ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் கிரகங்களின் ராஜாவாகக் கருதப்படுகிறது, சூரியன் 15 மே 2023 அன்று ரிஷப ராசியில் சஞ்சரித்துள்ளார்.  ஓராண்டுக்குப் பிறகு இந்த ராசியில் சூரிய பகவானின் பெயர்ச்சி ஏற்பட்டுள்ளது, இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சி சாதகமாகவும், சிலருக்கு பாதகமாகவும் இருக்கும்.  சூரியனின் ராசி மாற்றத்தால் புதன், ராகு, வியாழன் ஆகிய கிரகங்களுடனான சூரிய உறவு முறிந்துள்ளது, அதன் காரணமாக பொது வாழ்க்கை, திருமணம் மற்றும் தொழில் போன்ற விஷயங்களில் நேரடி தாக்கம் ஏற்படும்.  சூரியனின் இந்த சஞ்சாரத்தால் தீ விபத்துகளும், விமான விபத்துகளும் ஏற்படும், நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.  ரிஷப ராசியில் சூரியனின் சஞ்சாரம் சர்வதேச அளவில் சில புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு வழிவகுக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | குரு உதயம் பலன் 2023: ஆண்டு முழுக்க இந்த ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகுது


1) மேஷம்: சூரியன் மேஷத்தின் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கப் போகிறார், இந்த சூழ்நிலையில் மேஷ ராசிக்காரர்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவார்கள்.  உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம், பிள்ளைகள் சம்பந்தமாக பிரச்சனைகள் ஏற்படும், பரம்பரை சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும் மற்றும் பொருளாதாரமுன்னேற்றம் ஏற்படும்.


2) ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்கள் சூரியனின் இந்த சஞ்சாரத்தால் எதிர்பாராத பலன்களைப் பெறுவார்கள்.  ரிஷபம் ராசிக்காரர்களுக்கு உடம்பு வலி ஏற்படலாம்.  மத்திய அல்லது மாநில அரசின் துறைகளில் ஏதேனும் பணி நிலுவையில் இருந்தால் அது சரியாகும்.  எந்த வகையான அரசு சேவைக்கும் இந்த காலத்தில் விண்ணப்பித்தால் உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.  திருமணத்திற்கு சிறிது நேரம் எடுக்கலாம்.
 
3) மிதுனம்: பன்னிரண்டாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் செய்வதால் மிதுன ராசிக்காரர்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.  மிதுன ராசிக்காரர்கள் எவ்வளவுதான் கடினமாக உழைத்தாலும் முழுமையான பலனைப் பெற முடியாது.  குடும்பத்தில் மூத்தவர்கள், சகோதரர்கள் ஆகியோருடன் உறவில் விரிசல் ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.  வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் எண்ணம் மேலோங்கும்.


4) கடகம்: கடகத்தின் பதினொன்றாம் வீட்டில் சூரியனின் இந்த சஞ்சாரம் நடக்கப் போகிறது, இது கடக ராசிக்காரர்களுக்கு சிறப்பான வெற்றியைத் தரும்.  நீங்கள் செய்த பணிகளுக்கு பாராட்டு கிடைக்கும், உயர் அதிகாரிகளுடனான உங்கள் உறவு வலுவாக இருக்கும்.  போட்டித் தேர்வுகளில் வரும் மாணவர்கள் நல்ல ,மதிப்பெண்களைப் பெற முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும்.


5) சிம்ம ராசி: சிம்ம ராசிக்கு பத்தாம் வீட்டில் சூரியனின் சஞ்சாரம் நடக்கப் போவதால், உங்கள் வேலை மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் உங்களுக்கு நல்லது நடக்கும்.  பெற்றோரின் உடல் நலனில் அக்கறை இருக்கும், நிலச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும் மற்றும் வாகனம் வாங்க விரும்புவோருக்கு இது சாதகமான நேரமாக இருக்கும்.


6) கன்னி: சூரியனின் இந்த சஞ்சாரம் ஒன்பதாம் வீட்டில் நிகழப் போகிறது, இதனால் கன்னி ராசிக்காரர்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும்.  மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும், அனாதை இல்லங்கள் மற்றும் மத அறக்கட்டளைகளில் சேவை செய்வதில் தீவிரமாக பங்கேற்பார்கள்.  குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கலாம், திருமண பேச்சு வார்த்தைகளும் வெற்றி பெறும்.


7) துலாம்: துலாம் ராசிக்கு எட்டாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார், இதனால துலாம் ராசிக்காரர்களும் கலவையான பலன்களைப் பெறுவார்கள்.  இந்த நேரத்தில் வருமானம் தொடர்பான தடைகளை சந்திக்க வேண்டியிருக்கும், உடல்நிலை குறித்து கவலைப்பட நேரிடும்.  வேலையை முடித்துவிட்டு நேராக வீட்டுக்கு வருவது நல்லது, பரம்பரை சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும்.


8) விருச்சிகம்: விருச்சிக ராசியின் ஏழாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார், இதனால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு அந்தஸ்தும் கௌரவமும் உயரும்.  ஆனால் திருமண வாழ்க்கையில் கசப்பு ஏற்படலாம், கருத்துக்களை பகிர்வதில் கவனம் தேவை.  குடும்ப சூழ்நிலை காரணமாக மன அழுத்தமாக இருக்கும், கூட்டு வியாபாரம் செய்வதை தவிர்க்கவும்.


9) தனுசு: தனுசு ராசியின் ஆறாம் வீட்டில் சூரியனின் இந்தப் பெயர்ச்சி நடக்கப் போகிறது, இதனால் தனுசு ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத பலன்களைத் தரும்.  வெகு நாட்களாக இழுத்துக்கொண்டிருந்த வேலை இப்பொழுது எளிதாக முடிந்துவிடும்.  அரசு வேலைக்கு விண்ணப்பிக்க சாதகமான நேரம் இது.  நீதிமன்றம் தொடர்பான விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக முடிவு வரலாம், பயணம் செய்வதில் கவனம் தேவை.


10) மகரம்: மகர ராசியின் ஐந்தாம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார், இதனால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.  வேலையின் போது, ​​சில இடங்களில் மன அழுத்தம் ஏற்படலாம்.  தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், வருமானம் பெருகும்.  குடும்பத்தில் மூத்த சகோதரர்களுடனான உங்கள் உறவு மோசமடைய நேரிடும்.


11) கும்பம்: கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கப் போகிறார், இதனால் கும்ப ராசியினருக்கு குடும்பத்தில் சண்டை சச்சரவு மற்றும் மனக் குழப்பத்தை ஏற்படுத்தும்.  உறவினர்கள் மூலம் விரும்பத்தகாத செய்திகள் கிடைக்கும்.  தொழில் வியாபாரத்தில் நேரம் சற்று சிறப்பாக இருக்கும், பெற்றோரின் உடல் நலனில் அக்கறை வேண்டும், நிலச் சொத்து சம்பந்தமான பிரச்னைகள் தீரும்.


12) மீனம்: மீன ராசிக்காரர்களின் மூன்றாவது வீட்டில் சூரியனின் இந்த பெயர்ச்சி நடக்கப் போகிறது, இது உங்களுக்கு வெற்றியைத் தரும்.  மதம் மற்றும் ஆன்மீகத்தில் உங்கள் ஆர்வம் அதிகரிக்கும், உங்கள் முடிவுகளும் செயல்களும் பாராட்டப்படும்.  குடும்பத்தில் இளைய சகோதரர்களுடன் கருத்து வேறுபாடுகள் வர நேரிடும் என்பதால் கவனமாக கையாள வேண்டும்.­


மேலும் படிக்க | சனியின் வக்ர பெயர்ச்சி..இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் வைரம் போல் ஜொலிக்கும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ