குலதெய்வத்தை வணக்காமல் , ஆயிரம் தெய்வங்களை வணங்கினாலும் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலைக்காது. எந்த தெய்வத்தை வணங்கினாலும் குலதெய்வம் உத்தரவு இல்லாமல், தெய்வங்களின் பூரண அருள் கிடைக்காது. ஒருவரின் குலதெய்வம் அவருக்கும், அவரது வாரிசுக்களுக்கும் பூரண அருளையும், நல்லதையும் செய்தால் தான் பிற தெய்வங்களின் அருள் சித்திக்கும். அவசர காலத்திலும், இக்கட்டான சூழ்நிலையிலும் , உயிர் காக்கும் சமயத்திலும் , ஓடி வந்து உதவக்கூடிய தெய்வம் குல தெய்வம் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இயல்பான உதாரணத்தின் மூலம் சொல்வது என்றால், அனைத்து தெய்வங்களும் நமது உற்றார் உறவினர் என்றால், குல தெய்வம் என்பது நமது பெற்றோர் என்று வைத்துக் கொள்ளுங்கள். உறவுகளும் நட்பும் இருந்தாலும் இல்லாமல் போனாலும், பெற்றோர் என்றென்றும் பிள்ளைகளின் நலனையே விரும்புவார்கள் அல்லவா? அதேபோலத் தான், தெய்வங்களில் குல தெய்வம் என்பது பெற்றவர்களைப் போன்று அன்பு மிக்கது. 


பெற்றோர், எப்படி இருந்தாலும் குழந்தைகளை காப்பார்கள் தானே? அவர்களிடம் எதுவும் கேட்க வேண்டாமே என்று தோன்றலாம். உண்மை தான் குல தெய்வம் தனது குழந்தைகளின் மீது கருணை மிக்கதாக இருந்தாலும், அழும் பிள்ளையை தொழும் பிள்ளையின் குரல் தாய்க்கு சட்டென்று கேட்பதில்லையா?


அதுபோலத்தான், சரணாகதி அடைந்த குழந்தைகளின் கோரிக்கையை சட்டென்று குலதெய்வம் நிறைவேற்றும். எல்லா காலத்திலும் நாம் கூப்பிட்டாலும் , கூப்பிடா விட்டாலும் , நமக்கு உதவி செய்து நம்மையும், நம் குலத்தினையும் காக்கும் தெய்வமே குலதெய்வம் ஆகும்.


மேலும் படிக்க | இஸ்லாமிய நாட்டில் உருவான பிரம்மாண்டமான கோவில்! ஆலய குடமுழுக்கு விழா     


எனவே நம்மிடமே உள்ள , நமக்கு எப்போதும் உதவ தயாராக இருக்கும் , அவரவர் குலதெய்வத்தை கோவிலுக்குச் சென்று வணங்கி , அதன்பின் அனைத்து இஷ்ட தெய்வத்தையும் வணங்கி , அனைத்து தெய்வங்களின் அருளையும் பெறலாம். எந்த காரியம் செய்தாலும் முதலில் பிள்ளையாரை வழிபட்டுவிட்டுத்தான் செயல்களைத் தொடங்குவோம். அதேபோலத் தான் எந்தத் தெய்வத்தை வணங்குவதாக இருந்தாலும் முதலில் நாம் அனைவரும் வழிபட வேண்டியது குலதெய்வத்தைத்தான் என்று பெரியவர்கள் கூறுகின்றனர்.


குலதெய்வம் என்பது நாம் வணங்கும் தெய்வங்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. மனிதர்களைப் போலவே வாழ்ந்து மறைந்த நம்முடைய முன்னோர்களாகவும், நமது பூர்வீகத்தைச் சேர்ந்தவர்களாகவும் நமது குலதெய்வம் இருக்கலாம்.  உதாரணமாக மதுரை வீரன், கருப்பண்ணசாமி, பத்ரகாளியம்மன், மாசாணியம்மன் என மக்களாய் வாழ்ந்தவர்களும் குல தெய்வமாக வழிபடப்படுகிறார்கள்.


வழக்கமான வழிபாடு என்பது சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் போல என்றால், குலதெய்வ வழிபாடு என்பது நம் வீட்டு விசேஷம் போன்றது என்பதை புரிந்துக் கொண்டால் எந்நாளும் நன்னாளே. வீட்டில் எந்த விசேஷம் நடந்தாலும், குலதெய்வத்திடம் சொல்லி வழிபடுவதை வழக்கமாகக் கொள்வது நல்லது.


குலதெய்வத்துக்கு நேர்த்திக்கடன் இருந்தால், அவற்றை நிலுவையில் வைத்துக் கொள்ள வேண்டாம். அவரவர் குடும்ப வழக்கப்படி, குலதெய்வத்தை வணங்குவது சிறப்பு. சகல பிரச்சினைகளில் இருந்தும் நிவாரணம் தரும் குலதெய்வ வழிபாடு, வாழ்க்கையை நிம்மதியுடன் வாழ அருள் தரும்.


மேலும் படிக்க | திருச்செந்தூர் மாசி விழா: ஒட்டுமொத்த கிராமமே நடைபயணம் செய்து சாமி தரிசனம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ