அனைத்து இராசி அறிகுறிகளும் ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் அவற்றின் சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு உங்கள் நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும் அல்லவா? இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய  பஞ்சாங்கம்


05-05-2023, சித்திரை 22, வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி இரவு 11.04 வரை பின்பு தேய்பிறை பிரதமை. சுவாதி நட்சத்திரம் இரவு 09.39 வரை பின்பு விசாகம். நாள் முழுவதும் சித்தயோகம். சித்ரா பௌர்ணமி விரதம். லக்ஷ்மி நரசிம்மருக்கு உகந்த நாள்.  இராகு காலம் - பகல் 10.30-12.00, எம கண்டம்-  மதியம் 03.00-04.30, குளிகன் காலை 07.30 -09.00, சுப ஹோரைகள் - காலை 06.00-08.00, காலை10.00-10.30. மதியம் 01.00-03.00,  மாலை 05.00-06.00,  இரவு 08.00-10.00


மேலும் படிக்க | இன்னும் 2 நாட்களில் தொடங்கப்போகும் ஜேஷ்ட மாதம்... இந்த தவறுகளை செய்துவிடாதீர்கள்...!


இன்றைய ராசிபலன் -  05.05.2023


மேஷம்


இன்று குடும்பத்தில் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை பலப்படும். சுப முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் குறையும். லாபம் பெருகும்.


ரிஷபம்
இன்று குடும்பத்தில் பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் வந்து சேரும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை அளிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். பெரிய மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் அனுகூலமாக இருக்கும்.


மிதுனம்
இன்று நீங்கள் எதிர்பாராத செலவுகள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்ல வேண்டியிருக்கும். தொழில் புரிவோர் தொழிலில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் லாபத்தை அடைய முடியும். கொடுத்த கடனை வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் குறையும்.


கடகம்
இன்று வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். உற்றார் உறவினர்களுடன் மனஸ்தாப,ங்கள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தொழிலில் வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரித்தாலும் அனுகூலமான பலன் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஆதரவு கிட்டும்.


சிம்மம்
இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களால் அனுகூலம் உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சியில் சாதகப்பலன் கிடைக்கும். உறவினர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டும்.


கன்னி
இன்று குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். சுபமுயற்சிகளில் தடங்கல்கள் ஏற்படலாம். தொழில் ரீதியாக தேக்கங்கள் விலகி நல்லது நடக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உறவினர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் குறையும்.


துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் இருந்த தடைகள் விலகும். தொழில் சம்பந்தமான புதிய திட்டங்கள் வெற்றி தரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். பொன் பொருள் சேரும். உடல் ஆரோக்கியம் சீராகும். தேவைகள் யாவும் நிறைவேறும்.


விருச்சிகம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் மந்த நிலை ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். உறவினர்களை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வேலையில் பணிச்சுமை குறையும்.


தனுசு
இன்று வியாபாரத்தில் நண்பர்கள் மூலம் அனுகூலமான பலன் கிடைக்கும். பிள்ளைகளுடன் இருந்த மனஸ்தாபம் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த சலுகைகள் கிட்டும். புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றியை தரும். கடன் பிரச்சினை தீரும். வங்கி சேமிப்பு உயரும்.


மகரம்
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை நீங்கும். வர வேண்டிய தொகை கைக்கு வந்து சேரும். பிள்ளைகளின் விருப்பங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் உதவியுடன் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். எதிர்பாராத பணவரவுகள் மகிழ்ச்சியை தரும்.


கும்பம்
இன்று உங்களுக்கு பயணங்களால் வீண் அலைச்சலும் உடல் சோர்வும் ஏற்படும். ஆடம்பர செலவுகள் மூலம் சேமிப்பு குறையும். பெரிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் அனுகூலப் பலனை அடையலாம்.


மீனம்
இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடங்கல்கள் ஏற்படும். மன அமைதி குறையும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வேலையில் உடனிருப்பவர்களிடம் பேசும் பொழுது கவனமாகவும் நிதானமாகவும் பேசுவது நல்லது. பணம் சம்பந்தபட்ட கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.


கணித்தவர்
ஜோதிட மாமணி,
cell: 0091  7200163001. 9383763001.


மேலும் படிக்க | உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம், முழு ராசிபலன் இதோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ