நமது கர்மங்களுக்கு ஏற்ப, பலன்களைக் கொடுக்கும் சனி பகவான் தற்போது கும்ப ராசியில் இருக்கிறார். கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரும் கிரகமான சனீஸ்வரன் இந்த பிப்ரவரி 11ஆம் தேதி அஸ்தமனம் ஆனார். அவர் மார்ச் மாதம் 18ஆம் தேதி உதயமாவார். அதோடு கும்ப ராசியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தில் சனீஸ்வரனும் சூரிய பகவானும் பகை கொண்ட கிரகங்களாக கருதப்படுகிறார்கள். கும்ப ராசியில் சனியும் சூரியனும் இணைந்திருப்பார்கள். இதனால் பொதுவாகவே, உலக அளவில் பதற்றம், அமைதியின்மை ஆகியவை ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. எல்லோரும் வாழ்க்கையிலும் ஏதோ ஒரு பிரச்சனை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.


சனி அஸ்தமன பலன்கள்


மேஷம்


பணம் கொடுக்கல் வாங்கலில் தாமதம் ஏற்படலாம். வேலையில் தொழிலில் பாதிப்புகள் உண்டாகலாம். நிதி நெருக்கடிகள் ஏற்படலாம்.


ரிஷபம்


வேலையில் மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. பயணம் செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.


மேலும் படிக்க | திரிகிரஹி யோகம்... பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழப்போகும் சில ராசிகள்!


மிதுனம்


உடல்நிலை மீது சிறப்பு கவனம் செலுத்தினால் நல்லது. திட்டமிட்டபடி வேலை நடக்காமல் தாமதமாகலாம். பயணம் செய்யும் போது கவனம் தேவை.


கடகம்


உறவுகளில் மனக்கசப்பு ஏற்படலாம். செலவுகள் கைமீறி போகாமல் பார்த்துக் கொள்ளவும். ஏனென்றால் நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.


சிம்மம்


முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்றாக சிந்தித்து முடிவெடுக்கவும். இல்லை பிரச்சினையை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக தகராறு ஏற்படலாம்.


கன்னி


உடல் ஆரோக்கியம் பாதிக்கும் வாய்ப்பு உண்டு. பதவி உயர்வு சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்காது. எல்லா நிலையிலும் கடும் போட்டியை சந்திக்க வேண்டி வரும்.
துலாம்


உறவுகளில் பிரச்சனை ஏற்படலாம். கடன் வாங்கும் நிலை ஏற்படும். சிந்தித்து செலவு செய்வது நல்லது.


விருச்சிகம்


ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.. பயணத்தின் போது பிரச்சனைகள் ஏற்படலாம்.. நிதி நெருக்கடி ஏற்படும் வாய்ப்பு உண்டு.


தனுசு


எண்ணியபடி காரியம் நிறைவேறாமல் மன உளைச்சலை கொடுக்கும். திட்டமிட்டபடி எதுவும் நடக்காது. கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.


மகரம்


குடும்பத்தில் சண்டைகள் ஏற்படும் வாய்ப்பு உண்டு.. நிதி இழப்பு ஏற்படும். புதிதாக முதலீடு செய்வதை தவிர்க்கவும்.


கும்பம்


வேலை செய்யும் இடத்தில் பணி அழுத்தம் அதிகம் இருக்கும். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காது. உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு ஏற்படும்.


மீனம்


சம்பள உயர்வு திருப்திகரமாக இருக்காது. கடன் சுமை அதிகரிக்கலாம். உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.


சனீஸ்வரனின் கெடு பலன்களில் இருந்து தப்பிக்க சில பரிகாரங்கள்


1. சனிபகவானை மகிழ்விக்க சனிக்கிழமை, சனி பிரதோஷம், சனி அம்மாவாசை ஆகிய நாட்களில் வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும்.


2. கருமை நிறம் உடைய நாய்க்கு உணவளிப்பது, சனிபகவானை மகிழ்விக்கும்.


3. சனிக்கிழமைகளில், கோவிலுக்கு சென்று சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றுவது பலன் அளிக்கும்.


4. அரச மரத்தின் கீழ் தீபம் ஏற்றினால் சனிபகவானின் அருள் கிடைக்கும் என்பார்கள்.


5. பகவான் அனுமனை வழிபடுவதன் மூலம் சனிபகவானின் அருளை பரிபூரணமாக பெறலாம்.


6. ஏழை எளியவர்களுக்கு, உணவளிப்பதும், அவர்களுக்கு ஆடை போர்வை போன்றவற்றை தானம் செய்வதும், மகிழ்விக்கும்.


மேலும் படிக்க | Astro: குரோதி தமிழ் புத்தாண்டு ‘இந்த’ ராசிகளுக்கு அட்டகாசமான ஆரம்பமாக இருக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ