சுக்கிரன் பெயர்ச்சி பயன்கள்: மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கான கிரகமான சுக்கிரன் தனது ராசியை ஜனவரி 18 அன்று மாற்றுகிறார். சுக்கிரன் தனது ராசியை விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு மாற்றுவார். ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் ஒரு சுப கிரகமாக கருதப்படுவதால், இந்த கிரகம் ராசி மாறும்போதெல்லாம், அது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. ஆனால், சில சமயங்களில் ஒரு சுப கிரகத்தின் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரிஷபம் உட்பட 4 ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் மாற்றம் சிறப்பான பலன்களை தரும். தை மாதத்தில் குறிப்பிட்ட 4 ராசிகளில் சுக்கிரன் ராசி மாறுவதால் ஏற்படும் சுப பலன்களை தெரிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரிஷபம்


சுப கிரகமான சுக்கிரனின் ராசி மாற்றம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். சுக்கிரனின் சஞ்சாரத்தால் பல வருமான ஆதாரங்கள் தெரிய வரும். வேலையில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உய்ர்வைப் பெறுவார்கள். மேலும், இந்த காலகட்டத்தில், நீங்கள் வணிகத்தில் நிதி நன்மைகளை காண்பீர்கள். திருமண வாழ்க்கையில் நல்ல செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் உயர்வு இருக்கும். செல்வ வளம் பெருகும். வீடு அல்லது வாகனம் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை நிமித்தமாக பயணம் செய்வது நன்மை தரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை  அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் (Health Tips) மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். முயற்சிகள் சாதகமாக முடியும். 


துலாம்


சுக்கிரனின் ராசி மாற்றம் துலாம் ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்களைத் தரும். சுப கிரகம் லாப அள்ளிக் கொடுக்கும் என்பதால், வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். கைக்கும் வராமல் இருக்கும் பணம் மீட்கப்படும். வியாபாரத்தில் அபரிமிதமான முன்னேற்றம் ஏற்படும். மேலும் பல வருமான ஆதாரங்களும் அதிகரிக்கும். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரியத்தை சாதிப்பீர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த சஞ்சலம் குறையும். இல்லத்தில் சுபகாரிய நிகழ்சிகள் கைகூடும்.


தனுசு


சுக்கிரன் சஞ்சாரத்தின் போது செல்வம் பெருகும். தினசரி வருமானம் உயரும். வியாபாரத்தில் முதலீடு செய்து லாபம் அடைவீர்கள். பணம் தொடர்பான கவலைகள் நீங்கும். புதிய வேலை வாய்ப்பு கிடைக்கலாம். சுக்கிரன் சஞ்சாரத்தின் போது பணம் சம்பாதிக்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் எந்த நிதி சார்ந்த வேலைகளைச் செய்தாலும் அதில் வெற்றி கிடைக்கும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்னியோன்யம் அதிகரிக்கும்.  பழைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். 


மேலும் படிக்க | செவ்வாய் - சனி சேர்க்கை... அதிர்ஷ்ட மழையில் நனையும் ‘4’ ராசிகள்!


மீனம்


சுக்கிரனின் ராசி மாற்றம் மீன ராசியினருக்கு வரப்பிரசாதமாக அமையும். இந்த காலகட்டத்தில், வருமானத்தில் பெரிய லாபம் இருக்கும். முந்தைய முதலீடுகளால் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். குடும்பத்தில் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். தெய்வ காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சவாலான செயலை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் செய்பவர்கள் பெரும் பொருளாதார லாபத்தைப் பெறுவார்கள். காரியங்களில் அனுகூலம் ஏற்படும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும்.


சுக்கிர பகவானை மகிழ்விப்பது எப்படி?


சுக்கிர பகவானைப் பிரியப்படுத்த எளிதான வழி உங்களை சுத்தமாக வைத்துக் கொள்வதுதான். சுத்தமான ஆடைகளை அணிந்தால் சுக்கிர பகவானின் அருள் கிடைக்கும். மேலும், நறுமண வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதன் மூலம் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தைப் பெறலாம். இது தவிர, சுக்கிரன் கிரகம் வலுவாக இருக்க வைரம் அணிவது பலன் கொடுக்கும் என ஜோதிட நிபுணர்கள் கூறுகின்றனர். ஜோதிட சாஸ்திரப்படி, சுக்கிரனின் ஆசி பெற, சுக்கிரனின் விதை மந்திரமான ‘ஓம் ஷும் சுக்ராய நமஹ’ என்ற மந்திரத்தை தினம் 108 முறை ஜபிக்க வேண்டும்.


பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.


மேலும் படிக்க | உத்திராடத்தில் சூரியன் பெயர்ச்சி... 12 ராசிகளுக்கான பலன்கள் இதோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ