சனி ஜெயந்தி 2023: சனி தேவன் நீதியின் கடவுள் மற்றும் கர்மாவிற்கு ஏற்ற பலனை வழங்குபவர் என்று அறியப்படுகிறார். சனி பகவான் ஒரு நபரின் நல்ல மற்றும் கெட்ட செயல்களை கணக்கிட்டு அதற்கேற்ப பலனை கொடுக்கிறார் என்று கூறப்படுகிறது. சனிபகவானின் அருளால், ஒரு நபர் தனது வாழ்க்கையில் அமைதியையும் மகிழ்ச்சியையும்  பெறுகிறார். அதேசமயம், சனிதேவரின் கோபம் அந்த நபரின் வாழ்க்கையில் நெருக்கடியை ஏற்படுத்தி நிம்மதியை குலைக்கிறது. இவர் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் அவதரித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் இந்த நாளில் சனி ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு சனி ஜெயந்தி வரும் மே 19 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அமாவாசை திதியானது மே 18 ம் தேதி இரவு 09.42 மணிக்கு துவங்கி, மே 19 ம் தேதி இரவு 09.22 வரை உள்ளது. இந்த நேரத்தில் சனி வழிபாடு செய்வது சனி பகவானின் அருளை பெற்றுத் தரும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில் வருகிற 19 ஆம் சனி ஜெயந்தி சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலனைத் தரும். அந்தவகையில் ஐஸ்வர்யம், பணமழை பெறப்போகும் அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் மூலம் தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | குரு பெயர்ச்சியால் உருவான கஜலட்சுமி யோகம்: இந்த ராசிகளுக்கு பண வரவு, அனைத்திலும் வெற்றி


சனி ஜெயந்தி இந்த ராசிக்காரர்களுக்கு உகந்தது


ரிஷப ராசி: ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன் மற்றும் சனி ஆவார்கள். அதனால்தான் ரிஷபம் ராசிக்காரர்களிடம் சனி எப்போதும் கருணை காட்டுவார். ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி சுப பலன்களைத் தரும். இவர்கள் செல்வம், பதவி, மரியாதை எல்லாம் பெறுவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிரம்பி இருக்கும்.


கடக ராசி: கடக ராசிக்காரர்களிடம் சனிபகவான் கருணை காட்டுவார். பெற்றோரின் ஆதரவைப் பெறுவார்கள். சில முக்கியமான வேலைகள் முடிவடையும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பெரிய வெற்றி மனதை மகிழ்விக்கும். பண வரவு ஏற்படும்.


துலாம் ராசி: துலாம் ராசிக்காரர்களுக்கு சனிபகவான் சிறப்பு அருளை பொழிவார். இந்த நபர் ஏழைகளுக்கு உதவ வேண்டும். விலங்குகளுக்கு உணவளிப்பதன் மூலம், சனியின் அருளால் அபரிமிதமான வெற்றி, பணம், புகழ் மற்றும் மகிழ்ச்சியைப் பெறுகின்றன.


மகர ராசி: மகர ராசிக்கு அதிபதியான சனியும் இந்த ராசிக்காரர்களுக்கு அருள்பொழிவார். மகர ராசிக்காரர்களுக்கு சனியின் தாக்கத்தால் திறன் சிறப்பாக இருக்கும். சனி ஜெயந்தி வேலை-வியாபாரத்தில் முன்னேற்றத்தை தரும். அரசியலில் ஈடுபடுபவர்கள் பலன் அடைவார்கள்.


கும்ப ராசி: கும்ப ராசிக்கு அதிபதி சனி. கும்ப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நிவாரணம் தரும். பணம் சாதகமாக இருக்கும். கடின உழைப்பு, அன்பு, மரியாதை ஆகியவற்றின் பலனைப் பெறுவீர்கள்.


சனி ஜெயந்தி வழிபாடு
* சனி பகவானின் கோவிலுக்கு சென்று, அரச மரத்தடியில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.
* "ஓம் ஸம் சனீஸ்வராய நமக" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.
* சனி பகவான் ஆலயங்களுக்கு சென்று வழிபடவும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ