Benefits of Worshiping Lord Ramar Horoscope at Home : எப்படி வாழ வேண்டும் என்பதற்குச் சிறந்த உதாரணமாக வாழ்ந்தவர் ராமர் என்பது காலம் காலமாக நாம் கேட்டு வரும் செய்தி. அயோத்தியின் ஸ்ரீராமன், இந்த உலகுக்கு உணர்த்தாத பொருளே இல்லை, உரைக்காத உண்மையில்லை என்று சொன்னால் அது மிகையாகாது. சிறப்பான ஆட்சி என்றாலே, ராமராஜ்ஜியம் என்று சொல்லும் அளவுக்கு நிர்வாகத்தில் சிறந்த ஸ்ரீராமர், தந்தை சொல் தட்டாத தனயன். உடன்பிறந்தவர்கள் மீது பாசமான அண்ணன், மக்களுக்கு சிறந்த அரசன் என தனது வாழ்க்கையில் பிறருக்கு ஸ்ரீராமர் ஒரு உதாரண புருஷராக வாழ்ந்தவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வாழும்போதும், வாழ்ந்து வரலாறாய் நூற்றாண்டுகள் கடந்து வாழும்போதும் அனைவரையும் ஈர்க்கும் ஒரு சொல் அயோத்தி ஸ்ரீராமர். அப்படிப்பட்ட ராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜித்தால் கிரக தோஷ பீடைகள் நீங்கும் என்பது ஐதீகம். சகல மங்கலங்களையும், நோயில்லா வாழ்வையும் தீர்க்கமான ஆயுளையும் கொடுக்க ஸ்ரீராமரின் ஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜிக்க வேண்டும்.


ஸ்ரீராம ஜெயம் எனப்படும் ராம நாமத்தை நாம் உச்சரிப்பதன் மூலமும், ஸ்ரீராம ஜெயம் எழுதுவதன் மூலமும் நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும் என்று சொல்லும்போது, அயோத்தியில் மானுடனாய் பிறந்து, தற்போது அங்கு ஆலயத்தில் குடிகொள்ளப்போகும் அவரது ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் கிடைக்கும் நன்மைகள் அளப்பரியவையாக இருக்கும். 


மேலும் படிக்க | நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!


ஸ்ரீ ராமர் ஜாதகத்தில் கிரகங்களின் அமைப்பு
1. குரு , செவ்வாய், சூரியன், சனி,சுக்ரன் என 5 கிரகங்கள் உச்ச நிலை.


2. குருவும் செவ்வாயயும் 1,7 என இருப்பதால் குரு மங்கள யோகம்


3. சந்திர மங்கள யோகம் சந்திரனும் செவ்வாய்யும் 1,7 என இருப்பதால் .


4. குருவும் சந்திரனும் சேர்ந்து இருப்பதால் குரு சந்திர யோகம் 


இந்த நான்கு அம்சங்களும் ஸ்ரீராமருக்கு மன உறுதியை அதிகரித்ததாகவும், அஞ்சாநெஞ்சனாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் தன்மையைக் கொடுத்ததாகச் சொல்வார்கள். பகைவரை வெல்லும் உறுதி வைராக்கியம் இருந்தது. பிடிவாதம் இருந்தது.


5. 6ல் ராகு எதிரிகளை வெல்லும் ஆற்றல்.


6. சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது நுண்கலைகளில் படிப்புகளில் புலமையைத் தரும் புத ஆதித்திய யோகத்தைக் கொடுக்கிரது.


7. 9க்குரிய குருவும் 10க்குரிய செவ்வாயும் நேருக்கு நேராக இருந்து தர்மகர்மாதிபதி யோகம் தருகிறது.


மேலும் படிக்க | உலகின் முதல் போர்டபிள் ஹாஸ்பிடல் ஆரோக்ய மைத்ரி க்யூப்! அயோத்தியில் அறிமுகம்


மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் வைத்து தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும். இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகலவிதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐசுவரிய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் உண்டாகும் என்று பண்டிதர்கள் கூறுகின்றனர்.


ராமனின் மன உறுதி


'ராமன்' என்றாலே தானும் ஆனந்தமாக இருந்து, மற்றவர்களுக்கும் ஆனந்தத்தைத் தருகிறவன் என்று அர்த்தம். எத்தனைவிதமான துக்கங்கள் வந்தபோதிலும் மனத்தைத் தளரவிடாமல், ஆனந்தமாக தர்மத்தையே அனுசரித்துவந்த ஸ்ரீராமர், விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு வாழ்ந்தவர்.


இறைவனாகவே இருந்தாலும், அவன் மனித உருவில் வந்தால் மனிதர்களுக்கு உண்டான இன்ப துன்பங்களை அனுபவித்து தான் ஆகவேண்டும் என்பதைத்தான் ராமாயணம் வலியுறுத்துகிறது.


மேலும் படிக்க | UPI Autopay : ஆட்டோ பேமெண்ட் வரம்பு அதிகரிப்பு... எவ்வளவுன்னு தெரியுமா? இதோ முழு விவரம்..!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ