சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிடத்தில், ஒன்பது கிரகங்களில் சனிக்கு மிக முக்கியமான அந்தஸ்து வழங்கப்பட்டுகிறது. சனி நீதியின் கடவுள் மற்றும் கெட்ட செயல்களைச் செய்பவர்களை தண்டிக்கும் கிரகமாகக் கருதப்படுகிறது, அதனால்தான் சனியின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு பயம் இருக்கும். அதேபோல் சனி இரண்டரை வருடத்தில் ஒருமுறை தனது ராசியை மாற்றும். திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் இடப்பெயர்ச்சி அடைந்தார். அந்தவையில் சனிப்பெயர்ச்சி ஜனவரி 17 ஆம் தேதி நடந்து சரியாக 5 மாதங்கள் கழித்து தற்போது ஜூன் 17 ஆம் தேதி சனி வக்ர பெயர்ச்சி நடக்கப் போகிறது. சனியின் வக்ர இயக்கம் தொல்லைகளைக் கொடுத்தாலும், சில சமயங்களில் பலன்களையும் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக சனி பகவான் சிறந்த ஆயுளை தரக்கூடியவர். வேலை ஆட்கள் அடிமைகள், கூலி தொழில் செய்வது, கூலி வேலை விவசாயம் இரும்பு,எள் எண்ணெய் வியாபாரம் போன்றவை சனிபகவானின் காரகத்துவங்கள். சனிபகவான் ஒருவரின் ஜாதகத்தில் 3,6 ,7, 10, 11, ஆகிய இடங்களில் இருப்பது சிறப்பு சனி பகவானின் தசா காலம் 19 ஆண்டுகள். அவர் தசாபுத்தி அந்தார காலங்களில் மிகப்பெரிய வெற்றியை தருவார். இந்த நிலையில் சனி வக்ரமடையும் கால கட்டத்தில் என்னென்ன நன்மைகளை செய்யப்போகிறார் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக நாம் காணலாம்.


மேலும் படிக்க | இந்த ராசிகளின் கஷ்டகாலம் தீர்ந்துவிட்டது: புதன் உதயம் மகிழ்ச்சி மழையில் நனையவைக்கும்


வக்ர சனி இந்த ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றுவார்


சிம்ம ராசி: சிம்மம் ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி சுப பலன்களைத் தரும். இந்த ராசிக்காரர்களின் தடைப்பட்ட பணிகள் அனைத்தும் மீண்டும் வேகம் பெறும். நீங்கள் வேலையில் முன்னேற்றத்தை அடைவீர்கள். தொழில் திட்டங்கள் வேகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் நன்மை அடைவார்கள். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் இந்த நேரத்தில் பெறுவார்கள். சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுந்தாலும், குருபகவானின் பார்வையும் கிடைப்பதால் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும்.


தனுசு ராசி: தனுசு ராசிக்காரர்களுக்கு சனியின் வக்ர பெயர்ச்சி அபரிமிதமான வளர்ச்சியைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சில சமயங்களில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். பெரிய வெற்றியின் மகிழ்ச்சி உங்களை நம்பிக்கையுடன் நிரப்பும். உங்கள் வியாபாரம் வளரும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். மொத்தத்தில் இந்த நேரம் மகிழ்ச்சியாகரமாக நீங்கள் கழிப்பீரகள். நல்ல வேலையும் புரமோசனும் கிடைக்கும். பணவரவு நன்றாக இருக்கும் தேவைகள் நிறைவேறும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.


மகர ராசி: மகர ராசிக்காரர்களுக்கு வக்ர சனி சுப பலன்களைத் தருவார். மகர ராசிக்கு அதிபதியான சனியும் தலைகீழாகச் சென்று பல நன்மைகளைத் தருவார். வலுவான பண ஆதாயங்கள் இருக்கலாம், இது உங்களுக்கு நிதி பலத்தைத் தரும். இந்த நேரத்தில் நீங்கள் பெரிய சேமிப்பு அல்லது முதலீடுகளை செய்யவீர்கள். புதிய சொத்து வாங்கும் வாய்ப்பு உண்டு. வீட்டில் சுகபோகங்கள் அதிகரிக்கும். காதல் விவகாரங்களுக்கு இந்த நேரம் சிறப்பாக இருக்கும். உங்கள் மரியாதை அதிகரிக்கும். இருப்பினும் வீட்டிலும் குடும்பத்தில் உள்ளவர்களிடம் பேசும் போது கவனம் தேவை. யோசித்து நிதானமாக பேசுவது நல்லது.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)


மேலும் படிக்க | மேஷத்தில் குரு உதயம்: 5 ராசிக்காரர்களுக்கு பணக்கார ராஜயோகம், உங்க ராசி என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ