தீர்க்க சுமங்கலி வரம் தரும் வரலட்சுமி விரதம் நாளைய தினம், (05-08-22) வெள்ளிக்கிழமை அன்று கடைபிடிக்கப்படுகிறது. திருமணமான பெண்கள் கணவரின் ஆயுள் பலம் வேண்டி இந்த விரதத்தை கடைபிடிக்கின்றனர். இந்த விரதத்தை கடைபிடிப்பதால், தீர்க்க சுமங்கி வரம் கிடைத்து, ஆயுள், ஆரோக்கியம் கிட்டும். அது மட்டுமலாமல் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. வரலட்சுமி விரதம் இருக்கும் பெண்களுக்கு மாங்கல்ய பலம் நீடிப்பதோடு செல்வம், வெற்றி, குழந்தைப் பேறு, கல்வி உள்ளிட்ட எல்லா வளங்களும் வாழ்க்கையில் கிடைக்கும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வரலட்சுமி விரதத்தின் போது, காலையில் ஸ்நானம் செய்து, தீபம் ஏற்றி, பூஜைக்கான அம்மனை நன்கு அலங்கரித்து, அம்மனை அழைத்து பூஜையில் வைக்க வேண்டும். அம்மனை பட்டுத்துணியல்  அலங்கரிக்க வேண்டும். வெள்ளை கறுப்பு நிறத்தில் வஸ்திரம் இருக்கக்கூடாது. மஞ்சள் நிறம், சந்தன நிறத்தில் உள்ள வஸ்திரம் கொண்டு அலங்கரித்தால் சிறப்பு. அம்மனை கலசத்தில் வைத்து சக்திக்கு ஏற்றவாறு அலங்கரிக்கலாம்.


மேலும் படிக்க | ஸ்ரீவரலட்சுமி விரத கொழுக்கட்டை... எளிதாய் செய்ய சில டிப்ஸ்


அம்மன் அலங்காரம் செய்த உடன் பூஜை முடிந்து கட்டிக் கொள்ளும் மஞ்சள் சரடு தயாரிக்க வேண்டும்.  நைவீஏத்தியத்திற்கு பூரண கொழுக்கட்டை அப்பம் வடை போன்றவற்றை தயாரித்து, தயாராக வைக்க வேண்டும். பூஜை செய்பவர்கள் பட்டு வஸ்திரம்தான் அவசியம் அணிய வேண்டும். சரிகை இருப்பது அவசியம். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை, பாக்கு,வளையல், ரவிக்கை துணி கொடுத்து ஆசி பெற வேண்டும்.


வரலட்சுமி பூஜை செய்வதற்கு முன்பாக மஞ்சள் பிள்ளையார் பிடித்து,  விநாயகர் வழிபாடு  செய்ய வேண்டும். வரலட்சுமி நோன்பை கடைபிப்பவர்கள் பெரும் பேறு பெற்றவர்கள் என்று பத்ம புராணம் கூறுகிறது. பெரிய அளவில் செலவு செய்து பூஜை செய்ய முடியாவிட்டாலும், வரலட்சுமி பூஜையை மிக எளிமையாக ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். தீபம் ஏற்றி, கற்பூரம் ஏற்றி வரலட்சுமியை வழிபட்டாலும் அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். மன ஈடுபாடு மட்டுமே எல்லாவற்றையும் விட முக்கியமானது. 


மேலும் படிக்க | சனியின் 'வக்ர பார்வை' : 2023 வரை மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சில ராசிகள்!


மேலும் படிக்க |  நீதி தேவன் சனி பகவானின் அருளை முழுமையாக பெறும் ‘3’ ராசிகள்


மேலும் படிக்க |  Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ