பணத்தை அள்ளித்தரும் ‘ஸ்பைடர் செடி’... இது பணம் காய்க்கும் மரம்!
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்கள்: மணி பிளாண்டை விட அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்களில் ஒன்று ஸ்பைடர் செடி. இது வீட்டிற்கு செல்வத்தை அள்ளித் தரும் பண காய்க்கும் மரம் எனலாம்.
அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்கள்: வாஸ்து சாஸ்திரம் வாழ்க்கையின் இன்னல்கள் நீங்க பல தீர்வுகளைத் தருகிறது. வாஸ்து படி, வீட்டில் சில பொருட்கள் அல்லது செடிகள் இருப்பது, பல வகையான குறைபாடுகள் மற்றும் பிரச்சனைகள் விலக உதவிடும். வாஸ்து படி, சில தாவரங்கள் வீட்டிற்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அவற்றை வீட்டில் வைப்பதன் மூலமோ அல்லது நடுவதன் மூலமோ, நேர்மறை ஆற்றல் வீட்டில், பாயத் தொடங்குகிறது, மேலும் வீட்டில் செழிப்பும் வளம் நீக்கமற நிறைந்திருக்கும். இன்று நாம் அத்தகைய ஒரு செடி பற்றி அறிந்து கொள்வோம். அது ஸ்பைட பிளாண்ட் எனப்படும் சிலந்தி செடி. மணி பிளாண்டை விட அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும் தாவரங்களில் ஒன்று ஸ்பைடர் செடி. இது வீட்டிற்கு செல்வத்தை அள்ளித் தரும் பண காய்க்கும் மரம் எனலாம்.
நேர்மறை ஆற்றல்
சிலந்தி செடி பார்ப்பதற்கு சிறியது, ஆனால் மிகவும் கவர்ச்சிகரமானது. வீட்டில் எந்த இடத்திலும் எளிதாக வைத்து வளர்க்கலாம். இதைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவர் நேர்மறை ஆற்றலை உணர்கிறார். இந்த செடியை வீட்டில் அல்லது அலுவலகத்தில் எங்கு வேண்டுமானாலும் வைக்கலாம். பணியிடத்தில் வைத்துக் கொள்வதால் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு லாபம் அதிகரிக்கும். மறுபுறம், இதை வீட்டில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை நீக்குகிறது மற்றும் குடும்பத்தில் அன்பு, நல்லிணக்கம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை அதிகரிக்கிறது. வீட்டில் என்றென்றும் லட்சுமி கடாட்சம் இருக்கும்.
வைக்க வேண்டிய திசை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் வடக்கு, கிழக்கு, வடகிழக்கு அல்லது வடமேற்கு திசையில் இந்த செடிகளை வைப்பது பலனளிக்கும். நீங்கள் அதை வேலை செய்யும் இடத்தில் வைக்க விரும்பினால், அதை மேஜையில் வைப்பது நல்லது. வீட்டின் வரவேற்பறை, சமையலறை, பால்கனி மற்றும் படிக்கும் அறை ஆகியவற்றில் ஸ்பைடர் செடியை வைக்கலாம்.
மேலும் படிக்க | வீட்டிற்கு தரித்திர யோகத்தை கொண்டு வரும் ‘சில’ ஆபத்தான செடிகள்!
வாடிப் போனால் புதிய செடியை நடவும்
ஆனால், தப்பி தவறி கூட சிலந்தி செடியை உலர அனுமதிக்காதீர்கள். சில காரணங்களால், இந்த செடி காய்ந்தால், அதை உடனடியாக அகற்றி, ஒரு புதிய செடியை நட வேண்டும். வீட்டின் தெற்கு மற்றும் மேற்கு திசையில் சிலந்தி செடியை ஒருபோதும் நட வேண்டாம். இந்த திசையில் இந்த செடியை வைத்தால் அசுப பலன்கள் கிடைக்கும்.
ஆரோக்கியம்
ஸ்பைடர் செடி ஆரோக்கியத்தின் அடிப்படையிலும் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. வாஸ்து படி, இந்த செடியை வீட்டில் வைத்திருப்பது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை போக்க உதவுகிறது. அதன் வீட்டின் எதிர்மறை ஆற்றல் வெளியேறுகிறது மற்றும் தீய சக்திகள் அழிக்கப்படுகின்றன.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)
மேலும் படிக்க | நினைத்த காரியம் நிறைவேற வேண்டுமா... அருகம்புல் செடியை ‘இந்த’ திசையில் நடவும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ