போராட்ட குணம் கொண்ட வல்லவர்கள்: நண்பேண்டா என கொண்டாடும் ராசிக்காரர்கள்

கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடுகின்றன. எந்த பாவகத்தில் கிரகங்கள் இணைந்திருக்கின்றன என பலவேறு கணக்கீடுகளின் அடிப்படையில் பலன்கள் கணிக்கப்படுகின்றன

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 21, 2022, 05:40 PM IST
  • சநதிரனுடன் சனி இணைந்தால் மனதில் எப்போதும் சஞ்சலம்
  • ராகுவுடன் சந்திரன் இணைந்தால் மன உளைச்சல் அதிகரிக்கும்
  • ராகுவுடன் புதன் இணைந்தால் மன கிலேசங்கள் அகலும்
போராட்ட குணம் கொண்ட வல்லவர்கள்: நண்பேண்டா என கொண்டாடும் ராசிக்காரர்கள் title=

Conjunction of Planets: ஜாதகத்தின் அடிப்படையில் ஒருவரது இயல்பான குணங்களும் அவர்களின் நடவடிக்கையையும் கணிக்கப்படுகிறது. அதிலும், கிரகங்களின் சேர்க்கையின் அடிப்படையில் பலன்கள் மாறுபடுகின்றன. அதிலும் எந்த பாவகத்தில் கிரகங்கள் இணைந்திருக்கின்றன என பலவேறு கணக்கீடுகளின் அடிப்படையில் ஜாதக பலன்கள் சொல்லப்படுகின்றன.

பொதுவாக சனியின் சேர்க்கை, ஜாதகத்தில் பாவத்துவமாக கருதப்பட்டாலும், சனீஸ்வரர் ஒருவரின் வாழ்க்கையை தீர்மானிப்பவர் என்பதால் சனீஸ்வரரின் சேர்க்கை மிகவும் கவனமாக பார்க்கப்படுகிறது.

செவ்வாயுடன் சனி இணைந்தால், அது, அதன் பாவகத்தின் அடிப்படையில் போராடும் மனநிலையை கொடுக்கும். ஒருவரின் லக்னத்தில் சனியும் செவ்வாயும் சேர்ந்தால் அவர்கள் வல்லவர்களாக இருப்பார்கள். 

மேலும் படிக்க | புதன், சுக்கிரன் சேர்க்கை; இந்த ராசியினருக்கு இன்னும் 4 நாட்களில் ராஜயோகம்

 ஆளுமை தன்மையும் போராட்ட குணமும் அதிகமாக உள்ளவர்களாக இருக்கும் இந்த அமைப்பு உள்ளவர்கள், மாந்தியின் பார்வையும் இருந்தால், குரு பார்வை சேர்ந்து இருந்தால் ஆக்கபபூர்வமாக செயல்படுவார்கள்.

புத்திசாலியாகவும், கற்பதில் வல்லவர்களாக இருக்கும் இவர்கள், விளையாட்டுகளில் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.  அடுத்தவர்களை எளிதில் எடை போடக் கூடியவர்கள் இவர்களிடம் அனுபவ அறிவும் வந்து சேரும். 

போராடி வெற்றி பெறுதலே ஆளுமை தன்மையை உருவாக்குகிறது. ஆனால் மன அழுத்தத்தையும் உருவாக்கும் சனி - செவ்வாய் சேர்க்கையால் இன்னல்களை தொடர்ந்து அனுபவிக்க நேரிடலாம். 

மேலும் படிக்க | ரிஷப ராசிக்குள் நுழையும் சுக்ரன்; குபேரன் ஆகப் போகும் 2 ராசிக்காரர்கள்

அதேபோல, ஒருவரின் ஜாதகத்தில் சந்திரனும் ராகுவும் இணைந்து இருந்தால் மன உலைச்சல் அவரை விட்டு ஒருபோதும் விலகாது. கெடு பலன்களை எண்ணி கற்பனை செய்து கொண்டு பிரச்சனைகளை பூதக்கண்ணாடிக் கொண்டு பார்ப்பார்கள்.  

சந்திரனுடன் ராகு சேர்ந்து இருந்தாலும், மனக்குழப்பத்தை நீக்க வாரஹியை வழிபடவும். அதோடு, ஸ்ரீ வாராஹி அம்மனுக்கு செந்நிற பூக்களை சாற்றுவதும், நெய் விளக்கு ஏற்றுவதும் நன்மை தரும். 

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது பண மழை, வெற்றிவாகை சூடுவார்கள்

அதேபோல, தற்போது வரவிருக்கும் நவராத்திரியில் விரதம் இருந்து அன்னை வாராஹியை வருவது வாழ்வில் நிம்மதியை கொண்டு வந்து சேர்க்கும்.  

அதிலும் மனக்காரன் சந்திரனுடன் ராகு இணைந்தால், பரபரப்பான வேலைகளில் ஈடுபட விரும்புவார்கள். இவர்கள், மனகுழப்பம் நீங்கி வாழ்வில் முன்னேற வாரஹி அம்மனை வழிபடலாம்.

பரபரப்பான வேலைகளில் ஈடுபட விரும்புவார்கள், மனகுழப்பம் நீங்கி வாழ்வில் முன்னேற வாரஹி அம்மனை வழிபடலாம். ராகு புத்தி நடை பெற்றாலும், அன்னை வாராஹியை வணங்கி நிம்மதி அடையலாம்.   

மேலும் படிக்க | புதன், சுக்கிரன் சேர்க்கை; அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News