கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா... சில எளிய பரிகாரங்கள்!
தீராத கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர்.
தீராத கடன் பிரச்சினை என்பது ஒருவரின் உயிரை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது. ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு காரணத்திற்காக கடன் வாங்குகின்றனர். பின்னர், அந்த கடனை திரும்ப செலுத்த முடியாமல் திணறிப்போய் விடுகின்றனர். கழுத்தை நெரிக்கும் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
கடன்களை தீர்க்கும் காலபைரவர்
கடன் பிரச்சினையை தீர கால பைரவருக்கு செய்யும் மிளகு பரிகாரம் கை கொடுக்கும். 27 மிளகுகளை ஒரு சிறிய வெள்ளை துணியில் வைத்து மூட்டையாகக் கட்டிக் கொள்ள வேண்டும். அதனை நீங்கள் தூங்கும் முன் உங்கள் தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். பின்னர் காலை எழுந்தவுடன் குளித்து விட்டு, இந்த மிளகு மூட்டையை எடுத்துக் கொண்டு கோவிலுக்குச் செல்ல வேண்டும். அங்கு கால பைரவர் முன் நின்று ஒரு அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி, இந்த மிளகு மூட்டையை அதில் நனைத்து வைத்து தீபம் ஏற்றவேண்டும். பைரவருக்கான இந்த பரிகாரத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக்கிழமை தோறும் செய்து வர வேண்டும்.
கடனை தீர்க்கும் பிரதோஷ வழிபாடு
பிரதோஷ காலத்தில், சிவபெருமானை வணங்குவதன் மூலமும், தொல்லையிலிருந்து விடுபடலாம். அதுவும் செவ்வாய்க்கிழமையில் வரும் பிரதோஷம், கடன் விமோசன பிரதோஷம் என கூறப்படுகிறது. அபிஷேகப் பிரியரான சிவபெருமானுக்கு, பிரதோஷ காலத்தில் பசும்பால் அல்லது இளநீரால் அபிஷேகம் செய்யலாம். இந்நாளில் நந்தி பெருமானை வணங்கி, அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி வழிபடுவதன் மூலமும் கடன் தொல்லை மட்டுமல்ல, அனைத்து விதமான தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும். எனவே பிரதோஷ காலத்தில், குறிப்பாக செவ்வாய்க்கிழமை வரும் பிரதோஷத்தில், அருகில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று சிவபெருமானை வழிபடுவதும், சிவபூஜை செய்வதும், கடன் தொல்லை நீங்கி, நிம்மதியான வாழ்வு பெற உதவும்.
மேலும் படிக்க | நேருக்கு நேர் வரும் சூரியன் சனி: இந்த ராசிகளுக்கு பணக்கார யோகம், வெற்றிகள் குவியும்
குங்குமம் பரிகாரம்
குங்குமம் பரிகாரம் வியாழக்கிழமை தோறும் குங்குமம் வாங்கி வைத்துக் கொண்டு வெள்ளிக்கிழமை அன்று அம்மன் கோவிலுக்கு சென்று அம்மனுக்கு குங்குமத்தை கொடுத்து விட்டு வர கடன் பிரச்சினை நீங்கும். தொடர்ந்து 11 வாரம் குங்குமம் வாங்கி வைத்து வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு கொடுத்து விட்டு வர வேண்டும்.
குல தெய்வ வழிபாடு
குல தெய்வ வழிபாட்டை மறந்தவர்கள், பித்ருக்களுக்கான திவசம், பணம் போன்றவற்றை ஒழுங்காக செய்யாதவர்கள் ஆகியோர்களுக்கு கடன் தொல்லை என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. பல சமயங்களில், வாழ்க்கையில் நாம் சந்திக்கும் பல துன்பங்களுக்கு கடன் தொல்லை தான் முக்கிய காரணமாக அமைந்து விடுகிறது. குடும்பத்தில் நிம்மதி குறைதல், மனக்கலக்கம் ஆகியவை ஏற்பட்டு வாழ்க்கையில் நிம்மதியை தொலைத்து விடுகிறோம். எனவே குல தெய்வ வழிபாடு கடன் தொல்லைகளில் இருந்து விடுபட உதவும்.
சனி பகவான்
சனி பகவான் கர்மத்திற்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர். சனிபகவானின் அருள் இருந்தால் கடனில் இருந்து விடுபடுவது எளிதாகும். சனி பகவானின் திருத் தலங்களான திருநள்ளாறு, சென்னையிலுள்ள வடதிருநள்ளாறு, ஆகிய தலங்களுக்கு செல்வதும் கடன் தொல்லையில் இருந்து விமோசனம் கிடைக்கும்.(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ