சனி  வக்ர பெயர்ச்சி 2022: சனி கிரகம் இரண்டரை ஆண்டுகளில் ராசியை மாற்றுகிறது. ஆனால் 2022 ஆம் ஆண்டில், சனி கிரகம் இதுவரை 2 முறை ராசியை மாற்றியுள்ளது. நீதி தேவனான சனி பகவான் கடந்த 12 ஜூலை 2022 அன்று காலை 10.28 மணிக்கு மகர ராசிக்குள் நுழைந்தார். சனி தற்போது வக்ர நிலையில் உள்ளார். ஜனவரி 17, 2023 வரை சனி இந்த ராசியில் இருப்பார். இதன் பிறகு மீண்டும் கும்ப ராசிக்குள் நுழைவார். மார்ச் 29, 2025 வரை சனி கும்ப ராசியில் இருப்பார். மகர ராசியில் சனி இருப்பதால் சில ராசிக்காரர்களுக்கு மட்டுமே சுப பலன் கிடைக்கும். இந்த பட்டியலில் உங்கள் ராசியும் உள்ளதா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்:


சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். அதன் காரணமாக உங்கள் ஜாதகத்தில்  ராஜயோகம் உருவாகிறது. சனியின் வக்ர பெயர்ச்சி காலத்தில், நீங்கள் உங்கள் வேலையில் வெற்றி பெறலாம். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். பயணம் மேற்கொள்ள வாய்ப்புகள், கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்


தனுசு:


தனுசு ராசியின் நான்காம் வீட்டில்  சனி தேவன் வக்ர நிலையில் உள்ளார். வக்ர நிலையில் இருப்பது குடும்ப உறுப்பினர்களிடையேயான உறவைக் கெடுக்கும்.  என்றாலும், இந்த காலகட்டத்தில் நிதி நிலைமை வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிக்கிய பணத்தை மீட்க முடியும். தொழில், வியாபாரத்தில் சிறப்பான வெற்றி கிடைக்கும். வாழ்க்கையில் நிதி பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியங்கள் வெற்றி பெறும்.


மேலும் படிக்க | நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்


மீனம்:


சனி வக்ர நிலையில், மீன ராசிக்கு 11வது வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் நிதி ரீதியாக வெற்றி பெறுவீர்கள். வருமானம் உயரும் வாய்ப்புகள் உண்டாகும். முதலீடு செய்த பலன் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ