சரஸ்வதி பூஜை 2024: கலைமகளின் கனிவான அருள் பெற சரஸ்வதி பூஜை செய்யும் முறை
Saraswati Pooja 2024: நவராத்திரியின் 9 ஆவது நாளில், கல்வி மற்றும் கலைகளின் அன்னையான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம், நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் செய்யப்பட்டு அன்னை சரஸ்வதியின் அருளுக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள்.
Saraswati Pooja 2024: முப்பெரும் தேவியரான துர்கை, லட்சுமி, சரஸ்வதியை போற்றி வழிபடும் விழாவான நவராத்திரி தற்போது நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவராத்திரியின் 9 ஆவது நாள் ‘சரஸ்வதி பூஜை’ என தனிச்சிறப்புடன் கொண்டாடப்படுகின்றது. இந்த நாளில், படிக்கும் மாணவர்களின், புத்தகங்களை சரஸ்வதி அன்னையின் முன் வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த நாளில் கலைமகளை மனமுருகி வேண்டினால், நம் அறிவுக்கண்களை அவர் திறந்து வைப்பார் என்பதில் சந்தேகமில்லை.
நவராத்திரியின் 9 ஆவது நாளில், கல்வி மற்றும் கலைகளின் அன்னையான சரஸ்வதியை வணங்கும் வகையில், சரஸ்வதி பூஜையும், தொழில், வர்த்தகம், நிறுவனங்கள், அலுவலகங்களில் ஆயுத பூஜையும் செய்யப்பட்டு அன்னை சரஸ்வதியின் அருளுக்காக அனைவரும் பிரார்த்திக்கிறார்கள்.
சரஸ்வதி பூஜை: பூஜை செய்யும் முறை
சரஸ்வதி பூகை துவங்கும் முன், பூஜை செய்யப்போகும் இடத்தை தூய்மைப்படுத்தி கோலம் போட்டு செம்மண் இடவும். சரஸ்வதி விக்ரஹம் அல்லது படத்தை கோலமிட்ட மணையின் மீது வைத்து அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு மலர்களால் அலங்கரிக்கவும்.
சரஸ்வதி பூஜை செய்யும் முன், பிள்ளையார் பூஜை செய்ய வேண்டும். மஞ்சளில் பிள்ளையார் பிடித்து அதை வெரற்றிலையின் மீது வைத்து, அந்த மஞ்சள் பில்ளையாருக்கு சந்தனம், குங்குமம் இடவும். அதன் பிறகு அந்த பிள்ளையாருக்கு ஸ்தோத்திரங்கள் அல்லது அஷ்டோத்திரம் சொல்லி, அட்சதை, குங்குமம், மலர்கள் கொண்டு பூஜிக்கவும். பிள்ளையார் பூஜை செய்தவுடன் சரஸ்வதி பூஜை செய்யலாம்.
மேலும் படிக்க | புரட்டாசி வியாழக்கிழமை: இன்று இந்த ராசிக்கு அதிர்ஷ்டம் உண்டாகும்
சரஸ்வதி ஸ்தோத்திரம், அஷ்டோத்திரம் ஆகியவற்றை கூறி மலர்கள், குங்குமம், அட்சதை ஆகியவை கொண்டு சரஸ்வதி படத்திற்கு அர்ச்சனை செய்யவும். அதன் பிறகு சந்தன, குங்குமம் இட்டு பூஜையில் வைக்கப்பட்டுள்ள புத்தகங்களையும் அட்சதை, மலர்கள் கொண்டு அர்ச்சனை செய்யவும். அதன் பின்னர் அவரவர் குடும்ப வழக்கத்திற்கு ஏற்ப பல வித உணவு வகைகள், தாம்பூலம், பழங்கள், அவல், பொரி ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவும். அதன் பிறகு தூபம் காட்டி பின் கற்பூரம் ஏற்றி சரஸ்வதி அன்னையை வணங்க வேண்டும்.
குறையாத அறிவாற்றலையும், நேர்த்தியான கலையையும், தெளிவான ஞானத்தையும் அளிக்க வேண்டி சரஸ்வதி தேவியை பிரார்த்திக்கவும்.
ஆயுத பூஜை:
சரஸ்வதி பூஜையன்று ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகின்றது. இன்றைய தினத்தில், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் என அனைத்து இடங்களிலும் இயந்திரங்களுக்கு பூஜை செய்யப்படுகின்றது. இவை தவிர தொழில் செய்ய பயன்படும் ஆயுதங்கள், உபகரணங்கள் ஆகியவையும் சுத்தப்படுத்தப்பட்டு பூஜிக்கப்படுகின்றன. வீட்டில் உள்ள மின்னணு உபகரணங்கள், வாகனங்கள் ஆகியவற்றுக்கும் சந்தன குங்குமம் இடப்பட்டு பூஜை செய்யப்படுகின்றது.
நமக்கு ஆண்டு முழுதும் உதவும் இந்த ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் உபகரணங்காளுக்கு நன்றி கூறும் வகையிலும் ஆயுத பூஜை விழா கொண்டாடப்படுகின்றது.
மேலும் படிக்க | சரஸ்வதி பூஜையன்று இந்த மந்திரங்களை சொன்னால் போதும்: முட்டாளும் மேதையாகலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ