மே மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் பெருகும்

Monthly Horoscope May 2023: இந்த மாதம் அதிகப்படியான லாபம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 3, 2023, 05:42 PM IST
  • மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமானதாக இருக்கும்.
  • இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
  • உடல்நிலை நன்றாக இருக்கும்.
மே மாத கிரக மாற்றங்கள்: இந்த ராசிகளின் தலைவிதி மாறும், செல்வம் பெருகும் title=

மே மாத கிரக மாற்றங்கள், ராசிகளில் அதன் தாக்கம்: வேத சாஸ்திரங்களின்படி, அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒரு முறை ராசியை மாற்றுகின்றன. ஜோதிடத்தின் படி, மே மாதம் கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பார்வையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் மே மாதத்தில் பல பெரிய கிரகங்கள் ராசியை மாற்றும். சுக்கிரன், செவ்வாய் மற்றும் சூரியன் மே மாத தொடக்கத்திலேயே தங்கள் போக்கை மாற்றும். 

இத்துடன் மேஷ ராசியில் செவ்வாய் உதயமாகும். இந்த மாதத்தில், ஆண்டின் முதல் சந்திர கிரகணமும் நிகழும். இதில் சந்திரன் மற்றும் கேதுவின் சேர்க்கை இருக்கும். இது பல ராசிக்காரர்களுக்கு பலன் தரும். மே மாதம் நடக்கவுள்ள கிரக மாற்றங்களால் சில ராசிகளுக்கு சாதகமான பலன்களும் சிலருக்கு பாதகமான பலன்களும் கிடைக்கும். இந்த மாதம் அதிகப்படியான லாபம், மகிழ்ச்சி ஆகியவற்றை அனுபவிக்கவுள்ள அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு மே மாதம் மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த மாதம் நீங்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் முற்றிலும் ஆரோக்கியமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் தொடர்புடையவர்கள் இந்த மாதம் நல்ல பலன்களைப் பெறுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களும் நல்ல பலன்களைப் பெறுவார்கள்.

மிதுனம்:

மிதுன ராசிக்காரர்களுக்கு மே மாதத்தில் கிரகப் பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். தடைபட்ட உங்களின் வேலைகள் முடிவடையும். செயல்களில் வெற்றி உண்டாகும். சமூக மரியாதை கூடும். பொருளாதார ஆதாயம் கிடைக்கும்.

கடகம்:

கடக ராசிக்காரர்களுக்கு மே மாதம் நல்ல பலன்களைத் தரும். நீங்கள் உங்கள் வேலையை மாற்ற முயற்சிக்கிறீர்கள் என்றால், இந்த மாதம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வெளியூர் சென்று சில வேலைகளைச் செய்ய விரும்புபவர்களுக்கு இந்த மாதம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இந்த மாதம் நீங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். தொழில்-வியாபாரத்தில் மே மாதம் நேர்த்தியான நன்மைகளைத் தரும். 

சிம்மம்:

சிம்ம ராசிக்காரர்கள் மே மாதத்தில் பல நன்மைகளைப் பெறலாம். தொழில் ரீதியாக இந்த மாதம் சிறப்பாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும். அலுவலக பணி நிமித்தமாக பயணங்களை மேற்கொள்ள நேரிடலாம். இந்த பயணங்கள் சாதகமான பலன்களை அளிக்கும்.

மேலும் படிக்க | உதயமானார் குரு: இந்த ராசிகளுக்கு பம்பர் அதிர்ஷ்டம், முழு ராசிபலன் இதோ

கன்னி: 

கன்னி ராசியினருக்கு மே மாதத்தில் ஏற்படும் ராசி மாற்றம் பல விஷயங்களில் பலன் தரும், தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்கள் வேலையை மாற்ற நினைத்தால், இந்த நேரம் அதற்கு ஏற்றதாக இருக்கும்.

துலாம்

இந்த ராசிக்காரர்களுக்கு மே மாதம் கலக்கலாக இருக்கப்போகிறது. தொழில்-வியாபாரம் தொடர்பான பயணங்கள் உங்களுக்கு நல்ல பலன்களைத் தரும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு மே மாதத்தில் லாபம் கிடைக்கும். இந்த மாதம் உங்கள் உறவுகளில் சில பிரச்சனைகள் வரலாம், ஒருங்கிணைப்பு குறைபாட்டையும் காணலாம். பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்கள் இந்தக் காலத்தில் ஆதாயம் பெறலாம். 

மீனம்:

மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றிகரமானதாக இருக்கும். இந்த மாதம் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டிற்கு பிரியமானவர்கள் வந்து செல்வார்கள். உடல்நிலை நன்றாக இருக்கும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி 2023: 139 நாட்களில் இந்த ராசிக்காரர்களின் தலைவிதி மாறும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News