செவ்வாய் பெயர்ச்சி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. ராசிகள் மட்டுமல்லாமல், கிரகங்களின் நட்சத்திரங்கள், உதய, அஸ்தமன நிலைகள், வக்ர நிலை, வக்ர நிவர்த்தி என பலவற்றில் அவ்வப்போது மாற்றங்காள் ஏற்படுகின்றன. இந்த மாற்றங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். கிரகங்களின் பெயர்ச்சிகளாலும், இயக்க மாற்றங்களாலும் சில ராசிகள்ளில் சுப பலன்களும் சில ராசிகளுக்கு அசுப பலன்களும் கிடைக்கும். இவற்றின் தாக்கம் அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கும் என்றும் கூறப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தைரியத்தையும், துணிச்சலையும் தரும் செவ்வாய் கிரகம், கன்னி ராசியை விட்டு அக்டோபர் 22ம் தேதி துலாம் ராசியில் பிரவேசிக்கிறார். செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். இதனால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு செவ்வாயின் அதிக அருள் கிடைக்கும். இவர்கள் தொழில்-வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


செவ்வாய் பெயர்ச்சியால் நற்பலன்களை அடையவுள்ள ராசிகள் இவைதான் 


மேஷ ராசி


ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் கிரகத்தில் ஏற்படும் மாற்றத்தின் தாக்கம் மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தெரியும். உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகிறார். அத்தகைய சூழ்நிலையில், இந்த நேரத்தில் திருமணமானவர்களின் வாழ்க்கையில் இனிமை சேரும். உங்கள் வாழ்க்கை துணைவரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.


உங்கள் ராசிக்கு ஒன்பதாம் மற்றும் லக்ன ஸ்தானத்தின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சமயப் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் சாதகமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயம் ஆகும். 


விருச்சிக ராசி


இந்த காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாகவும் பலன் தருவதாகவும் இருக்கும். உங்கள் ராசிக்கு செவ்வாய் தான் அதிபதி. விருச்சிக ராசிக்கு வருமான வீட்டில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகிறார். இந்த நேரத்தில் விருச்சிக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். திடீர் பண ஆதாயம் உண்டாகும். இந்த நேரத்தில் பழைய முதலீடுகள் நன்மை தரும். ரியல் எஸ்டேட், சொத்து அல்லது நிலச் சொத்து தொடர்பான வியாபாரம் உங்களுக்கு நன்மை தரும்.


மேலும் படிக்க | 12 ஆண்டுக்கு பிறகு குருவால் அதிசய நிகழ்வு.. அதிர்ஷ்டம் இந்த ராசிகளுக்கு தான்


கன்னி ராசி


ஜோதிட சாஸ்திரப்படி செவ்வாய் பெயர்ச்சி கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் பணம் மற்றும் பேசும் இடத்தை செவ்வாய் பார்க்கப் போகிறார். இந்த காலகட்டத்தில் தற்செயலான பண ஆதாயம் உண்டாகும். வியாபாரிகளுக்கு தடைப்பட்ட பணம் கிடைக்கும். இதுமட்டுமின்றி, தொழில் ரீதியாகவும் இந்த நேரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் ராசிக்கு நான்காம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி செவ்வாய் ஆவார். அத்தகைய சூழ்நிலையில், இந்த வேளையில் நீங்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை பெறலாம். இந்த நேரத்தில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் சாதகமாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைன்யுள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு-புதன் கூட்டணி வைத்து பணத்தை அள்ளிக் கொடுத்தால், சனீஸ்வரரும் தங்க மழை பொழிவார்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ