சோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் கலை. இன்றைய நாள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொண்டால் கவனமாக செயல்படலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய பஞ்சாங்கம் - சோபகிருது  ஆவணி 16 


அயனம் ~ தக்ஷிணாயனம் .


ருது ~ வர்ஷ ருதௌ.


பக்ஷம்~ கிருஷ்ண பக்ஷம் . 


திதி ~ இன்று அதிகாலை 03.42 வரை துவிதியை பின்பு திரிதியை
ஸ்ராத்த திதி ~ திரிதியை .


நாள் ~~ சனிக்கிழமை 
நக்ஷத்திரம் ~ இன்று மாலை 05.29 வரை உத்திரட்டாதி பின்பு ரேவதி


யோகம் ~ இன்று மாலை 05.29 வரை சித்தயோகம் பின்பு மரணயோகம்


கரணம் ~ இன்று அதிகாலை 03.42 வரை கரசை பின்பு பிற்பகல் 02.42 வரை வணிசை பின்பு பத்திரை.


நல்ல நேரம் ~ காலை 07.45 AM ~ 08.45 AM & 04.45 PM ~ 05.45 PM


ராகு காலம் ~ காலை 09.00 ~ 10.30 AM


எமகண்டம் ~ பிற்பகல் 01.30 ~ 03.00 PM


குளிகை ~ காலை 06.00 ~ 07.30 AM


சூரிய உதயம் ~ காலை 06.04 AM


சூரிய அஸ்தமனம் ~ மாலை 06.32 PM


சந்திராஷ்டமம் ~ மகம், பூரம் .


சூலம் ~ கிழக்கு


பரிகாரம் ~ தயிர் 


மேலும் படிக்க | அபூர்வ யோகம்: இந்த ராசிகள் மீது சனி பகவானின் அருள் மழை


ராசி பலன்கள்


மேஷம்: வியாபாரத்தில் மறைமுக எதிர்ப்புகளின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மூத்த உடன்பிறப்புகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுபச்செய்திகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடியும். தடைகள் விலகும் நாள்.


ரிஷபம்: ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். கணுக்கால் வலிகள் குறையும். வெளியூர் பயணம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சகோதரிகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


மிதுனம்: உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான தெளிவு ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் அகலும். தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். யாகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நிர்வாகத் துறைகளில் அதிகாரம் மேம்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.


கடகம்: எதிர்பாராத பயணங்களால் புதிய அறிமுகம் ஏற்படும். பெற்றோர்களின் ஆதரவு கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் வெற்றி கிடைக்கும். கால்நடைகளை பற்றிய புரிதல் அதிகரிக்கும். திடீர் வாய்ப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். வரவு மேம்படும் நாள்.


சிம்மம்: ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். விரும்பத்தகாத சில நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். மறதி நிறைந்த நாள்.


மேலும் படிக்க | பணத்திற்கு பஞ்சமே இருக்காது... இந்த ‘6’ அதிசய செடிகள் இருந்தால் போதும்..!


கன்னி: குணநலன்களில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.


துலாம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். வாகன வசதிகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாகும். கல்வியில் இருந்த ஆர்வமின்மை குறையும். கால்நடை வளர்ப்பின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள். 


விருச்சிகம்: சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். இடப்பெயர்ச்சி சார்ந்த முயற்சிகள் கைகூடும். தைரியமான பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துகளை கூறுவதில் விவேகம் வேண்டும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


தனுசு: கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். ஆபரணச் சேர்க்கை சார்ந்த எண்ணங்கள் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வீடு விற்பனையில் இருந்த தாமதம் குறையும். வேலையாட்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.


மகரம்: சாதகமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை குறைத்துக் கொள்ளவும். சாதுர்த்தியமான பேச்சுக்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும். நலம் நிறைந்த நாள்.


கும்பம்: மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுமக்கள் பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மனதளவில் இருந்த குழப்பம் விலகும். விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். தோற்றப்பொலிவு மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


மீனம்: உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். செல்வாக்கு நிறைந்த நாள்.


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளின் தலைவிதி மாறும்... அட்டகாசமான நற்பலன்கள் கைகூடும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ