ஆகஸ்ட் மாதம் மதம் ஜோதிடக் கண்ணோட்டத்தில் மிகவும் சிறப்பானதாக இருக்கிறது. இந்த நேரத்தில், கிருஷ்ண ஜெயந்தி, ரக்ஷாபந்தன், ஆவணி அவிட்டம், விநாயகர் சதுர்த்தி என பல பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. அதுமட்டுமல்ல, முக்கிய கிரகங்களின் பெயர்ச்சியும் இந்த மாதத்தில் அதிகமாக இருக்கும். சூரியன், சனி மற்றும் ராகுவின் நிலை மாற்றத்தால், மிகவும் ஆபத்தான சேர்க்கை உருவாகப் போகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆகஸ்ட் மாதத்தில் சூரியன், ராகு மற்றும் சனியால் உருவாகும் அசுப யோகம் பற்றிய விரிவான தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம். ஆகஸ்ட் மாதத்தில் எந்தெந்த ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்? இந்த மாதம் உருவாகும் மோசமான தோஷம் எது? தெரிந்துக் கொள்வோம்.


ஆகஸ்ட் மாதத்தில் கிரக பெயர்ச்சிகள்
செவ்வாய், புதன், சுக்கிரன் உள்ளிட்ட பல முக்கியமான கிரகங்கள் ஆகஸ்ட் 2024 இல் தங்கள் வீட்டை மாற்றப் போகின்றன. ஆகஸ்ட் 05, 2024 அன்று புதன் சிம்மத்தில் பெய்ரச்சியானார். ஆகஸ்ட் 16 அன்று, கிரகங்களின் ராஜாவான சூரியன் அதன் ராசியான சிம்மத்திற்குள் நுழைந்த பிறகு, மீண்டும் ஆகஸ்ட் 22, அன்று, புதன் வக்ர கதிக்கு மாறி, கடகத்திற்கு செல்கிறார். இதன்பிறகு ஆகஸ்ட் 26-ம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்குள் நுழைகிறார். மாத இறுதியில், ஆகஸ்ட் 29 ஆம் தேதி, புதன் மீண்டும் தனது இயக்கத்தை மாறுவார் என்றால்,  ஆகஸ்ட் 25, 2024 அன்று சுக்கிரன் கன்னி ராசிக்கு மாறுகிறார்.


சனி, ராகு மற்றும் சூரியன் ஆபத்தான கலவை 
ஆகஸ்ட் மாதத்தில் தந்தை மற்றும் மகன் ஜோடி சேரும்போது, அதாவது சூரியனும் சனியும் சேர்ந்து சமசப்தக யோகத்தை உருவாக்கினால், அதன் தாக்கம் நான்கு ராசிகளுக்கு மோசமாக இருக்கிறது. அதேபோல, சூரியன் ராகுவுடன் ஷடாஷ்டக யோகத்தை ஏற்படுத்துவார். இந்த இரண்டு யோகங்களும், மோசமானதாக மாறி, நான்கு ராசிக்காரர்களின் வாழ்க்கையில் கும்மியடிக்கப் போகின்றன.  


மேலும் படிக்க | ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...


ஆகஸ்ட் மாதத்தில் சூரியன் - ராகு - புதன் சேர்க்கையால் பாதிக்கபப்டும் ராசிகள்


மேஷம்
ஆவணி மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு சற்று மோசமானதாக இருக்கும் இந்த நேரத்தில் சூரியன் உங்கள் ஐந்தாவது வீட்டில் இருக்கிறார், செவ்வாய் உங்கள் மூன்றாவது வீட்டில் இருப்பதால், மேஷ ராசிக்காரர்கள் ஆகஸ்ட் மாதத்தில் எந்தவிதமான ரிஸ்க் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம்.  


கன்னி 


ஆரோக்கியத்தைப் பாதித்து உங்கள் உடல்நலத்தை பலவீனமாக்கும் வேலையை சனீஸ்வரர் செய்கிறார். மருத்துவ செலவுகள் அதிகமாகலாம். அதோடு, பல தடைகள் இருக்கலாம், எதிரிகள் உங்களுக்கு பிரச்சினைகளை உருவாக்குவதைக் காணலாம்.


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு ஆவணி மாதம் கவனமாக இருக்க வேண்டும். சூரியன், உங்கள் ராசிக்கு எட்டாம் வீட்டில் அமர்ந்து சனிபகவானின் தாக்கத்தில் இருப்பார். இதன் விளைவாக, அரசு வேலைகளில் பணிபுரிபவர்கள் இந்த காலகட்டத்தில் நிறைய ஏற்ற தாழ்வுகளை சந்திக்க நேரிடும். நினைத்த காரியம் கைகூடாமல் காலதாமதமாகிக் கொண்டே செல்லும்.


மீனம்
 மீன ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் சாதகமாக இருக்காது, ஏனெனில் இந்த காலம் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் காலகட்டமாக இருக்கும். உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் சூரிய பகவான் இருப்பதால் உங்கள் நிதி வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்படலாம். வேலையிலும் நீங்கள் ஏமாற்றத்தை உணரலாம். எனவே நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி.. ராஜ பொற்காலம் அடுத்த 270 நாட்களுக்கு இந்த ராசிகளுக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ