எப்போ வரும் ராகு பெயர்ச்சி! சனியின் கோபத்திலிருந்து விடுதலை பெற 67 நாள் தான் பாக்கி
Shani Rahu Yuti: சனி-ராகு சேர்க்கை சிலரது வாழ்க்கையில் நிம்மதியை கெடுத்துக் கொண்டிருக்கிறது. அக்டோபர் மாதம் 17ம் தேதியன்று ராகு பெயர்ச்சி ஏற்பட்ட பிறகு சில ராசிக்காரர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம்
கர்மக்காராகர் சனீஸ்வரர் தற்போது சதய நட்சத்திரத்தில் ஆட்சி பெற்றுள்ளார். ராகுவின் ஆஸ்தான நட்சத்திரமான சதயத்தில் இருக்கும் சனீஸ்வரர், த்தில் இருக்கும் சனீஸ்வரர் அங்கேயே அக்டோபர் 17, 2023 வரை இருப்பார். இது சில ராசிக்காரர்களுக்கு நல்லது என்றாலும், சில ராசியினருக்கு கடுமையான பிரச்சனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
பாவ கிரகங்களான ராகுவும் சனியும் ஒன்றாக இருப்பதன் தாக்கம், ராகு பெயர்ச்சியானால் மந்தமாகும். மந்தன் என்று அழைக்கப்படும் சனீஸ்வரர் சதயத்தில் இரண்டரை ஆண்டுகள் இருந்தபிறகு தான் மாறுவார். சதய நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் இருக்கும் சனீஸ்வரர் அக்டோபர் 17 வரை அங்கேயே இருக்கப்போகிறார் என்றாலும், ராகுவின் பெயர்ச்சி தான் இந்த 4 ராசிக்காரர்களுக்கு நல்லது செய்யும்.
அக்டோபர் 17ம் தேதிக்கு பிறகு நிம்மதி பெருமூச்சு விடப்போகும் ராசிகள்
கடகம்
சனிப் பெயர்ச்சி முதலே மனதில் சஞ்சலத்துடன் வாழ்ந்துவரும் கடக ராசிக்காரர்கள், பல வழிகளில் கஷ்டங்களை சந்தித்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக கடக ராசியில் பிறந்தவர்கள் ஆரோக்கியத்தில் பெரிய பின்னடைவை பார்த்திருக்கும் வாய்ப்புகள் உண்டு. இந்த நிலைமை இன்னும் 67 நாட்களில் மாறிவிடும்.
சதயத்தில் சனி இருப்பதால், செலவுகள் திடீரென உயரக்கூடும், தேவையற்ற பயணம் மேற்கொள்ள நேரிடும். அக்டோபர் 17 வரை பெரிய அளவில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும், இல்லையெனில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும்.
மேலும் படிக்க | கோடீஸ்வர யோகம்.. குருவால் ஆவணி மாதம் உச்சம் செல்லும் ராசிகள்
கன்னி
சனியின் சதய நட்சத்திர இருப்பு, கன்னி ராசிக்காரர்களுக்கு பண விவகாரங்களை சிக்கலாக்கியிருக்கும். மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும், இல்லையெனில் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த காலகட்டத்தில் உங்கள் முயற்சிகள் பலனளிக்காமல் போகலாம். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு அக்டோபர் 17க்கு பிறகு நேரம் மாறும்.
சுபச் செலவுகளை செய்வத் நல்லது. ஏனெனில் பணப் பிரச்சனையை கொடுக்க சனீஸ்வரர் தயாராக காத்திருப்பதால், சுபச் செலவுகளுக்காக கடன் வாங்கினால், கடனுக்கு கடனும் ஆச்சு, எதிர்காலத்துக்கு சேமிப்பும் ஆச்சு என்று கொஞ்சம் ஆசுவாசப்படலாம்.
விருச்சிகம்
சனியின் கோபப்பார்வையால் உயர் இரத்த அழுத்தம் அல்லது வேறு ஏதேனும் இரத்தம் தொடர்பான பிரச்சனை ஏற்படும் வாய்ப்புகள் இருந்தாலும், அது அக்டோபர் 17க்க்கு பிறகு மாறிவிடும். தாயின் உடல்நிலை மோசமடையக்கூடும், எனவே கவனமாக இருக்கவும்.
காதல் மற்றும் திருமண உறவுகளில் வாய் வார்த்தையில் கவனமாக இருக்கவும். மதிப்பும் மரியாதைமாக இருந்த உறவுகளிடம் கெட்ட பெயர் வாங்க நேரிடும். பயணம் செய்யும் போது அல்லது வாகனம் ஓட்டும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என்றாலும் இன்னும் 67 நாட்களில் எல்லாம் மாறிவிடும்.
மேலும் படிக்க | அக்டோபர் 17 வரை ராகு சனி சேர்க்கை! நிம்மதியாய் இருக்க எளிய பரிகாரங்கள்
கும்பம்
கும்பத்திற்கு அதிபதியான சனி, அக்டோபர் 17 வரையில் உங்களுக்கு மன சஞ்சலத்தையும் நஷ்டத்தையும் கஷ்டத்தையுமே கொடுப்பார். மனம் நொந்து நூலானாலும், இன்னும் இரண்டு மாதங்களில், ராகு கிரகத்தின் பெயர்ச்சியால், மனம் நிம்மதி அடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக பணம் செலவழிக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள், ஏழரைச் சனியின் பிடி, அக்டோபர் 17க்கு பிறகு நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆனால், அதுவரை பல உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொள்ளக்கூடும். வாக்குவாதம் ஏற்படலாம். திருட்டு போகும் வாய்ப்புள்ளதால், உங்களின் உடமைகளை நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும். கால் வலி மற்றும் அசௌகரியத்தை அனுபவிக்கலாம். அடிக்கடி பரிசோதனை செய்து கொண்டு உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு அக்டோபர் 17க்கு பிறகு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஆகஸ்டில் உருவாகும் 2 ராஜயோகங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், உச்சம் தொடுவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ