ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

வியாழன் செல்வ வளத்தை பெறுவதற்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடைவதற்கும் ஆன பரிகாரங்களை செய்ய மிகவும் சிறப்பான நாள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 22, 2022, 08:05 PM IST
  • செல்வ செழிப்புடன் இருக்க சில எளிய பரிகாரங்கள்.
  • மகா லக்ஷ்மியின் அருளால் செல்வமும் வந்து சேரும்.
  • வியாழன் அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது.
ஜாதகத்தில் வியாழன் கிரகம் வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்கள் title=

கிழமைகளில் வியாழனுக்கு தனி சிறப்பு உண்டு. இது குருவாரம் எனவும் அழைக்கப்படுகிறது.  உலகையே காத்து ரட்சிக்கும் விஷ்ணுவுக்கு உகந்த நாள். இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் மகா லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைகிறாள். பகவான் விஷ்ணுவின் அருளுடன் அன்னை லட்சுமியின் அருளும் கிடைப்பதால் வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி மகிழ்ச்சியான வாழ்வைப் பெறலாம்.

ஜாதக தோஷத்தினாலும், கிரக  நிலைகளாலும் சிலருக்கு பிரச்சனைகள் விடாமல் துரத்திக் கொண்டிருக்கும். வாழ்க்கையில் அல்லப்படுபவர்கள், வியாழன் அன்று செய்யப்படும் சில ஜோதிட பரிகாரங்களை செய்தால், மலை போல் வரும் பிரச்சனைகள் பனி போல் நீங்கி விடும்.

வியாழக்கிழமை பரிகாரங்கள் பகவான் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் ஆசீர்வாதத்தைத் பெற்று தருவதோடு மட்டுமல்லாமல், ஜாதகத்தில் வியாழன் கிரகத்தை பலப்படுத்துகின்றன. வியாழன் கிரகம் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை மற்றும் அதிர்ஷ்டத்திற்கு காரணமாக கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன் அன்று விரதம் இருந்து வாழைக்கு  நீர் ஊற்றவும். இதனால் திருமணத்  தடைகள் நீங்கும். மறுபுறம், திருமணமானவர்கள் இந்த விரதத்தை கடைப்பிடித்தால், அவர்களின் திருமண வாழ்க்கையில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்

வியாழன் தோஷம் நீங்க, வியாழன் அன்று குளிக்கும் நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் குளிக்கவும். மேலும், குளிக்கும் போது, ​​'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். முடிந்தால் வியாழன் அன்று மஞ்சள் நிற ஆடைகளை அணியவும்.

வியாழன் அன்று குங்குமம், மஞ்சள் சந்தனம் அல்லது மஞ்சள் தானம் செய்யவும். அதோடு நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ளவும். இதன் காரணமாக ஜாதகத்தில் வியாழன் வலுப்பெற்று சுப பலன்களைத் தரத் தொடங்குகிறார்.

வியாழன் அன்று அதிகாலையில்  ஸ்நானம் செய்து, விஷ்ணுவையும், அன்னை லட்சுமியையும் ஒன்றாக வழிபடுங்கள். இப்படிச் செய்வதால் கணவன்-மனைவிக்குள் இடைவெளி என்பதே இருக்காது. அவர்கள் எப்போதும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அனுபவிப்பார்கள். லக்ஷ்மியின் அருளால் செல்வமும் வந்து சேரும்.

விஷ்ணுவை வழிபடும் போது, ​​அவருக்கு முன்னால் நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் பூக்களுடன் துளசியினால் அர்ர்சனை செய்து வழிபடவும். வியாழன் காலை, வீட்டின் பிரதான வாசலில் கோலம் இட்டு  சிறிது வெல்லம் வைக்கவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் உண்டாகும். பசுவிற்கும் உணவளிக்கவும்.

வியாழன் அன்று உங்கள் சக்திக்கு ஏற்ப மஞ்சள் நிறத்தில் உள்ள பருப்பு, பழங்கள் போன்றவற்றை பிராமணர்களுக்கு தானம் செய்யுங்கள்.

வியாழன் அன்று யாருக்கும் கடன் கொடுக்கவோ, யாரிடமும் கடன் வாங்கவோ கூடாது என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். இதன் காரணமாக, ஜாதகத்தில் வியாழன் பலவீனமாகி, குறிப்பிட்ட நபர் நிதி சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

இந்து மதம் மற்றும் ஜோதிடத்தில், கூறப்பட்டுள்ள மேலே கூறியுள்ள சில பரிகாரங்களில், ஏதேனும் ஒன்றை தொடந்து செய்து வந்தால், நிச்சயம் பலன் கிடைக்கும்.  

மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி 2022: சரியாக 9 நாட்களில் இந்த ராசிகளின் பொன்னான நாட்கள் ஆரம்பம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News