சதயம் நட்சத்திரம் 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு கிரகத்தையும் ஒரு நட்சத்திரத்தையும் மாற்றுகிறது. அதன்படி 30 ஆண்டுகளுக்குப் பிறகு சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கத்தின் கடந்த ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்குள் இடப்பெயர்ச்சி அடைந்தார், இதன் பிறகு அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டது. அதே சமயம் தற்போது மார்ச் 15ம் தேதி தனது சனி நட்சத்திரத்தை மாறினார். அதன் படி, மார்ச் 15 ஆம் தேதி அன்று சனி பகவான் ராகுவின் நட்சத்திரமான சதயத்தில் பெயர்ச்சியானார். மேலும் தற்போது வருகிற அக்டோபர் 17 வரை சனி இந்த நட்சத்திரத்தில் இருப்பார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் படி, சனிக்கும் ராகுவிற்கும் இடையே நட்பு உணர்வு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனியின் ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் தெரியும். ஆனால் இந்த நேரத்தில் சில ராசிக்காரர்கள், சிறப்பான பண பலன் மற்றும் முன்னேற்றம் பெறுவார்கள். இப்போது இந்த ராசிகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | தினசரி ராசிபலன் - இன்று அதிஷ்டம் பெரும் ராசிகள்!


மேஷம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி, சனியின் ராசி மாற்றம் மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில், சனி கர்மாவின் அதிபதி மற்றும் லாப வீட்டில் அமைந்திருக்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். அரசுப் பணிக்கு தயாராகும் நபர்களுக்கு வேலை கிடைக்கும். உங்களுக்கு மரியாதை கிடைக்கும். அரசியலில் தொடர்புடையவர்கள் சில பதவிகளைப் பெறலாம். ஆனால் இந்த நேரத்தில் சூதாட்டம், பந்தயம், மது போன்றவற்றில் இருந்து விலகி இருப்பது நல்லது.


மிதுனம்
சனி பகவானின் நட்சத்திர மாற்றம் மிதுன ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும். இந்த ராசியின் பெயர்ச்சி ஜாதகத்தில், எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாக சனி இருப்பதால், அதிர்ஷ்ட ஸ்தானத்தில் அமைந்துள்ளது. நீங்கள் வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ரகசிய வழியில் பணம் பெறப்படும். பயணங்களில் சில உடல் வலிகள் ஏற்படலாம். தொழில் ரீதியாக மிகவும் நல்ல பலன்கள் கிடைக்கும். பண ஆதாயத்திற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.


சிம்மம்
சனியின் ராசி மாற்றம் இந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தில் ஆறாம் மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சனி திருமண வாழ்வின் வீட்டில் அமைந்திருக்கிறார். இதனால், உங்களின் வருமான உயரும். கூட்டுத் தொழில் சாதகமாக இருக்கும். இதனுடன் நீதிமன்ற வழக்குகளிலும் நிவாரணம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். இந்த நேரத்தில் புதிய வணிக ஒப்பந்தங்களும் சாத்தியமாகும்.


துலாம்
இந்த ராசிக்காரர்கள் பொருளாதார ரீதியாக பலன் அடைவார்கள். உங்கள் பெயர்ச்சி ஜாதகத்தின் ஐந்தாம் மற்றும் நான்காம் வீட்டின் அதிபதியான சனி. இதனால் துலாம் ராசிக்காரர்களுக்கு தொழிலில் சுப பலன்களைத் தரும். மிகவும் மங்களகரமானதாக இருக்கும். பெரும் பண ஆதாயத்தைப் பெறுவார்கள்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | சூரியன் - சனி சேர்க்கை பிரிந்தது..! இந்த ராசிகளுக்கு தொடங்கியது நல்ல காலம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ