Sani Peyarchi: நவகிரகங்களில் ஒரு கிரகத்தை பார்த்து மக்கள் அச்சப்படுகிறார்கள் என்றால் அது சனியாகத்தான் இருக்க வேண்டும். சனிபகவானை கண்டாலே அனைவருக்கும் எப்போதும் பயம் தான். ஆனால் அப்படி அச்சம் கொள்ள தேவை இல்லை என்பது தான் ஜோதிடர்களின்  கருத்தாக உள்ளது. சனி பகவான் தயவு தாட்சண்ணியம் காட்டாத கிரகம் என்று கூறப்பட்டாலும் நீதியின் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் கொடுக்கும் விளைவுகளின் அடிப்படையை தெரிந்து கொண்டால் நமக்கு அச்சம் இருக்காது. நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப தான் நமக்கு பலன்களையும் அளிக்கிறார். ஆகையால் நாம் நல்ல செயல்களை செய்து வந்தால் நமக்கு விளைவுகளும் நல்லதாகவே இருக்கும். மேலும் சனி 12 ராசிகளிலும் மிகவும் மெதுவாக நகரும் கிரகமாக இருப்பதால் அனைத்து ராசிகளிலும் அவரது விளைவும், தாக்கமும் அதிகமாக இருக்கின்றது.


ஜோதிட கணக்கீடுகளின் படி சனி பகவான் தற்போது தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இந்த ஆண்டு முழுவதும் அவர் இந்த ராசியில் தான் இருப்பார். எனினும் உதயம், அஸ்தமனம் போன்ற மாற்றங்கள் இருக்கும். தனது சொந்த ராசியான கும்ப ராசியில் சனிபகவான் உள்ளதால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகியுள்ளது.


2025 ஆம் ஆண்டு வரை சனிபகவான் கும்பத்தில் இருப்பார். கேந்திர திரிகோண ராஜயோகம் மனிதர்களின் வெற்றி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும் வல்லமை பெற்றது. அது மட்டும் இன்றி இதை அனைத்து மனிதர்களின் வாழ்விலும் வளத்தையும், செல்வத்தையும், ஐஸ்வர்யத்தையும் பெருக்கும் என்று நம்பப்படுகிறது. சனிபகவான் கும்பத்தில் இருப்பதால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அனைத்து ராசிகளுக்கும் நன்மைகள் கிடைக்கும். எனினும், சில ராசிகக்காரர்கள் அதிகப்படியான நன்மைகளை பெறுவார்கள். இவர்கள் வாழ்வில் சுபிட்சம் இருக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளைப் (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம்


மேஷம் (Aries)


மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இவர்களுக்கு திடீரென பணியிடத்தில் பெரிய பொறுப்புகள் வழங்கப்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த வேலைகள் வெற்றிகரமாக நிறைவடையும். இந்த காலத்தில் வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக கொண்டாடுவார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2024: அதிர்ஷ்டம், லாபம், வெற்றி.... மகிழ்ச்சியில் திக்குமுக்காட போகும் ராசிகள் இவைதான்


ரிஷபம் (Taurus)


சனி பகவானால் உருவாகியுள்ள கேந்திர திரிகோண ராஜயோகம் ரிஷப ராசிக்காரர்க்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள ரிஷப ராசிக்காரர்கள் தற்போது அதிகப்படியான லாபத்தை காண்பார்கள். நீங்கள் திட்டமிட்டுள்ள வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவடையும். புதிய வருமான வழிகள் திறக்கும். பொருளாதார நிலை நன்றாக இருக்கும். பெற்றோரின் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிதிநிலை மேம்படும்.


துலாம் (Libra)


சனி பகவான் கும்ப ராசியில் இருப்பது துலா ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மாற்றம் வரும். அனுகூலுமான நன்மைகள் ஏற்படும். முதலீடு செய்ய நினைப்பவர்கள் இந்த காலத்தில் அதை செய்யலாம். இப்போது செய்யப்படும் முதலீடுகளால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு இது மிக நல்ல நேரம். படிப்பில் நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகள் மூலமாக நல்ல செய்திகள் கிடைக்கும்.


சிம்மம் (Leo)


கும்ப ராசியில் சனி இருப்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு லாபகரமானதாக இருக்கும். எதிர்பாராத இடங்களில் இருந்து பண வரவு இருக்கும். அலுவலகப் பணிகளில் பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் பரிபூரண ஆதரவு கிடைக்கும். வாழ்க்கையில் சிறிய ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். ஆமால், கவலை கொள்ளத் தேவை இல்லை. உங்கள் பொறுமை மற்றும் புத்திசாலித்தனத்தால் அனைத்து சூழ்நிலைகளிலும் வெற்றி காண்பீர்கள்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | மாசி மகத்தன்று அனைத்து நவகிரக தோஷங்களை நீக்க பரிகாரங்கள்! ஒரே நாளில் தோஷநிவர்த்தி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ