மகரத்தில் இணையும் சனி - புதன் - சுக்கிரன்; ‘இந்த’ ராசிகளுக்கு பம்பர் பலன்கள்!
டிசம்பர் 2022 மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும்.
டிசம்பர் 2022 மாதம் கிரக நிலைகளின் அடிப்படையில் மிகவும் சிறப்பான மாதமாக இருக்கும். ஜோதிட சாஸ்திரப்படி டிசம்பர் கடைசி வாரத்தில் சனி, புதன், சுக்கிரன் ஆகிய மூன்றும் ஒரே ராசியான மகரத்தில் கூடும். சனி ஏற்கனவே மகர ராசியில் இருக்கிறார். மறுபுறம், டிசம்பர் 28 அன்று, புதன் கிரகம் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குள் நுழைகிறது. மேலும் அடுத்த நாள், டிசம்பர் 29, 2022 அன்று, சுக்கிரனும் தனுசு ராசியிலிருந்து வெளியேறி மகர ராசிக்குள் நுழைகிறார்.
டிசம்பர் மாத இறுதியில், சனியின் ராசியான மகரத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சனி கூடுவது மிக முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும். 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்றாலும், ஆனால் குறிப்பிட்ட 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் சுபமாகவும், செல்வத்தை அள்ளித தருவதாகவும் இருக்கும்.
மேஷம்:
டிசம்பரில் புதன்-சுக்கிரன் மற்றும் சனி சேர்க்கை மேஷ ராசிக்காரர்களுக்கு அளப்பரிய பலன்களைத் தரும். தொழிலில் விரைவான முன்னேற்றம் ஏற்படும். வேலையில் பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. புதிய தொழில் தொடங்கலாம். பண வரவும் சாதகமாக இருக்கும். எதிர்பாராத பண ஆதாயம் உண்டாகும்.
கன்னி:
மகர ராசியில் புதன், சுக்கிரன், சனி ஒன்று சேர்ந்தவுடன் கன்னி ராசிக்காரர்களுக்கு சுபகாலம் தொடங்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். சம்பளம் உயரும். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு.
மேலும் படிக்க | டிசம்பர் மாத பெயர்ச்சிகளால் அமோக வாழ்வை பெறும் ‘சில’ ராசிகள் இவை தான்!
கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு சனி, புதன், சுக்கிரன் வலுவான பலன்களைத் தருவார்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். புதிய வழிகளில் பணம் கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். திடீரென்று மூதாதையர் சொத்துக்கள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் உண்டாகும்.
மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு சனி-புதன்-சுக்கிரன் இணைவது பெரும் வெற்றியைத் தரும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் அபரிமிதமான அதிகரிப்பு ஏற்படலாம். தொழிலதிபர்கள் பெரும் பணம் பெறுவார்கள். இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | மாதங்களில் நான் மார்கழி! கண்ணனுக்கு பிடித்தமான 2022 மார்கழி மாத ராசி பலன்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ