சனிக்கிழமை பொதுவாக சனி பகவானின் நாளாக கருதப்படுகிறது. அதேபோல் நவகிரகங்களில் எந்தவொரு கிரகத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு சனி பகவானுக்கு உண்டு.  அதன்படி சனிக்கிழமைகளில் சனி பாவானை வழிபாடு செய்தால் நமக்கு சிறப்பு அருள் கிடைக்கும் என்கின்றனர் ஜோடிட வல்லுநர்கள். இது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்க உதவுகிறது. அதே சமயம் சனி பகவான் பூமியைச் சுற்றி வருவதற்கு 30 வருடங்களாகும். ஒரு லக்னத்திலிருந்து இன்னொரு லக்னத்திற்கு செல்ல அதிக காலம் எடுத்துக்கொள்ளும் ஒரே கிரகம் சனியே. மேலும் சனி பகவானின் அருளை பெறுவதற்குரிய சிறந்த விரதம் சனிக்கிழமை விரதம் ஆகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த விரதத்தை மேற்கொள்பவர்கள் சனிக்கிழமையில் வருகிற பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திர தினங்களில் ஏதேனும் ஒன்றில் சனி பகவான் விரதம் மேற்கொள்ள தொடங்கி 21 சனிக்கிழமைகள் இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அதேபோல் சில ராசிக்காரர்கள் சனி பகவானுக்கு மிகவும் பிடித்தமானவர்கள். அந்தவகையில் சனிபகவானின் பார்வை இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் இருக்கும். அவை எந்த ராசிக்காரர்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | தோஷங்கள் அனைத்தையும் நீக்கி, நிம்மதியான வாழ்வைத் தரும் பிரதோஷ வழிபாடு


மகரம்: மகர ராசிக்காரர்களுக்கு அதிபதி சனி பகவான் ஆவார். இந்த அடையாளம் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். சனி பகவானின் சிறப்பு அருள் இந்த ராசிக்காரர்கள் மீது எப்போதும் இருக்கும். இதன் மூலம் மகர ராசிக்காரர்கள் அனைத்திலும் வெற்றி பெறுவார்கள். அவர்களது திருமண வாழ்க்கையும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.


துலாம்: துலாம் ராசிக்காரர்களின் வாழ்வில் சனி பகவானுக்கு தனி அன்பு உண்டு. சனி பகவான் துலாம் ராசியில் சிறந்தவராகக் கருதப்படுகிறார். இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்களின் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் சனி பகவானின் ஆசீர்வாதத்தால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எப்போதுமே சுகபோகங்களுடன் நிறைந்திருக்கும்.


கும்பம் : சனி பகவானின் பாதக அம்சத்தால் சில ராசிக்காரர்களுக்கு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆனால் கும்ப ராசிக்காரர்களின் வாழ்க்கை சனி பகவானின் அருளால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சனியின் இரண்டாம் ராசி கும்பம் ஆகும். அந்த வகையில் இந்த ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருள் எப்போதும் இருக்கும். இந்த ராசி மக்கள் ஒருபோதும் நிதிப் பிரச்சினைகளை எதிர்கொள்ள மாட்டார்கள். அதேபோல் பணத்திற்கு பஞ்சமில்லாமல் இருப்பார்கள், சமுதாயத்தில் மரியாதை எப்போதும் உயர்வாக இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | மூன்று ராசிகளுக்கு அடிக்குது ஜாக்பாட்! கவலை வேண்டாம் கன்னி ராசிக்காரரே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ