Sankashti Chaturthi 2023: விக்ன விநாயகரை வழிபட்டு வளமான வாழ்வு பெற்று வாழ்பவர்களுக்கு முக்கியமான விரதம் சங்கடசதுர்தி விரதம். மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி திதிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. அதில், தேய்பிறை சதுர்த்தியன்று கணபதிக்கு விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். தமிழ்நாட்டில், தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்றும் அழைப்பார்கள். இந்த ஆண்டு பிப்ரவ்ரி மாதம் 9ம் நாளான இன்று வரும் சங்கடஹர சதுர்த்தியை சங்கஷ்டி சதுர்த்தி என்று அழைப்பார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சங்கடம், அதாவது வருத்தம், துன்பம், பிரச்சனை, சிக்கல் என அனைதையும் போக்கும் நாள் இன்று என்று பொருள் கொள்ளலாம். , ஹர என்றால் அழித்தல். ஆகவே, சங்கடங்கள் அனைத்தையும் அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.


ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி திதிக்கு பிறகு வரும் சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்தால் குடும்பத்தில் வளம் பெருகி, பிரச்சனைகள் விலகி, எல்லா காரியங்களும் வெற்றியடையும் என்பது உறுதி. இந்து நாட்காட்டியின்படி, சங்கஷ்டி சதுர்த்தி என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி மங்களகரமான நாள்.


மேலும் படிக்க | Mercury Combust: புதன் எரிப்பு நிலையால் நிலை தடுமாறும் ராசிக்காரர்கள்! சற்று கவனம் தேவை


‘சங்கஷ்டி’ என்பது சமஸ்கிருத வார்த்தையாகும், அதாவது கடினமான மற்றும் கெட்ட காலங்களிலிருந்து விடுதலை அல்லது விடுதலை அளிக்கும் நாள் என்று பொருள்படும் சங்கடஹர ‘சதுர்த்தி’ நாள் இன்று


சங்கஷ்டி சதுர்த்தியா அங்கராக சதுர்த்தியா?


செவ்வாய் கிழமையில் வந்தால், அது அங்கராகி சதுர்த்தி என்று அழைக்கப்படுகிறது. சங்கடஹர சதுர்த்தியை மக்கள் மிகவும் பக்தியோடு கொண்டாடுகிறார்கள்.   


சங்கஷ்டி சதுர்த்தியின் முக்கியத்துவம்
தடைகள் அனைத்தையும் நீக்கி, இறுதியாக ஞானத்தையும் பேரின்பத்தையும் அருள்வது முதல், நமது எல்லா பிரச்சனைகளுக்கும் தெய்வமே பொறுப்பு என்று கடவுளை சரணாகதி அடையச் சொல்கிறது இந்து மதம். விநாயகப் பெருமான் ஞானம், நல்லொழுக்கம், அறிவு ஆகியவற்றின் உருவமாக இருக்கிறார். எனவே, அவரைத் தொழும்போது, ஆரோக்கியம், செல்வம் மற்றும் மகிழ்ச்சி வந்து சேரும். 


சிவபெருமானின் மூத்த மகனான விநாயகர், இந்து கடவுளர்களில் முழு முதல் தெய்வம் ஆவார். சங்கஷ்டி சதுர்த்தி விரதம் இருந்தால் குடும்பம் முன்னேற்றம் அடையும் என்பதால் பெண்கள் கடைபிடிக்கும் மங்களகரமான விரதங்களில் ஒன்றாக உள்ளது சங்கட சதுர்த்தி விரதம்.


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சங்கஷ்டி சதுர்த்தி சடங்குகள்
விரதத்தைக் கடைப்பிடிப்பதால் இறைவனின் அருள் கிடைக்கும். பக்தி சிரத்தையுடன் வழிபடுவது அவசியம்
அதிகாலையில் எழுந்து சுத்தமான ஆடைகளை அணிந்து கொள்ள வேண்டும்
காலை முதல் உண்ணா நோன்பு இருக்க வேண்டும்
மாலையில் பூஜைக்காக தயார் செய்ய வேண்டும்.  
விநாயகப் பெருமானுக்கு படைக்க மோதகம் லட்டு போன்ற பலகாரங்களை தயார் செய்யவும்  
விநாயகர் சிலையை சுத்தமான மேடையில் வைக்கவேண்டும்
பூக்கள் மற்றும் தர்ப்பைப் புல் ஆகியவற்றால் இறைவனை ஆவாஹனம் செய்யவேண்டும்.  
மோதகம் லட்டு போன்ற பலகாரங்கள் விநாயகப் பெருமானுக்கு படைக்க வேண்டும் 
வானில் சந்திரம் தோன்றியதும் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும் 
வானில் சந்திரம் தோன்றியதும் விநாயகருக்கு பூஜை செய்யவேண்டும் 
கணபதிக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்துவிட்டு, விநாயகரை பற்றி பாடலாம் அல்லது விரத கதைகளை சொல்லலாம்.


பூஜை முடிந்தவுடன், பிரசாதத்தை பிறருக்கும் கொடுத்து விரதம் இருந்தவர்களும் சாப்பிட வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | மனதிற்கு பிடித்த துணையை அடைய உதவும் சில எளிய சுக்கிரன் பரிகாரங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ