ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில், 4 ராசிக்காரர்களுக்கு மிகவும் பிரமாதமாக இருக்கும். இன்று, நவம்பர் 11, 2022 அன்று, விருச்சிக ராசியில் சஞ்சரித்த பிறகு, சுக்கிரன் கிரகம் வரும் டிசம்பர் மாதத்தில் இரண்டு முறை ராசியை மாற்றுகிறது. மாதம் இருமுறை சுக்கிரன் ராசி மாறுவது 4 ராசிக்காரர்களுக்கு அபரிமிதமான பலன்களைத் தரும். சுக்கிரன் 3 டிசம்பர் 2022 அன்று தனுசு ராசியிலும், பின்னர் 29 டிசம்பர் 2022 அன்று மகர ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படி 2 முறை சுக்கிரன் சஞ்சரிப்பது 4 ராசிக்காரர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார வளத்தை தரும். டிசம்பர் மாதத்தில் சுக்கிரன் சஞ்சாரம் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக அமையும் என்பதை தெரிந்து கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கீழ்கண்ட ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் சுக்கிரனின் சஞ்சாரத்தால் பிரகாசிக்கும்!


ரிஷபம்: 


ரிஷபம் ராசியின் அதிபதி சுக்கிரன். சுக்கிரனின் சஞ்சாரம் இந்த ராசிகளுக்கு பண பலன்களை தரும். அவர்களின் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் சம்பளம் கூடும். பண சேமிக்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புதிய தொழில் தொடங்கலாம். இந்த நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தை மிகவும் கவனித்துக் கொள்ளுங்கள்.


மிதுனம்: 


மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் நன்மை தரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். இருப்பினும், செலவுகள் அதிகரிப்பதால் உங்களால் சேமிக்க முடியாது. வாழ்வில் வசதிகள் பெருகும். எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சியைத் தரும்.


மேலும் படிக்க | சூரிய பெயர்ச்சி: அதிர்ஷ்டத்தில் சூரியனைப் போல் பிரகாசிக்கும் ‘சில’ ராசிகள் இவை தான்! 


கடகம்: 


கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் ராசி மாற்றம் நன்மை தரும். எந்தவொரு தொழில் பிரச்சனையும் சுமுகமாக தீர்க்கப்படும். இருப்பினும், அனைவரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்கவும். வாழ்க்கையில் ஆடம்பர பொருட்கள் வாங்குவீர்கள். பண வரவு அதிகரிக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும்.


கன்னி: 


கன்னி ராசிக்காரர்களுக்கு, சுக்கிரனின் இரு ராசி மாற்றங்களும் மிகவும் சுபமாக அமையும். அவர்களின் வாழ்வில் எல்லா வகையிலும் மகிழ்ச்சி வரும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். தாயாரின் உதவியால் பெரிய பிரச்சினை தீரும். வருமானம் அதிகரிக்கும். நீங்கள் எதிர்பாராத வகையில் பணம் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | சுக்கிரன் மாற்றத்தால் உருவாகும் அஷ்டலக்ஷ்மி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு சுக்கிரதசை 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ