மும்மதங்கள் சங்கமிக்கும் நாகையில், 250 ஆண்டுகளுக்கு முன் கலைநயத்துடன் எழுப்பப்பட்ட பிரம்மாண்ட சி.எஸ்.ஐ தேவாலயம்;  வரும் 29ஆம் தேதி மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டது. வாழ்வியலையும், கல்வியையும் போதித்த தேவாலயம், பாரம்பரியம் மற்றும் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டது. ஒரு கோடி ரூபாய் செலவில் இந்த புனரமைப்புப் பணிகள் நடந்தேறின. டச்சுக்காரர்களின் கட்டடக்கலையுடன் கூடிய கிறிஸ்தவர்களின் வரலாற்று சின்னமாக கருதப்படும் சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயம் தற்போது பொதுமக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவில் உள்ள கடற்கரைப் பகுதிகளை மன்னர்களிடமிருந்து கையகப்படுத்திய டச்சுக்காரர்கள், அங்கு கோட்டை, கொத்தளங்களை உருவாக்கி வாணிபம் செய்து வந்தனர். இவர்கள் பொருளாதார அடிப்படையில் இயற்கை துறைமுகமாக அமைந்த நாகப்பட்டினத்தை தேர்ந்தெடுத்து, அங்கு மிளகு, நவரத்தினங்கள் மற்றும் பட்டுத்துணிகளை வாணிபம் செய்து ஏக போக லாபத்தை ஈட்டினர்.


அப்போது கி.பி. 1774 ஆம் ஆண்டு நாகப்பட்டினம் பழைய பேருந்து நிலையம் எதிரே பிரம்மாண்ட சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயத்தையும் எழுப்பினர். டச்சு கட்டிட கலையால் கலை நயத்துடன் உருவாக்கப்பட்ட இந்த தேவாலயம் மூலம் பின்னாளில் அப்பகுதியில் வசித்து வந்த மக்களுக்கு இலவச கல்வியையும், வாழ்வியலையும் போதித்தனர்.


மேலும் படிக்க | Astro: கடன் தொல்லை தீர, வருமானம் பெருக... எளிய ‘செம்பருத்தி பூ’ பரிகாரங்கள்!


ஆலயமணி வடிவத்தில் நாகையில் நுட்பமாக கட்டப்பட்ட கிறிஸ்தவர்களின் வரலாற்று சின்னமான சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயம், 250 ஆண்டுகள் ஆவதையொட்டி, அரசின் பங்களிப்புடன் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் அது புனரமைக்கும் பணி கடந்த ஓராண்டாக நடைபெற்று வருகிறது. மூன்று அடி அகல தூண்களுடன் கம்பீரமாக எழுந்து நிற்கும் பிரம்மாண்ட சிஎஸ்ஐ தேவாலயம் அதன் பாரம்பரியமும் மற்றும் பழமையும் மாறாமல் புதுப்பிக்கும் பணியில் தொழில் நுட்ப பொறியாளர்கள் மற்றும் அதன் தொழிலாளர்கள் அங்கு மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


தேவாலயத்தில் தேக்கு மரத்தில் வடிவமைக்கப்பட்ட நெதர்லாந்து நாட்டு எலிசபெத்து ராணியின் சிற்பங்கள், பாய்மரக் கப்பல் வடிவில் தேக்கு மரத்தில் உருவாக்கப்பட்ட மேற்கூரைகள் மற்றும் பாதிரியார்கள் ஆசிர்வாதம் அளிக்கும் உயர்மட்ட பீடங்கள், சுற்றுச்சுவர் என தேவாலயம் முழுவதும் வர்ணங்கள் மற்றும் வார்னிஷ் பூசி அதனை புதுப்பிக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


வரும் 29ஆம் தேதி திருச்சி தென்னிந்திய திருச்சபையின் பேராயர் சந்திரசேகரன் நாகையில் புதிதாக புனரமைக்கப்பட்டுள்ள தூய பேதுரு தேவாலயத்தை திறந்து வைக்கிறார்.


மும்மதங்கள் சங்கமிக்கும் நாகையில், கல்வியையும், வாழ்வியலையும் போதிக்க 250 ஆண்டுகளுக்கு முன் எழுப்பப்பட்ட வரலாற்றுச் சின்னமான சிஎஸ்ஐ தூய பேதுரு தேவாலயம் மீண்டும்  பழமையும், பாரம்பரியமும் மாறாமல், புனரமைக்கப்பட்டு மக்களுக்காக 29ஆம் தேதி அர்ப்பணிக்க உள்ளதால், அப்பகுதி மக்களும், கிறிஸ்தவர்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் படிக்க | சனியால் அதிர்ஷ்ட பலன், இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ