பங்கள் நிறைவேறும். கும்ப ராசியில் சனி சஞ்சரிப்பதால், துலாம் ராசியின், தடைபட்ட வேலைகள் மீண்டும் தொடங்கும். இவர்கள் வியாபாரத்தில் வேகம் பெறுவார்கள். உத்தியோகத்தில் லாபம் உண்டாகும். பண வரவும் சாதகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதை மகிழ்விக்கும் வகையில் நல்ல செய்திகள் கிடைக்கும். காதல் துணை மற்றும் வாழ்க்கை துணையுடன் சிறந்த வகையில் நேரம் செலவிடப்படும்.


தனுசு: 


தனுசு ராசிக்காரர்களுக்கு 4  ராஜயோகம் உருவாகி வரும் நிலை மிகுந்த பலனைக் கொடுக்கும். இவர்களும் ஏழரை நாட்டு சனியின் பிடியில் இருந்து விடுதலை பெற்றுள்ளனர். எனவே, அவர்களின் தடைபட்ட பணி இனி தொடங்கும். மனதின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். இதனுடன் திடீர் பண ஆதாயமும் உண்டாகும். புதிய வீடு, வாகனம் வாங்கலாம். எடுத்த செயல்களில் வெற்றி உண்டாகும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பெரிய பதவியைப் பெறலாம். மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்! 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ