ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்...

Beatiful & Attracting Zodiacs : பிறரை கவரும் அழகு கொண்டவர்கள், கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டவர்கள், அனைவரும் விரும்பும் அழகைக் கொண்டவர்கள் எந்த ராசியை சேர்ந்தவராக இருப்பார்கள்? 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 15, 2024, 08:03 PM IST
  • எந்த ராசியை சேர்ந்தவர்கள் அழகாக இருப்பார்கள்?
  • பிறரைக் கவரும் ராசிகள்
  • கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொடுக்கும் ராசிகள்
ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே! உங்களை இப்படி அடிக்கடி யாராவது சொன்னால் நீங்க இந்த ராசி தான்... title=

ஒருவரின் அழகு, ஆரோக்கியம், அறிவு, அதிருஷ்டம், தோற்றம், ஆளுமை என அனைத்து குணங்களையும் முடிவு செய்வது ஒருவரின் ஜென்ம ராசி என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.  ஒவ்வொரு நபருக்கும் அவரது ஆளுமையின் சில அழகான அம்சங்கள் உள்ளன. வெளிப்புற தோற்ற அழகைப் பற்றி பேசினால், 5 ராசியை சேர்ந்தவர்கள் அழகானவர்கள் என்று கூறப்படுகிறது. 

பிறரை கவரும் அழகு கொண்டவர்கள், கவர்ச்சிகரமான தோற்றத்தைக் கொண்டவர்கள், எதிர்பாலினத்தவர் மட்டுமல்ல, அனைவரும் விரும்பும் அழகைக் கொண்டவர்கள் எந்த ராசியை சேர்ந்தவராக இருப்பார்கள்? தெரிந்துக் கொள்வோம்.  

மேஷம்
மிக அழகான ராசிகளின் பட்டியலில் மேஷ ராசிக்காரர்களுக்கும் இடம் உண்டு. மிகவும் கவர்ச்சிகரமான தோற்றத்திற்காக அறியப்படும் மேஷ ராசிக்காரர்கள், தங்களுடைய தன்னம்பிக்கை மற்றும் சுறுசுறுப்பால் பிற்ரை கவர்ந்து இழுப்பார்கள். ஆழமாக பார்க்கும் கண்கள், அழகான புன்னகை மற்றும் வெள்ளேந்தியான முகம் கொண்ட மேஷ ராசிக்காரர்களின் முகம் அழகானதாக இருக்கும்.  

மேலும் படிக்க | குரோதி ஆண்டு வரலட்சுமி விரதம் அபூர்வமாய் வரும் அற்புதமான நாள்! சூரிய பெயர்ச்சி நாளி்ல் நோன்பு!

சிம்மம்
அற்புதமான முடி, வசீகரமான முகம் மற்றும் நேர்கொண்ட பார்வை, நிமிர்ந்த நம்பிக்கையான நடை கொண்டவர்களாக சிம்ம ராசியினர் இருப்பார்கள். அச்சமற்றவர்கள் என்பதை அவர்களின் அழகான கண்களே தெளிவாக சொல்லிவிடும்.  சிறந்த உடல் மற்றும் முக அம்சங்கள் மட்டுமல்ல, உள்ளார்ந்த பண்புகளும், பிறரை அவர்களை நோக்கி ஈர்க்கும்.

அதிலும், சிம்ம ராசி பெண்கள், தங்களுடைய தைரியமான செயல்பாடுகள் மூலம் கூட்டத்திலும் தனித்துத் தெரிவார்கள். வழக்கத்திற்கு மாறான சிந்தனை மற்றும் செயல்பாடுகள் மூலம் தனித்துத் தெரியும் இவர்கள், அழகாக தோற்றமளிக்க அதிக முயற்சி செய்பவர்களாக இருப்பார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் அறிவும் அழகும் சேர்ந்த ஆளுமைத்தன்மையைக் கொண்டவர்கள். புத்திசாலிகள் மட்டுமல்ல, பார்ப்பவர்களை மீண்டும் ஒருமுறை திரும்பப் பார்க்கச் செய்யும் தோற்றம் கொண்டவர்கள். செய்யும் வேலையை திருந்தச் செய்யும் குணம் கொண்ட கன்னி ராசியினர் அழகை அநாயசமாக கையாள்வார்கள்.

தங்களை எப்படி அழகுபடுத்திக் கொள்ளவேண்டும், எந்த ஆடை பொருத்தமாக இருக்கும் என்பது உட்பட தங்கள் ஆளுமையை அழகாக வெளிப்படுத்தத் தெரிந்தவர்கள். கண்டிப்பானவர்களாக தோன்றினாலும், கன்னி ராசிக்காரர்கள் அனைவரின் கவனத்தையும் எளிதில் ஈர்க்கக் கூடியவர்கள். 

மேலும் படிக்க | கன்னிக்கு மாறும் சுக்கிரனால் கன்னியரின் கனவு நிறைவேறும்! சுக்கிரப் பெயர்ச்சி நற்பலன்கள்!

துலாம்

நேர்த்தியானவர்களாகவும் அதிநவீனத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கும் துலாம் ராசிக்காரர்கள் அன்பான நடத்தைக்கு பெயர் பெற்றவர்கள். அவர்களின் உடலமைப்பு கவர்ச்சியாக இருக்கும். அழகான தோற்றத்தை அவர்கள் சிரிப்பு கவர்ச்சிகரமானதாக மாற்றும். பிறரின் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் புரிந்துக் கொண்டு அதற்கேற்றாற்போல நடந்துக் கொள்ளும் துலாம் ராசிக்காரர்கள் அனைவரையும் கவரும் ஈர்ப்பு கொண்டவர்கள். ஒருவரின் அழகையும் வெளித்தோற்றத்தையும் தீர்மானிக்கும் பல்வேறு அம்சங்களையும் கொண்டவர்கள் துலாம் ராசியினர்.

மீனம்
படைப்பாற்றல் கொண்ட இளகிய மனம் படைத்தவர்கள் மீன ராசிக்காரர்கள். அழகான வெளித்தோற்றம் கொண்ட இந்த ராசிக்காரர்கள் உணர்திறன் வாய்ந்தவர்கள், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவர்கள். சுக்கிரனால் ஆளப்படும் இந்த ராசியை சேர்ந்தவர்களிடம் பிறர் மயங்குவார்கள். பிரமிக்க வைக்கும் ஆளுமைத்தன்மையைக் கொண்ட மீன ராசியினரின் முடி, உடல்வாகு மற்றும் அழகான பாதங்கள், கால்விரல்கள் பார்ப்பவரை பரவசப்படுத்தும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | சொந்த வீட்டிற்குக் குடியேறப்போகும் சூரியன்! ஆசியை ‘நாலு’ ராசிகளுக்கு அள்ளி வழங்கும் சூரியப் பெயர்ச்சி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News