அமாவாசை நாளில் நிகழும் முழு சூரிய கிரகணம், மறந்தும் இவற்றை செய்து விடாதீர்கள்
Somvati Amavasya 2024: இன்று சோமவார அமாவாசை ஆகும். திங்கட்கிழமை தினத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசை என்று அழைக்கப்படுகிறது. மேலும், இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமும் இன்று நிகழ உள்ளது.
Surya Grahan On Somvati Amavasya 2024 : இன்று சோமவார அமாவாசை ஆகும். திங்கட்கிழமை தினத்தில் வரும் அமாவாசை சோமவார அமாவாசை எனப்படும். மேலும், இந்த ஆண்டின் முதல் முழு சூரிய கிரகணமும் இன்று நிகழப் போகிறது. இருப்பினும், இந்த முழு சூரிய கிரகணமானது இந்தியாவில் தெரியவில்லை. அத்தகைய சூழ்நிலையில், இந்த முழு சூரிய கிரகணத்தால் இந்தியாவில் எந்த பக்க விளைவும் ஏற்படுத்தாது. எனினும் இந்த முழு சூரிய கிரகணம் இந்திய நேரப்படி இரவு 9.12 மணி முதல் அதிகாலை 2.22 மணி வரை நிகழும்.
இன்றைய பஞ்சங்கத்தை அறிந்து கொள்ளுங்கள்:
தேதி: ஏப்ரல் 8
புதன்: திங்கட்கிழமை
திதி: அமாவாசை (பிற்பகல் 11.51 வரை அதன் பின் பிரதிபத திதி)
மாதம் பங்குனி
நட்சத்திரம்: உத்திரட்டாதி (காலை 10.13 மணி வரை பின்பு ரேவதி நட்சத்திரம்)
யோகம்: ஐந்திர யோகம் (மாலை 6.14 மணி வரை அதன்பின் வைதிரிதி யோகம்)
சூரிய உதயம்: காலை 6.02 மணி
மாலை 6.43 வரை சூரிய அஸ்தமனம்
திசை: கிழக்கு
இன்றைய சுப முகூர்த்தம்:
பிரம்ம முகூர்த்தம் அதிகாலை 4.32 மணி முதல் 5.18 மணி வரை. மதியம் 2.30 மணி முதல் 3.20 மணி வரை விஜய முகூர்த்தம். இது தவிர மாலை 6.42 மணி முதல் 7.05 மணி வரை அந்தி நேரம் நீடிக்கும். அதேசமயம் அம்ரித காலம் காலை 6.02 முதல் 7.37 வரை இருக்கும்.
சூரிய கிரகணத்தின் போது செய்ய கூடாதவை:
* கிரகண நேரத்தில் சமையல் செய்ய கூடாது. முக்கியமாக சாப்பிடக்கூடாது.
* தண்ணீர் அருந்தக்கூடாது.
* நகம் கிள்ளக் கூடாது.
* கிரகண கதிர்கள் தாக்காமல் இருக்க உணவுப் பொருட்களில் தர்பையை போட்டு வைக்க வேண்டும்.
* கிரகண நேரத்தின் போது, எதுவும் சாப்பிடக் கூடாது. முன்னதாகவே சாப்பிட்டுக் கொள்ளலாம். * கிரகணம் முடியும் போது, தர்ப்பணம் செய்வது மிகவும் புண்ணியங்களையும் மனோபலத்தையும் தரும்.
* கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
* கிரகணத்தின் போது கர்ப்பிணிப் பெண்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதே நல்லது.
சூரிய கிரகணத்தின் போது என்ன செய்யலாம்:
* கிரகண நேரத்தில், யாகசாலை அமைத்து ஹோமங்கள் செய்வது பலம் தரும்.
* கிரகணத்தின் போது, ஜபம், தியானம் செய்து கொண்டிருக்கலாம்.
* விஷ்ணு சகஸ்ரநாமம், லலிதா சகஸ்ரநாமம், சிவ புராணம் சொல்லாம்.
* அரிசி, நல்லெண்ணெய் முதலானவற்றை தானம் தருவது மிகுந்த பலனையும் புண்ணியத்தையும் தரும்.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | குரு பெயர்ச்சி பலன்கள்: மே 1 முதல் இந்த ராசிகளுக்கு அரசனை போல வாழ்க்கை ஆரம்பிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ