சூரிய பெயர்ச்சி 2022: ஜோதிடத்தில் சூரிய பகவானுக்கு தனி இடம் உண்டு. வாழ்க்கையில் வலிமையையும் ஆற்றலையும் கொண்டு வரும் கிரகம் சூரியன். ஆன்மா, தந்தை, மரியாதை, வெற்றி, முன்னேற்றம் மற்றும் அரசு மற்றும் அரசு சாரா துறைகளில் உயர் சேவை ஆகியவற்றின் காரக கிரகமாக சூரியன் கருதப்படுகிறது. ஒவ்வொரு கிரகமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ராசியை மாற்றுகிறது. கிரகங்களின் ராஜா என்று அழைக்கப்படும் சூரியன், 30 நாட்களுக்குப் பிறகு, ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுகிறார். அந்த வகையில் ஆகஸ்ட் 17ம் தேதி, சூரியன் கடக ராசியை விட்டு சிம்ம ராசியில் பிரவேசித்துள்ளார். அதன் தாக்கம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்படுகிறது. சூரியன் தனது சொந்த ராசியான சிம்மத்தில் நுழைந்துள்ளதால், சூரியனின் இந்த பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. சில ராசிகளுக்கு மிகவும் சாதகமானதும் கூட. சூரியனின் பெயர்ச்சியினால் பலனடையப் போகும் ராசிகளை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிம்ம ராசியில் சூரியன் பெயர்ச்சியினால் பலன் பெறும் ராசிகள்:


கடகம்:


கடக ராசிக்காரர்களுக்கு சூரியன் சிம்ம ராசியில் பிரவேசிப்பது மிகவும் அதிர்ஷ்டத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். இந்த நேரத்தில் அவர்கள் எதிர்பாராத பண வரவை பெறுவார்கள். முன்னேற்றத்திற்கான புதிய பாதைகள் திறக்கப்படும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களுக்கு லாபம் கிடைக்கும். நீங்கள் கடந்து வந்த பாதை உங்களுக்கு புதிய வருமான ஆதாரமாக மாறும்.அதே நேரத்தில், வேலை மற்றும் தொழிலுடன் தொடர்புடையவர்கள், எந்த நேரத்திலும் நல்ல செய்திகளைப் பெறலாம். கடக ராசிக்காரர்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவார்கள். நல்லவர்களுடனான உறவுகள் மேம்படும். 


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


துலாம்: 


துலாம் ராசிக்காரர்கள், வேலையுல்  கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவார்கள். அவர்களின் பணி சிறக்கும். அதிகாரம்கைக்கு வரும். பண ஆதாயங்களின் அடிப்படையில் நீங்கள் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு சூரியனின் சஞ்சாரத்தால் லாபம் பன்மடங்கு அதிகரிக்கும். அதிக பணம் சம்பாதிப்பது இந்த ராசிக்காரர்களுக்கு மன உறுதியை அதிகரிக்கும். காதலனுக்கும் காதலிக்கும் இடையே உணர்வுபூர்வமான பிணைப்பு வலுவாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் சில சுப காரியங்களில் ஈடுபடலாம்.


விருச்சிகம்:


விருச்சிக ராசிக்காரர்கள் சூரியனின் சஞ்சாரப் பலன்களால் பெரும் லாபத்தைப் பெறுவார்கள். அவர்கள் தங்கள் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறலாம். புதிய வேலை மற்றும் பதவி உயர்வுக்கான வலுவான வாய்ப்புகள் உள்ளன. திருமண உறவுகள் இனிமையாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தவை. ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ