ஜூலை 12ம் தேதி முதல் சனியின் அருளால் அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்
சனி வக்ர பெயர்ச்சி 2022: ஜூலை 12 முதல், சனியின் அருள் பெற உள்ள சில ராசிகள், புதிய வேலை, பண வரவு உட்பட பல சாதகமான பலன்களை பெற்று, வாழ்க்கையில் பெரும் முன்னெற்றத்தை பெறுவார்கள்.
நீதியின் கடவுளான சனி பகவானின் வக்ர பெயர்ச்சி, 5 ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையப் போகிறது. ஜோதிடத்தில், கிரகங்களின் பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது, கிரகங்களின் சஞ்சரித்தால், அதுவும் சனி பகவான் போன்ற மிக முக்கியமான கிரகமாக இருக்கும் நிலையில், அது அனைவரின் வாழ்க்கையையும் பாதிக்கிறது.
இந்த நேரத்தில் சனி தனது சொந்த ராசியான கும்பத்தில் வக்ர நிலையில் இருக்கிறார். ஜூலை 12, 2022 அன்று, சனி வக்ர நிலையில் மகர ராசியில் சஞ்சரிக்கிறார். அப்போது சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். சனி வக்ர பெயர்ச்சி எந்த ராசிக்காரர்களுக்கு சாதகமாக அமையும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சனியின் வக்ர பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பெரிய நிதி பலன்களைத் தரும். சனிப்பெயர்ச்சி இவர்களுக்குப் பல வகைகளில் நன்மையைத் தரும். நீண்ட நாட்களாக தடைப்பட்ட பணிகள் நடைபெறும். வேலை தேடுபவர்களின் காத்திருப்பு முடிவுக்கு வந்து புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளும் அதிக லாபம் அடைவார்கள். கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | அனைத்து தோஷங்களும் நீங்க, சிவனை வில்வ இலை கொண்டு பூஜிக்கவும்
சிம்மம்
மகர ராசியில் சனியின் பிரவேசம் சிம்ம ராசிக்காரர்களின் வாழ்வில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். பதவி உயர்வுபெறுவதற்கான முழுமையான வாய்ப்புகள் உள்ளன. புதிய வேலையும் கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பாக நடந்து கொள்ளுங்கள். வேலையில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரம் பெருகும். எல்லா வகையிலும் பலன் கிடைக்கும் என்று சொல்லலாம்.
கன்னி
சனியின் இந்த ராசி மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பணம் சாதகமாக இருக்கும். வருமானம் அதிகரிப்பதால் பொருளாதார நிலை வலுப்பெறும். வேலை செய்பவர்கள் பெரிய பதவி அல்லது சாதனையைப் பெறலாம். பதவி உயர்வு அல்லது புதிய வேலை கிடைப்பதற்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன.
துலாம்
சனிப் பெயர்ச்சி துலாம் ராசிக்காரர்களுக்கு கௌரவம், பணம் என அனைத்தையும் தரும். புதிய வேலை கிடைப்பது உறுதி. பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக கைக்கு வராத பணம் கிடைக்கும். மொத்தத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். பிரச்சனைகள் தீரும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
மேலும் படிக்க | ஜாகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்
தனுசு
சனியின் வக்ர பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களின் முன்னேற்றத்தில் இது வரை இருந்து வரும் தடைகளை நீக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும், வெற்றிகள் ஒன்றன் பின் ஒன்றாக வரும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். கௌரவம் பெறுவீர்கள். வியாபாரிகளும் லாபம் அடைவார்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR