நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி!

தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என ஆர்.என்.ரவி கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Jan 17, 2024, 12:40 PM IST
  • ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது.
  • காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது.
  • தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது.
நாடு தற்போது ராமர் மயமாகி வருகிறது - ஆளுநர் ஆர்என் ரவி பேட்டி! title=

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என பக்தர்களால் அழைக்கப்படுவது ஶ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயம். இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகிறார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தனது மனைவியுடன் இன்று திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆளுநர் ரங்கநாதர் சந்நிதி, தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் தாயர் சன்னிதி அருகே உள்ள ஸ்ரீ மேட்டழகிய சிங்கர் சன்னதி படிக்கட்டுகளை தனது மனைவியுடன்  நீர் கொண்டு கழுவி சுத்தம் செய்தார். 

மேலும் படிக்க - வானிலை தகவல்களை முன்கூட்டியே தெரிந்து கொள்வது எப்படி? நீங்களும் நிபுணராகலாம்..!

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக ஆளுநர், நம்முடைய வாழ்க்கையில் கோவில்கள் மையமாக அமைந்துள்ளது. ஒரு கிராமம் உருவாவதற்கு முன்பாக அங்கு கோவில்கள் அமைக்கப்படும். அதனை மையப்படுத்தியே அந்த கிராமங்களின் வளர்ச்சி இருக்கும். அந்த வகையில் ஒரு ஈர்ப்பு விசையாக கோவில்கள் உள்ளது. காலனியாதிக்க காலத்தில் அது மழுங்கடிக்கப்பட்டது. தற்போது மீண்டும் நாடு ராமர் மயமாகி வருகிறது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்படுவது நாடு முழுவதும் உள்ள மக்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காரணம் ராம பிரான் ஒவ்வொருவரின் இதயங்களிலும் வாழ்கிறார். கோயில்களை தூய்மையாக பராமரிப்பதில் கோயில் நிர்வாகத்திற்கு  மட்டுமல்ல பக்தர்களுக்கும்  பெரும் பங்கு உண்டு. தூய்மை பணிகளுக்கு பாரத பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருகிறார். கோயில் மட்டுமல்ல பொது இடங்களிலும், தனியார் இடங்களில் தூய்மை பேண வேண்டும் என‌ தெரிவித்தார். 

நேற்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் புகைப்படத்திற்கு ஆளுநர் ஆர்.என். ரவி மலர் தூவி
இருந்தார். மேலும், அதில்,"திருவள்ளுவர் தினத்தில் ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையை  செலுத்துகிறேன். அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனித குலத்துக்கு வழிகாட்டியாகவும்  உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். கடந்த இரண்டு
நாட்களாக ஆளுநரின் செயல்கள் தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் படிக்க | Pongal 2024: டயட்டில் இருப்பவர்கள் இப்படி பொங்கல் செய்து சாப்பிடுங்கள், வேற லெவலில் இருக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News