கும்பத்தில் இணையும் சனி -சூரியன்! சுகபோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!

ஜோதிடத்தின்படி, பிப்ரவரி 13 அன்று, சூரியன் சனி, கும்ப ராசிக்குள் நுழையப் போகிறார். கும்பத்தில் ஏற்கனவே சனி இருக்கும் நிலையில், அங்கே சனி சூரியன் சேர்க்கை நடக்கும்.  இது  குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுக்கும்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Feb 3, 2023, 08:45 AM IST
  • உத்தியோகத்தில் புதிய உயரங்களை அடைய வாய்ப்பு உண்டாகும்.
  • மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பெரிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு.
  • பணியிடத்தில் உங்கள் அதிகார வரம்பு அதிகரிக்கும்.
கும்பத்தில் இணையும் சனி -சூரியன்! சுகபோகத்தை அனுபவிக்க போகும் ‘சில’ ராசிகள்!  title=

பிப்ரவரியில் சூரியன் பெயர்ச்சியாகி கும்ப ராசிக்குள் நுழைய உள்ளார். சூரியனின் ராசியானது பிப்ரவரி 13, 2023 அன்று மாறி, மார்ச் 14, 2023 வரை சனியின் ராசியான கும்பத்தில் இருக்கும். மறுபுறம், 30 ஆண்டுகளுக்குப் பிறகு, சனி கும்பத்தில் உள்ளது. இப்படி சூரியனின் சஞ்சாரம் கும்ப ராசியில் சனியும் சூரியனும் இணையும். சனியின் ராசியில் சூரியன், சனி போன்ற மிக முக்கியமான 2 கிரகங்களின் சந்திப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். சூரியனும் சனியும் இணைவது 12 ராசிகளையும் பாதிக்கும் என்றாலும், சனி-சூரியன் சேர்க்கை 3 ராசிக்காரர்களுக்கு விசேஷ பலன்களைத் தரும். அவர்கள் சுக போக வாழ்க்கை வாழ்வார்கள்.

சனி மற்றும் சூரியன் சேர்க்கையால் சில ராசிகளின் தலைவிதி ஒளிரும்:

மேஷம்: 

மேஷ ராசிக்காரர்களுக்கு கும்ப ராசியில் சூரியன் - சனி இணைவது மிகவும் சுப பலன்களைத் தரும். பிப்ரவரி 13-ம் தேதி சூரியன்அருளால் மேஷ ராசிக்காரர்களின் விருப்பங்கள் நிறைவேறும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். நம்பிக்கை இன்னும் அதிகமாகும். சவால்கள் விலகும். உங்கள் பணி பாராட்டப்படும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கடின உழைப்பிற்கான பலன்கள் கிடைத்து, சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிட்ட வாய்ப்பு அதிகம் உள்ளது.

ரிஷபம்: 

இந்த சூரிய சஞ்சாரம் ரிஷப ராசிக்காரர்களின் தொழிலுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இவர்கள் வேலையில் முன்னேற்றம் அடைவார்கள். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் சந்தோஷமும் இருக்கும். உத்தியோகத்தில் புதிய உயரங்களை அடைய வாய்ப்பு உண்டாகும். உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பெரிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் உங்கள் அதிகார வரம்பு அதிகரிக்கும். பொருளாதார ஆதாயம் உண்டாகும். எதிர்காலத்தில் பணம் சம்பாதிக்க புதிய வழிகள் இருக்கும்.

மேலும் படிக்க | உதயமாகும் குருவினால் சித்திரையில் சீரும் சிறப்பும் பெறும் ‘சில’ ராசிகள்!!

மகரம்: 

இந்த சூரியன் - சனி சேர்க்கை மகர ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். சூரியனின் ராசி மாற்றத்தால் இவர்களுக்கு பொருளாதார நிலையில் ஏற்றம் உண்டாகும். பணம் கிடைக்கும். வாழ்வில் சுகபோகங்கள் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும். சொத்துக்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். வேலை-வியாபாரத்திற்கும் நல்ல நேரம்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | மகரத்தில் உருவாகும் புத-ஆதித்ய யோகம்! ‘இந்த’ ராசிகளுக்கு பொற்காலம்!

மேலும் படிக்க | 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் இணையும் சூரியன் - குரு! ‘இந்த’ ராசிகளுக்கு குபேர யோகம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News