புதுடெல்லி: நவக்கிரங்களில் ஈஸ்வரப் பட்டம் பெற்ற ஒரே கிரகமான சனி 23 அக்டோபர் அன்று மகர ராசியில் சஞ்சாரம் செய்வார். அன்று அதிகாலை 04:19 மணிக்கு மகர ராசியில் பெயரும் சனீஸ்வரரின் சஞ்சாரத்தால் அனைத்து ராசிகளுக்கும் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். மகர ராசி என்பது, லட்சியம், கௌரவம், பொது வாழ்க்கை மற்றும் அதிகாரத்தின் சின்னமாகும். ஜோதிடத்தில், சனியின் எதிர்சுற்று இயக்கத்தின் விளைவு மிகவும் அதிகமாக உள்ளது, மகர ராசியில் சனியின் பெயர்ச்சி அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கும்? தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு, சனிபகவான் பத்தாம் மற்றும் பதினொன்றாம் வீட்டிற்கு அதிபதியாகி இப்போது உங்கள் சொந்த செயல்கள் மற்றும் தொழில், பொது உருவம் போன்றவற்றின் அதிபதியான பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இத்தகைய சூழ்நிலையில், சனி மகர ராசியில் சஞ்சரிப்பது மேஷ ராசிக்காரர்களுக்கு அவர்களின் தொழில் வாழ்க்கையில் சாதகமான பலன்களைத் தரும். 


மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனியிலும், சனி பகவானின் அருளைப்பெறும் ‘3’ ராசிகள்! 


நீண்டகாலமாக சாதகமான பலன்களுக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல காலம் பிறக்கும் காலம் இது. இது உங்கள் தொழிலில் ஸ்திரத்தன்மையையும் வளர்ச்சியையும் தரும். பொதுவாழ்க்கையில் கெளரவம் மற்றும் நற்பெயர் கிடைக்கும்.


ஆனால், உடல் நலம் மற்றும் குடும்ப வாழ்வில் சற்று கவனமாக இருக்க வேண்டும், இல்லாவிட்டால் இல்லற வாழ்வில் பல தடைகளை சந்திக்க வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில், ஆரம்பத்திலிருந்தே உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் பணியிடத்தில் சரியான சமநிலையை பராமரித்தால் சனீஸ்வரரின் பூரண கடாட்சம் உங்களுக்கு உண்டு.


அனுமனை தினமும் வணங்கி வருவதும், சனிக்கிழமைகளில் அனுமனுக்கு நிவேதனம் செய்வதும் ஆக்கப்பூர்வமான வளர்ச்சிக்கு உதவும்.


மேலும் படிக்க | ஐப்பசி 2022 மாத ராசிபலன்: சிம்மத்திற்கு ஏற்றம்! மீனத்திற்கு எச்சரிக்கை


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு யோககாரக கிரகம் சனி என்பதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். ரிஷப ராசிக்காரர்களுக்கு ஒன்பதாம் மற்றும் பத்தாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கும் சனீஸ்வரம்,  உங்கள் இலக்குகளை அடைய உங்கள் அதிர்ஷ்டம் உங்களை ஆதரவு கொடுப்பார். ஆனால், கூடுதலாக உழைக்க வேண்டும்.


மகர ராசியில் சனிப்பெயர்ச்சி உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் குடும்பத்தினருடனான உறவை மேம்படுத்தும். இதனால் குடும்பத்தில் இருந்த சண்டை சச்சரவு, கருத்து வேறுபாடுகள் அகலும். பணித் துறையில் ஏதேனும் மாற்றங்களைச் செய்ய முயற்சி எடுத்திருந்தால் அதுவும் சாதகமாக முடியும்.


முதலீடு செய்யும்போது சற்று கவனமாக இருக்கவும். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும். நன்கொடைகள் கொடுக்க வாய்ப்புகல் ஏற்படும். "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌஞ்ச: ஷனயே நமஹ்" என்ற சனியின் மந்திரத்தை ஜபிக்கவும்.


மிதுனம்: மிதுன ராசிக்காரர்களுக்கு, சனி அவர்களின் எட்டு மற்றும் ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியாக இருக்கிறார், மிதுன ராசிக்காரர்கள் தங்கள் உடல் நலத்தில் அக்கறை காட்டுவதுடன் தந்தையின் உடல் நலத்திலும் அக்கறை கொள்வது நல்லது. மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால் திடீரென்று உடல்நலம் தொடர்பான சில பிரச்சனைகள் ஏற்படும்.


பரம்பரை சொத்து கிடைக்கலாம்.முதலீடுகளில் இருந்து திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் சில தவறான புரிதல்களால், வாழ்க்கைத் துணையின் குடும்பத்தினருடனான உறவு கெட்டுப்போகலாம். எனவே, வாக்குவாதங்களைத் தவிர்த்து எச்சரிக்கையாக இருங்கள். சனிக்கிழமையன்று கோயிலில் கருப்பு எள் தானம் செய்யவும்.


கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு ஏழாம் மற்றும் எட்டாம் வீட்டிற்கு அதிபதி சனி. இப்போது அவர்கள் உங்கள் வாழ்க்கை துணை மற்றும் வணிக கூட்டாளியின் ஏழாவது வீட்டில் இருப்பார்கள். மகர ராசியில் சனி சஞ்சரிப்பதால், திருமணம் செய்து கொள்ள விரும்புவோருக்கு சாதகமாக இருக்கும்.


சனி உங்களை திருமண பந்தத்தில் இணைக்கும் காலகட்டமாக இது இருக்கும், இதனால் உங்களுக்கு சாதகமாக பலன் கிடைக்கும். திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். 


ஏழாம் வீட்டில் இருக்கும் சனியும் உங்கள் லக்னத்தைப் பார்க்கிறார். இதனால் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். சனிக்கிழமையன்று சனிபகவான் முன் எள்ளெண்ணெய் தீபம் ஏற்றவும்.


மேலும் படிக்க | Astro: வாழ்க்கையை புரட்டிப் போடும் குரு சாண்டள யோகம்; சில எளிய பரிகாரங்கள் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ