Shani: ஏழரை நாட்டு சனியின் கெடு பலன்களால் அவதி! இந்த தவறை தவிர்த்தால் போதும்
Shani Sade Sati Remedies: ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போதே சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனை ஆரம்பித்துவிடும். அவர்கள் என்ன செய்யலாம்?
ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் சனி சஞ்சரிக்கும் போதே சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி மற்றும் சனி மகாதசை தொடங்கிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலையில், ஏழரை நாட்டு சனியின் கெடு பலன்களைக் குறைக்க அனைவரும் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். இருப்பினும், இந்த பரிகாரங்களை மேற்கொள்ளும்போது சில விஷயங்களை மனதில் வைத்திருப்பது மிகவும் முக்கியம். எனவே இந்த விஷயங்களை மனதில் கொள்ளுங்கள்
ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசிக்காரர்களுக்கு சனி உச்சத்தில் சென்றுவிட்டார். ஏழரை நாட்டு சனியின் உச்ச நிலையின் தாக்கத்தில் இருக்கும் அவர்கள், தற்போது அதிக துன்பங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும், தற்போது அதன் உச்ச கட்டம் தொடங்கியுள்ளது. கும்ப ராசிக்காரர்களின் அதிபதியும் சனி என்பதால் இது முக்கியமான விஷயம் ஆகும்.
மகர ராசியில் ஏழரை சனியும், மீன ராசியில் சனி மகாதசையும் தொடங்கியுள்ளது. சனியின் தாக்கத்தை குறைக்க சனீஸ்வரருக்கு தீபம் ஏற்ற வேண்டும். அது கெடுபலன்கலைக் குறைக்கும்.
விளக்கு ஏற்றுபவர்கள் வீட்டில் இருந்து எண்ணெய், தீபம், திரி ஆகியவற்றை எடுத்துச் செல்ல வேண்டும். சனிக்கிழமையன்று எண்ணெய் வாங்கவேண்டாம்.அ து நல்லது. சனீஸ்வரரின் சிலையை தரிசிப்பதற்கு பதிலாக, அவரை அடையாளமாக வழிபடுவது சிறந்தது.
அதிலும், இன்னும் சில நாட்களில் சூரியன் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைய உள்ளார். கும்பத்திற்கு செல்லும் சூரிய பகவான் மார்ச் 14 வரை சனியின் ராசியான அங்கு இருப்பார். 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி கும்பத்தில் இருக்கிரார்.
மேலும் படிக்க | மகரத்தில் உருவாகும் புத-ஆதித்ய யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!
சூரியனின் சஞ்சாரத்தினால் கும்ப ராசியில் சனியும் சூரியனும் இணைவது பலருக்கும் பலவிதமான பலன்களைக் கொடுக்கும். சனியின் ராசியில் சூரியன், சனி போன்ற மிக முக்கியமான 2 கிரகங்களின் சந்திப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியனும் சனியும் இணைவது 12 ராசிகளையும் பாதிக்கும். எனவே இறைவழிபாடு அவசியம் ஆகும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உதயமாகும் குருவினால் சித்திரையில் சீரும் சிறப்பும் பெறும் ‘சில’ ராசிகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ