குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் பம்பர் லாபம், செல்வம் பெருகும்
Guru Peyarchi in 2023: ஏப்ரல் 22, 2023 அன்று, வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி அதன் நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறது. இதனால் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
குரு பெயர்ச்சி 2023: தேவகுரு வியாழன் அனைத்து கிரகங்களுக்கும் குருவாக கருதப்படுகிறார். ஜோதிட சாஸ்திரத்தில், வியாழன் அதிர்ஷ்டத்தை அளிக்கும் கிரகமாக விவரிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு நல்லபடியாக திருமணம் நடக்க அவரது ஜாதகத்தில் வியாழனின் நிலையும் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில், வியாழன் நிலையில் பல முக்கிய மாற்றங்கள் நிகழவுள்ளன.
பொதுவாக அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் பல வித தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. வியாழனில் ஏற்படும் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். வியாழன் மார்ச் மாதத்தில் அஸ்தமிப்பார். பின்னர் உதயமாவார். மறுபுறம், ஏப்ரல் 22, 2023 அன்று, வியாழன் தனது சொந்த ராசியான மீனத்தை விட்டு வெளியேறி அதன் நட்பு ராசியான மேஷ ராசியில் நுழைகிறது. வியாழனின் இந்த பெயர்ச்சி அனைத்து 12 ராசிகளிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இருப்பினும் 3 ராசிக்காரர்களுக்கு அதிகப்படியான நற்பலன்கள் கிடைக்கும்.
வியாழன் பெயர்ச்சியால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்
மேஷம்:
ஜோதிட சாஸ்திரப்படி குருவின் பெயர்ச்சி மேஷ ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளைத் தரும். தேவகுரு வியாழன் ராசியை மாற்றி மேஷ ராசியில் நுழைவதால், மேஷ ராசிக்காரர்களுக்கு சுப பலன்கள் கிடைக்கும். இந்த நபர்கள் வேலை தொடர்பான சில நல்ல தகவல்களைப் பெறலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க் வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டம் அதிகரிக்கும். உறவினர்களின் உதவி கிடைக்கும்.
மேலும் படிக்க | 15 நாட்களுக்குள் 2 முறை பெயரும் சனீஸ்வரரால் கொள்ளை பணம் சம்பாதிக்கப் போகும் ராசிகள்
மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு வியாழனின் ராசி அதிகப்படியான நற்பலன்களை அள்ளித் தரும். இவர்களின் பொருளாதார நிலையில் நல்ல ஏற்றம் ஏற்படலாம். பெரிய பதவிகளை நீங்கள் பெறக்கூடும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகளும் உண்டாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள மிதுன ராசிக்கார்ரகள் நல்ல லாபத்தைப் பெறலாம். இந்த காலகட்டத்தில் உங்கள் தொழிலையும் நீங்கள் விரிவுபடுத்தலாம்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு தேவகுரு வியாழனின் சஞ்சாரம் அதிர்ஷ்டத்தைத் தரும். கடின உழைப்பின் முழு பலனையும் இந்த வேளையில் பெறுவீர்கள். செயல்களில் வெற்றி உண்டாகும். பெரிய சாதனைகளை இந்த காலத்தில் செய்வீர்கள். நீங்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
பணி இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குழந்தை செல்வத்துக்காக ஏங்கி காத்திருக்கும் சில ராசிக்காரர்களுக்கு புத்திர பாக்கியம் உண்டாகும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் உள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 30 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் சூரியன்-சனி: இந்த ராசிகளுக்கு இது ஜாக்பாட் நேரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ