செவ்வாய் பெயர்ச்சி 2022 ஜூன் மாத ராசி பலன்கள்: கிரகங்களின் தளபதியான செவ்வாய் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாகிறார். ஜூன் 27 அன்று, செவ்வாய் தனது சொந்த ராசியான மேஷத்தில் நுழையவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாளில் செவ்வாயின் ராசி மாற்றம் காலை 06 மணிக்கு நிகழும். ஜோதிடர்களின் கூற்றுப்படி, செவ்வாய் கிரகத்தின் ராசி மாற்றம் மூன்று ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும். செவ்வாயின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 


மிதுனம்:


மிதுன ராசிக்காரர்களுக்கு செவ்வாய்ப் பெயர்ச்சியின் பலனால் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணம் திரும்பக் கிடைக்கும். இந்த நேரத்தில் உங்களது பல முக்கிய பணிகள் நடந்து முடியும். கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். நிதி ரீதியாக நீங்கள் லாபம் ஈட்டலாம். 


கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். கடனை இந்த காலத்தில் திருப்பிச் செலுத்துவீர்கள். முதலீடு செய்வதற்கு சாதகமான காலமாக இது இருக்கும். இந்த காலத்தில் பண வரவு நன்றாக இருக்கும்.


மேலும் படிக்க | சுக்கிரன் ராசி மாற்றம்: இவர்களின் தலைவிதி ஜூலை 13 வரை மாறும் 


கடகம்:


கடக ராசிக்காரர்களுக்கு செவ்வாய் மாற்றம் சாதகமாக அமையும். இந்த நேரத்தில் நீங்கள் நல்ல செய்திகளை பெறுவீர்கள். கடின உழைப்பால் வெற்றி காண்பீர்கள். அரசு வேலைக்குத் தயாராகி வருபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். பணத்தை சேமிப்பதில் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வருமானம் பெருக வாய்ப்புகள் இருக்கும்.


கும்பம்:


கும்ப ராசிக்காரர்கள் தங்கள் தொழிலில் சுப பலன்களைப் பெறலாம். வியாபாரிகள் லாபம் அடைவார்கள். கூட்டுத் தொழிலில் லாபம் கிடைக்கும். வருமானம் கூடும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் முழு ஆதரவும் கிடைக்கும். சொத்து அல்லது வீடு வாங்குவதற்கு சாதகமான காலமாக இது இருக்கும்.


கணவன் / மனைவி, குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தில் நிம்மதியான சூழல் இருக்கும். உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் வந்து சேரும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஜூலையில் சனியின் மாற்றம்: இந்த 3 ராசிகளின் தொல்லைகள் அதிகரிக்கும், பரிகாரம் இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR