அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய  பஞ்சாங்கம்


18-03-2023, பங்குனி 04, சனிக்கிழமை, ஏகாதசி திதி பகல் 11.14 வரை பின்பு தேய்பிறை துவாதசி. திருவோணம் நட்சத்திரம் இரவு 12.29 வரை பின்பு அவிட்டம். நாள் முழுவதும் சித்தயோகம். ஏகாதசி விரதம். ஹயக்ரீவருக்கு உகந்த நாள். பெருமாள் வழிபாடு நல்லது.  இராகு காலம் - காலை 09.00-10.30,  எம கண்டம் மதியம் 01.30-03.00, குளிகன் காலை 06.00-07.30, சுப ஹோரைகள் - காலை 07.00-08.00, பகல் 10.30-12.00,  மாலை 05.00-07.00. இரவு 09.00-10.00.


இன்றைய ராசிப்பலன் - 18.03.2023


மேஷம்
இன்று நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் வெளியூர் பயணம் செல்ல நேரிடும். வியாபாரம் சிறப்பாக இருக்கும்.


மேலும் படிக்க | ராஜாதி ராஜ யோகம்..இந்த ராசிக்காரர்களின் காட்டில் பண மழை பொழியும்


ரிஷபம்
இன்று உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். 


மிதுனம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.


கடகம்
இன்று குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.


சிம்மம்
இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரில் இருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும்.


கன்னி
இன்று வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது.


துலாம்
இன்று நீங்கள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.


விருச்சிகம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும்.


தனுசு
இன்று பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.


மகரம்
இன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு நவீன பொருட்கள் வாங்கும் யோகம் அமையும்.


கும்பம்
இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.


மீனம்
இன்று நீங்கள் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும்.


கணித்தவர்
ஜோதிட மாமணி,
முனைவர் முருகு பால முருகன்
Dip in astro, B.L, M.A.astro. PhD in Astrology.
No: 19/33 வடபழனி ஆண்டவர் கோயில் தெரு,
தபால் பெட்டி எண் - 2255.  வடபழனி, 
சென்னை - 600 026 தமிழ்நாடு, இந்தியா.
cell: 0091  7200163001. 9383763001.


மேலும் படிக்க | கஜகேசரி யோகத்தால் கெட்டகாலம் முடிந்து பொன்னான வாய்ப்பைப் பெறும் ராசிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ