ரவி புஷ்ய யோகம், ராசிகளில் அதன் தாக்கம்: ஜோதிடத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களில், பூச நட்சத்திரம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. பூச நட்சத்திரம் புஷ்ய நட்சத்திரம் என்றும் அழைக்கபடுகின்றது. பூச நட்சத்திரம் ஞாயிற்றுக்கிழமை வந்தால், அது ரவி புஷ்ய நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. மறுபுறம், பூச நட்சத்திரம் வியாழன் அன்று வந்தால், அது குரு புஷ்ய நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

செப்டம்பர் மாதத்தில் பூச நட்சத்திரம், ஞாயிற்றுக்கிழமையன்று வருகிறது. ஆகையால், இந்த ஞாயிறு, அதாவது 10 செப்டம்பர் 2023 அன்று ரவி புஷ்ய நட்சத்திரம் ஆகும். அன்று ஏகாதசியும் வருகிறது. இதனால் இந்த நாளின் முக்கியத்துவம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நாளில் தங்களை நோக்கி வழிபடுபவர்களுக்கு விஷ்ணு பகவானும் லட்சுமி அன்னையும் கேட்ட வரங்கள் அனைத்தையும் வழங்குவார்கள். ரவி புஷ்ய நட்சத்திரம் தங்கம்-வெள்ளி, புதிய கார், புதிய வீடு, சொத்து போன்றவற்றை வாங்குவதற்கு மிகவும் உகந்ததாக கருதப்படுகிறது. இதனுடன், செப்டம்பர் 10, 2023 அன்று உருவாகும் ரவி புஷ்ய நட்சத்திரம் சில ராசிக்காரர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரவி புஷ்ய நட்சத்திரம் இவர்களுக்கு பெரிய பலன்களை தரும்


ரவி புஷ்ய யோகம் 10 செப்டம்பர் 2023 மாலை 5:06 முதல் செப்டம்பர் 11 காலை 6:15 வரை இருக்கும். இந்த நேரத்தில் 3 ராசிக்காரர்கள் சாதகமான பலன்களை பெறுவார்கள். இவர்கள் நினைத்த காரியங்கள் இந்த நேரத்தில் வெற்றிகரமாக நடந்து முடியும். 


மிதுன ராசி


மிதுன ராசிக்காரர்களுக்கு ரவி புஷ்ய நட்சத்திரம் மிகவும் நன்மை பயக்கும். இவர்கள் மகாவிஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் பணம் பெறுவார்கள். பணம் பெற புதிய வழிகள் அமையும். இந்த நேரத்தில் இவர்கள் ஒரு முக்கியமான முடிவை எடுப்பார்கள், அது பயனுள்ளதாக இருக்கும். இந்த வேளையில் இவர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இந்த யோகம் காரணமாக இவர்கள் செய்யும் அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். 


மேலும் படிக்க | சுக்கிரன் வக்ர பெயர்ச்சி.. இந்த ராசிக்காரர்களுக்கு செல்வம் குவியும்


சிம்ம ராசி


சிம்ம ராசிக்காரர்களுக்கு ரவி புஷ்ய நட்சத்திரம் மிகவும் நன்மை பயக்கும். இவர்கள் செல்வமும் வளமும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிறுத்தப்பட்டிருந்த பணிகள் மீண்டும் துவங்கி விரைந்து முடிக்கப்படும். முதலீடு செய்வதற்கு இது மிகவும் நல்ல நேரம். வாகனங்கள், சொத்துக்கள் வாங்கும் யோகம் இப்போது உருவாகும். அனைத்திலும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறை இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சமுதாயத்தில் மரியாதை கூடும். பணவரவு அதிகரிக்கும்.


துலா ராசி


ரவி புஷ்ய நட்சத்திரம் துலாம் ராசியினருக்கும் அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும். இவர்களுக்கு திடீரென்று எதிர்பாராத இடத்திலிருந்து பணம் வரலாம். உங்கள் நிதி பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உங்கள் கடன் தொல்லை தீரும். தடைபட்ட பணிகள் துவங்கி விரைவில் முடிக்கப்படும். நீங்கள் தொழில் முன்னேற்றம் அடைவீர்கள். மேலும் சில முக்கியமான வாய்ப்புகளை இந்த நேரத்தில் நீங்கள் பெறக்கூடும். உங்களின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நல்ல செய்தி கிடைக்கலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | அமலா ராஜயோகம்... ‘இந்த’ ராசிகளுக்கு பணத் தட்டுப்பாடு என்பதே இருக்காது!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ