30 ஆண்டுகளுக்குப் பின் இணையும் சனி சுக்கிரன்... இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்
Saturn Venus conjunction Effects: மார்ச் மாதம் ஏழாம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், சனீஸ்வரன் ஏற்கனவே கும்ப ராசியில் இருப்பதால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள்.
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்: மார்ச் மாதம் ஏழாம் தேதி சுக்கிரன் கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக உள்ள நிலையில், அவர் சனி பகவானுடன் இணைவார். சனீஸ்வரன் ஏற்கனவே கும்ப ராசியில் இருப்பதால், 30 ஆண்டுகளுக்குப் பிறகு சுக்கிரனும் சனியும் இணைகிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப பலனை கொடுக்கும் சனி பகவானும், ஆடம்பர வாழ்க்கை வசதிகளை, செல்வங்களை அள்ளிக் கொடுக்கும் சுக்கிர பகவானும் இணைவதால் சில ராசிக்காரர்கள் அபரிமிதமான பலன்களை பெற்று வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள். திடீர் செல்வம், வேலை வியாபாரத்தில் வெற்றி, புதிய வாய்ப்புகள் என சுக்கிரன் மற்றும் சனியின் நினைவினால் எந்தெந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்ட அனுபவிக்கப் போகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.
மிதுன ராசி பலன்கள் (Gemini Zodiac Sign)
சுக்கிரன் பெயர்ச்சியினால் ஏற்படும் சனி சுக்கிரன் இணைவினால், மிதுன ராசியினருக்கு, ராஜபோக வாழ்க்கை காத்திருக்கிறது. திடீர் பண ஆதாயம், நிலையை மேம்படுத்தும். வேலையில் முன்னேற்றத்தை காணலாம். அலுவலக நிமித்தமான பயணத்தின் மூலம், வருங்காலத்தில் நல்ல ஆதாயம் இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்கு பயணம் செய்யும் வாய்ப்பு உண்டு. மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறுவார்கள். ஆடம்பரத்திற்காக செலவு செய்வீர்கள். மாணவர்கள் தேர்வில், நல்ல மதிப்பெண் பெறுவார்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்
துலாம் ராசிக்கான பலன்கள் (Libra Zodiac Sign)
துலாம் ராசியினரை பொறுத்தவரை, சுக்கிரன் பெயர்ச்சியும் அதனால் ஏற்படும் சுக்கிரன் சனி சேர்க்கையும், வாழ்க்கையில் அந்தஸ்தையும் கௌரவத்தையும் பெற்று தரும். வாழ்க்கையில் பொருள் வசதிக்கு குறைவே இருக்காது. நிறைவான, நிம்மதியான வாழ்க்கை வாழும் வாய்ப்பு கிடைக்கும். தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகம் இருக்கும். இதனால் வேலையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். நிலம், வீடு வாகனம் வாங்கும் வாய்ப்பு உண்டு. மூதாதையர் வகையில் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும்.
மேலும் படிக்க | நாளை புதன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, நல்ல காலம் ஆரம்பம்
மகர ராசிக்கான பலன்கள் (Capricorn Zodiac SIgn)
மகர ராசியினரை பொறுத்தவரை, சுக்கிரனின் பெயர்ச்சியும், அதனால் ஏற்படும் சுக்கிரன் சனி சேர்க்கையும், புதிய வருமான ஆதாரங்களை கொண்டு வந்து சேர்க்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பண வரவு மகிழ்ச்சி கொடுக்கும். நீண்ட நாள் கைக்கு வராத பணம், கைக்கு வருவதால் நிம்மதி உணர்வு ஏற்படும். வேலையில் தொழில் முன்னேற்றம் காணலாம். சக ஊழியர்கள் பணிகளை திட்டமிட்டபடி முடிக்க உதவுவார்கள். எதிர்பாராத சந்திப்புகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். முக்கிய நபர்களுடன் தொடர்பு ஏற்படும். குடும்பத்திருடன் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உண்டு.
கும்ப ராசிக்கான பலன்கள் (Aquarius Zodiac Sign)
கும்ப ராசியினருக்கு சுக்கிரனின் பெயர்ச்சியும், அதனால் ஏற்படும் சுக்கிரன் சனி சேர்க்கையும் வெற்றிகளை அள்ளிக் கொடுக்கும். பிள்ளைகள் தரப்பில் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். நபர்கள் போட்டி தேர்வு, நல்ல மதிப்பெண் பெற்று, இலக்கினை அடைவார்கள். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். புதிய வேலை வாய்ப்புகளால் வருமானம் அதிகரிக்கும். உறவினர்களால் மன அமைதியும் நிம்மதியும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக மாற்றி வந்த உடல் பிரச்சினை முடிவுக்கு வரும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள் 2024: இந்த ராசிகளுக்கு பண வரவு, அதிர்ஷ்டம், பொற்காலம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ