கும்பத்தில் புத ஆதித்ய ராஜயோகம்... 4 ராசிகளுக்கு ஜாக்பாட் பலன்கள்!
புதன், சூரியனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. புத ஆதித்யா யோகம் சாதகமாக இருந்தால், அந்த ஜாதகர், வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை.
ஜோதிடத்தில், கிரகங்களின் இயக்கங்களை வைத்து, ஒரு ஜாதகரின் வாழ்க்கை பற்றிய கணிப்புகள் கூறப்படுகின்றன. கிரகங்களின் இயக்கத்தை பொறுத்து, சிலருக்கு சாதகமான பலன்களும், சிலருக்கு பாதகமான பலன்களும் உண்டாகின்றன. கிரகங்களின் பெயர்ச்சி காரணமாக, கிரகங்களின் சேர்க்கையும் உண்டாகின்றன. கிரகங்களின் சேர்க்கையினால் பல்வேறு யோகம் உருவாகும். அந்த யோகங்கள் சில சமயம் சுப பலன்களை கொடுக்கக் கூடியதாகவும், சில சமயங்களில் கெடு பலன்களை கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். அந்த வகையில், புதன் பெயர்ச்சி காரணமாக ஏற்பட உள்ள புத ஆதித்ய யோகம் பற்றிய பலன்களை அறிந்து கொள்ளலாம்.
கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரிய பகவான் தற்போது கும்ப ராசியில் வீற்றிருக்கிறார். இந்நிலையில் வரும் பிப்ரவரி 20ஆம் தேதி, புதன் கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகும் புதன், சூரியனுடன் இணைவதால் புத ஆதித்ய யோகம் உருவாகிறது. ஜோதிட சாஸ்திரத்தில், சூரியனும் புதனும் இணைவது மிகவும் மங்களகரமாக கருதப்படுகிறது. புத ஆதித்யா யோகம் சாதகமாக இருந்தால், அந்த ஜாதகர், வாழ்க்கையில் நிதி நெருக்கடியை சந்திக்கும் வாய்ப்புகள் இல்லை என்பது ஜோதிட நம்பிக்கை. அதோடு உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் என்கின்றனர்.
புத ஆதித்ய யோகம், பொதுவாகவே எல்லோருக்குமே ஓரளவு நல்ல பலன்களை தரக்கூடியது தான். ஆனால் குறிப்பிட்ட நான்கு ராசிகள், இதனால் ஜாக்பாட் பலன்களை பெறுவார்கள் என்கின்றனர் ஜோதிடர்கள். அந்த நான்கு ராசிகள் எவை, அவை அடைப்போகும் பலன்கள் என்ன என்பதை விரிவாக காணலாம்.
மேஷ ராசி
மேஷ ராசியினர் புத ஆதித்ய யோகத்தினால், வாழ்க்கையில் வசதி வாய்ப்புகளை பெற்று, ராஜயோக பலன்களை பெறுவார்கள். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு உண்டு. அதேபோல் தொழில் செய்பவர்கள் வியாபாரிகள், மிகுந்த லாபம் அடைவார்கள். வெளிநாட்டில் பணி புரியும் வாய்ப்பு கூட கிடைக்கும். நீண்ட நாளாக, நோய்கள் ஏதேனும் வாட்டி வந்தால், அதிலிருந்து நிவாரணம் பெற்று நிம்மதியான வாழ்க்கையை வாழ வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க | சனி அஸ்தமனம்: இந்த ராசிகளுக்கு அமோகமான ராஜயோகம்... அருள் மழை பொழிவார் சனி
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு புத ஆதித்ய யோகம், வாழ்க்கையில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கிவிடும். வெற்றிகள் கைகூடும். பொருளாதார நிலை முன்பை விட சிறப்பாக இருக்கும். முதலீடுகள் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அலுவலக உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கும், தொழில் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் தீரும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும். எனினும் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க உணவில் கவனம் செலுத்தவும்.
கன்னி ராசி
கன்னி ராசிகளுக்கு புத ஆதித்யா யோகம், வாழ்க்கையில் புதிய தொடக்கத்தை கொடுக்கும். புதிய பொறுப்புகள் மூலம் வாழ்க்கையில் முன்னேற்ற பாதையில் செல்ல தொடங்குவார்கள். பதிவு உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். பணம் நெருக்கடியால் அவதிப்பட்டவர்களுக்கு, பணவரவு மூலம், பிரச்சனை நீங்கும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் ஏதும் இருக்காது.
மகர ராசி
மகர ராசிகளுக்கு புத ஆதித்ய யோகம், அதிர்ஷ்டத்தையும் வாய்ப்புகளையும் வாரி வழங்கும். குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் அதிகரிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் பெருகும். முதலீடுகள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும். நிறைவேறாத ஆசைகள் நிறைவேறும் வாய்ப்பு உண்டு. உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | 30 ஆண்டுக்கு பின் கும்பத்தில் சனி அஸ்தமனம்.. எந்த ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ