புதுடெல்லி: ஒருவரின் ஆளுமையை வரையறுக்கும் ராசிகளின் இயக்கத்தின்படி, ஒருவரின் பலாபலன்கள் சொல்லப்படுகின்றன. இன்று நமக்குக் என்ன நடக்கப் போகிறது என்பதைப் பற்றி ஏற்கனவே தெரிந்து கொண்டு நாளைத் தொடங்கினால் அது உதவியாக இருக்கும். இன்று வாய்ப்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்குமா இல்லை எச்சரிக்கையாக இருப்பது நல்லதா? தெரிந்துக் கொள்வோம்...  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம் 


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் குறையும். கல்லூரி கால நண்பர்களின் தொடர்பு ஏற்படும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். உறவினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். புகழ் மேம்படும் நாள்.


ரிஷபம் 


சில பணிகளில் மாற்றம் உண்டாகும். சகோதரர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். நண்பர்களிடம் பொறுமையைக் கையாளவும். வியாபார பணிகளில் விவேகம் வேண்டும். மனதளவில் தடுமாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.


மேலும் படிக்க | வேலை, வியாபாரத்தில் வெற்றி: புதன் உதயத்தால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம்


மிதுனம் 


நிர்வாகம் தொடர்பான மாற்றங்களில் சற்று சிந்தித்துச் செயல்படவும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பிடிவாத போக்கினை குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.


கடகம் 


கடக ராசிக்காரர்களுக்கு பெற்றோர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். நிர்வாகத் திறமை வெளிப்படும். புதிய முயற்சிகளில் அனுபவம் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


சிம்மம் 


கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். திடீர் பணவரவுகள் உண்டாகும். ஆதரவு நிறைந்த நாள்.


கன்னி


எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவரின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வெளியூரில் இருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்க்கவும். கனிவான பேச்சுகள் நன்மையை ஏற்படுத்தும்.


மேலும் படிக்க | கன்னி ராசியில் சூரியன் பெயர்ச்சி... அடுத்த ஒரு மாதம் இந்த ராசிகளுக்கு கஷ்ட காலம்


துலாம் 


மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வரவுக்கேற்ற விரயம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளைக் குறைத்துக் கொள்ளவும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். வேலை ஆட்களை பற்றிய புரிதல் உண்டாகும்.


விருச்சிகம் 


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி விடுதலை பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். விருச்சிக ராசியினருக்கு தோற்றப்பொலிவு அதிகரிக்கும். கலகலப்பான பேச்சுக்களின் மூலம் புதிய அறிமுகம் கிடைக்கும். மகாலட்சுமியின் அருளாசி உங்களுக்கு உண்டு.


தனுசு 


ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். நெருக்கமான நண்பர்களின் மூலம் நன்மை உண்டாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். 


மேலும் படிக்க | சர்வார்த்த சித்தி யோகத்தினால் பம்பர் பலன்களை அள்ளப் போகும் ‘5’ ராசிகள்!


மகரம் 


எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். அன்னை மகாலட்சுமியின் அருளாசியால், கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.


கும்பம் 


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். நாவல் சார்ந்த செயல்பாடுகளில் விருப்பம் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். 


மீனம் 


குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். 


மேலும் படிக்க | சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு அள்ளிக்கொடுப்பார் சனி.. ராஜவாழ்க்கை அமையும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ