இன்றைய ராசிபலன்! இந்த 4 ராசிக்கார்கள் ஜாக்கிரதை!
மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு என்னென்ன நன்மை நடக்கப்போகிறது, எதில் கவனமாக இருக்க வேண்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேஷம்
நல்ல மனிதர் ஒருவரால் உங்களுக்கு ஒரு நல்ல முதலீடு கிடைக்கும், ஆனால் பணத்தை முதலீடு செய்வதற்கு முன் உங்கள் சூழ்நிலையை சரிபார்த்து கொள்ளுங்கள். வழக்கமான சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தில் பலனடைவீர்கள். ஃப்ரீலான்ஸர்கள் அல்லது எழுத்தாளர்களுக்கு ஒரு சிறந்த காலமாக இருக்கும். உங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியுடனுடம், சிறந்தவர்களாகவும் காணப்படுவார்கள். உங்களின் ரியல் எஸ்டேட் முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரத் தொடங்கும், நேரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
ரிஷபம்
தொழில் முயற்சியில் வெற்றி கிடைக்கும், பொருளாதார நிலை நன்றாக இருக்கும். உடல்நலம் கொஞ்சம் குன்றியதாக தோன்றினாலும் உடனே மருத்துவரிடம் சென்று பரிசோதித்து கொள்ளுங்கள். ஒரு குடும்ப உறுப்பினரால் உங்களுக்கு கவலை ஏற்பட வாய்ப்புள்ளது ஆனால் மற்ற உறுப்பினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். பொதுப் போக்குவரத்தில் செல்பவர்கள் தங்கள் உடைமைகளில் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்துப் பிரச்சினை உங்களுக்கு சாதகமாக அமையும், முன்னர் சாதிக்க முடியாத விஷயம் ஒன்றை நீங்கள் இப்போது சாதிப்பீர்கள்.
மேலும் படிக்க | மார்ச் மாதம் சனி உதயம், இந்த ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கன்ஃபார்ம்
மிதுனம்
நீங்கள் எதிர்காலத்திற்காக சேமிக்க விரும்பினால், ஆவசரப்படாதீர்கள் பொறுமையாக இருங்கள். உங்கள் வழக்கமான வேலைகளை செய்வது உங்களுக்கு ஆரோக்கியத்தை தரும். நீங்கள் வணிகத்தில் செய்யும் முயற்சியால் உங்களுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் குடுமபத்தில் உள்ளவர்களுக்கு வீட்டு வேலைகளில் பயிற்சி அளிக்க இதுவே சரியான நேரம் மற்றும் நீங்கள் நண்பர்களுடன் பயணம் செய்து மகிழ்ச்சி அடையாளம். சொத்து சம்பந்தமான விஷயங்களில் அவசரம் வேண்டாம்.
கடகம்
வணிகம் குறித்து யாரோ ஒருவர் கூறிய கருத்துக்கள் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும், ஆனால் அதை நீங்கள் முழுமையா சோதிக்க வேண்டும். இப்போது நீங்கள் வீண் செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிப்பதை இலக்காக வைத்து கொள்வீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இப்போது உங்களுக்கு எந்த உடல்நல பிரச்னையும் ஏற்படாது. வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்கள் விசா தொடர்பான சிரமங்களை சந்திக்க நேரிடும். சொத்துப் பிரச்சினை உங்களுக்குச் சாதகமாகத் தீர்க்கப்படும்.
சிம்மம்
தொழில் ரீதியாக நீங்கள் செல்லும் பயணம் உங்களுக்கு சிறந்த வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும், பொருளாதார விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் இறுக்கமாக உள்ளீர்கள். உணவுக் கட்டுப்பாட்டின் மூலம் உங்கள் உடலைச் சீரமைக்க முடியும். சாலையில் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும், வீடு கையகப்படுத்துவதில் தாமதம் ஏற்படும். புதிய நபர்களை சந்திக்கவும், உங்கள் செல்வாக்கை அதிகரிக்கவும் செய்யும் நேரம் இது.
கன்னி
பெரியளவில் சேமிக்க வேண்டும் என நீங்கள் விரும்பினால் இப்போது உங்களுக்கு பெரிய வேலைவாய்ப்பு கிடைக்கப்போகிறது. பணி செய்யும் இடத்தில் நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும், பிறருக்கு முன்மாதிரியாக இருங்கள். உறவினர்கள் ஒன்றாக கூடி மகிழ்வீர்கள், நெருங்கிய நபர் ஒருவரை சந்திக்க பயணம் செய்வீர்கள். உங்கள் பெயரில் வீடு அல்லது அபார்ட்மெண்ட் வர வாய்ப்புள்ளது, கல்வித் துறையில் உங்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும்.
துலாம்
பொருளாதார நிலையை நல்ல நிலையில் வைத்திருக்க சில முடிவுகளை எடுப்பீர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்கவும். நீங்கள் செய்யும் ஒரு புதிய தொழில் முயற்சியில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம். உங்கள் துணையுடன் நீங்கள் உறுதுணையாக இருக்க வேண்டும். சிலர் பயணத்திற்காக தயாராகி கொண்டிருப்பார்கள், சொத்து வாங்க இது சரியான நேரம் அல்ல. உங்கள் பள்ளி அல்லது கல்லூரி நாட்களில் உடன் பயின்ற யாரையாவது சந்திக்கும் வாய்ப்பு உள்ளது.
மேலும் படிக்க | தினசரி ராசிபலன்: இன்று அதிஷ்டத்தை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்!
விருச்சிகம்
தொழில் ரீதியாக நீங்கள் சார்ந்திருந்த ஒரு விஷயம் இப்போது உங்களுக்கே சொந்தமாகக்கூடும். மோசமான முதலீடுகளில் கவனமாக இருங்கள், அது உங்கள் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்திவிடும். ஆரோக்கியத்தில் நீங்கள் நல்ல நிலையில் காணப்படுவீர்கள். குடும்பத்திற்காக நேரத்தை ஒதுக்குவதால், குடும்ப உறுப்பினர்களிடையேயான அன்பு வலுவாகும். இன்று சாலையில் நீண்ட தூரம் பயணம் செய்வதைத் தவிர்க்கவும். யாரோ ஒருவர் உங்களுக்கு உதவி செய்யும் மனநிலையில் இருப்பார்,
தனுசு
உங்களுக்கு செலவுகள் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளதால் நீங்கள் பட்ஜெட் போட்டு செலவு செய்யுங்கள், அதுதான் உங்கள் பொருளாதார நிலைக்கு நல்லது. சுய ஒழுக்கம் உங்களை சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவும். சில நாட்கள் சுற்றுலா செல்ல உங்களது நண்பர் அல்லது உறவினர் உங்களை அழைப்பார்கள். உங்களிடம் பணம் இருந்தால் அதை பயன்படுத்தி வீடு அல்லது பிளாட் போன்றவற்றை வாங்குங்கள். தேவையில்லாத விஷயங்களில் செலவு செய்வதை கட்டுப்படுத்துங்கள்.
மகரம்
மற்றவர்களிடம் இருந்து உங்களுக்கு வரவேண்டிய பணத்தை வாங்குவது அவ்வளவு சுலபமல்ல. உணவில் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வீட்டில் நடக்கும் ஒரு விஷயம் உங்களை பிஸியாகவும்,, மகிழ்ச்சியாகவும் வைத்திருக்கும். உங்களது வெளியூர் பயணம் உங்களுக்கு ஒருவிதமான மனசோர்வை கொடுக்க வாய்ப்புள்ளது. உங்களில் சிலர் சொத்து வாங்குவதற்கான இறுதிக் கட்டத்தை அடைய வாய்ப்புள்ளது. ஃப்ரீலான்ஸர்களுக்கு வேலையில் சிக்கல்கள் இருக்கலாம்.
கும்பம்
உங்கள் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான வழிகளை நீங்கள் காணலாம், உங்கள் அன்றாடச் செலவுகளில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தொழிலில் சிரமத்தை அனுபவிப்பவர்களுக்கு வேறு நல்ல புதிய தொழில்கள் கிடைக்கப்பெறும். குடும்ப பொறுப்புகள் சிலருக்கு சுமையாக இருக்கும், நீங்கள் வேறு இடத்திற்கு உங்கள் மனதை அமைதிப்படுத்த விடுமுறைக்கு விண்ணப்பிக்கும் யோசனையில் இருப்பீர்கள். உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற சொத்து கிடைக்க வாய்ப்புள்ளது.
மீனம்
உங்களின் ஆரோக்கியம் மேம்படும், குடும்பத்தினரின் ஆதரவால் நீங்கள் அனைத்தையும் சமாளிப்பீர்கள். கடன் கொடுக்க இது நல்ல நேரம் அல்ல, எனவே அதைத் தவிர்க்கவும். ந ல்ல திட்டமிடல் மற்றும் புத்திசாலித்தனமான வரவுசெலவுத் திட்டம் உங்களுக்கு விடுமுறையை அனுபவிக்க உதவும். பொருத்தமான சொத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களுக்கு நெருக்கமான மற்றும் அன்பானவர்களுடன் கொஞ்ச நேரத்தை செலவிடுங்கள். உங்கள் தொழில் ரீதியாக கிடைக்கப்போகும் லாபத்தில் பெரிய நஷ்டம் ஏற்படலாம்.
மேலும் படிக்க | பிப்ரவரி ராசி பலன்: ‘இந்த’ ராசிகளுக்கு மகாலட்சுமியின் பரிப்பூரண அருள் நிச்சயம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ